கலம்பகம் (இலக்கியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 6:
கலம்பகம் என்ற சொல் இரண்டு சொற்களின் கூட்டு ஆகும். கலம்பு + அகம் = கலம்பகம் என்றும், கலம் + பகம் = கலம்பகம் என்றும் இந்தச் சொல்லைப் பிரிக்கலாம். பல்வேறு வகையான உறுப்புகள் இந்த இலக்கிய வகையில் அகத்தே - உள்ளே - கலந்து வருவதால் கலம்பகம் என்று அழைக்கப்படுகின்றது. கலம் என்றால் 12 என்று பொருள். பகம் என்றால் பகுதி அல்லது பாதி என்று பொருள். இங்கும் பன்னிரண்டின் பகுதி ஆறு ஆகும். எனவே, 12 + 6 = 18. இந்த இலக்கிய வகையில் 18 உறுப்புகள் கலந்து வருவதால் கலம்பகம் என்று பெயர் பெறுகின்றது எனலாம். பலவகைப் பாடல்கள் ஒருங்கிணைந்து உருவாவதால் இந்தச் சிற்றிலக்கிய வகைக்கு இப் பெயர் ஏற்பட்டது.
== கலம்பகத்தின் அமைப்பு ==
[[பன்னிரு பாட்டியல்]] என்னும் நூல் <ref>14 ஆம் நூற்றாண்டு</ref> இதன் இலக்கணத்தைக் கூறுகிறது. <ref>
<poem>சொல்லிய கலம்பகம் சொல்லின் ஒருபோகு
முதற்கண் வெண்பாக் கலித்துறை புயமே
வரிசை 15:
குறம் அகவல் விருத்தம் என வரும்
செய்யுள் கலந்து உடன் எய்தி அந்தம்
ஆதி யாக வரும் என மொழிப </poem>(பன்னிரு பாட்டியல் 213 - தமிழ் இலக்கண நூல்கள், ச. வே. சுப்பிரமணியன் தொகுப்பு, மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு, 2007, பக்கம் 264)</ref>
 
[[ஒருபோகு]]ம், [[வெண்பா]]வும், முதல் கலியுறுப்பாக முற்கூறப்பெற்றுப் [[புயவகுப்பு]], [[மதங்கம்]], [[அம்மானை]], [[காலம் (கலம்பக உறுப்பு)|காலம்]], [[சம்பிரதம்]], [[கார் (கலம்பக உறுப்பு)|கார்]], [[தவம் (கலம்பக உறுப்பு)|தவம்]], [[குறம்]], [[மறம் (கலம்பக உறுப்பு)|மறம்]], [[பாண் (கலம்பக உறுப்பு)|பாண்]], [[களி (கலம்பக உறுப்பு)|களி]], [[சித்து (கலம்பக உறுப்பு)|சித்து]], [[இரங்கல் (கலம்பக உறுப்பு)|இரங்கல்]], [[கைக்கிளை (கலம்பக உறுப்பு)|கைக்கிளை]], [[தூது (கலம்பக உறுப்பு)|தூது]], [[வண்டு (கலம்பக உறுப்பு)|வண்டு]], [[தழை (கலம்பக உறுப்பு)|தழை]], [[ஊசல் (கலம்பக உறுப்பு)|ஊசல்]] என்னும் பதினெட்டுப் [[யாப்பில் பொருட்கூறு|பொருட் கூற்று உறுப்பு]]க்களும் இயைய, [[மடக்கு]], [[மருட்பா]], [[ஆசிரியப்பா]], [[கலிப்பா]], [[வஞ்சிப்பா]], [[ஆசிரிய விருத்தம்]], [[கலி விருத்தம்]], [[கலித்தாழிசை]], [[வஞ்சி விருத்தம்]], [[வஞ்சித்துறை]], [[வெண்துறை]] என்னும் இவற்றால், இடையே வெண்பா கலித்துறை விரவ [[அந்தாதித் தொடை]]யால் பாடுவது கலம்பகம்.
 
கலம்பகத்திலே பாடப்படுபவரின் சமூகத் தகுதிக்கு ஏற்பப் பாடல்களின் எண்ணிக்கை அமையவேண்டும் எனத் தமிழ் [[யாப்பியல்]] நூல்கள் கூறுகின்றன. இது அதிகபட்சம் 100 பாடல்களிலிருந்து 50 பாடல்கள் வரை இருக்கலாம். எனினும் 100 க்கு அதிகமாகவும், 50 க்குக் குறைவாகவும் உள்ள பாடல்களைக் கொண்ட கலம்பகங்களும் உள்ளன.
 
==கலம்பக இலக்கியங்கள் சில==
வரிசை 43:
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
 
[[பகுப்பு:சிற்றிலக்கிய வகைகள்]]
[[பகுப்பு:கலம்பகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கலம்பகம்_(இலக்கியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது