இரண்டாம் இராசாதிராச சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 10:
==பாண்டியப் போர் ==
 
இரண்டாம் ராசாதிராசனின் காலத்தில் ஆரம்பித்தது பாண்டிய தாயாதிகளின் பகைமை சண்டைகள். தாயாதிகளான [[குலசேகர பாண்டியன்|குலசேகரப் பாண்டியனும்]] [[பராக்கிரம பாண்டியன்|பராக்கிரம பாண்டியனும்]] தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ள ஆரம்பித்தனர்.
 
குலசேகரப் பாண்டியன் சோழனின் உதவியை நாடினான். பராக்கிரம பாண்டியன் [[சிங்களவர்|சிங்களன்]] பராக்கிரம பாகுவின் உதவியை நாடினான். இவ்வாறு இந்த இரண்டு மன்னர்கள் பொருட்டு சோழர்களும் சிங்களர்களும் மோதிக் கொள்ள ஆரம்பித்தனர்.
 
தாயாதி சண்டையினில் பாண்டிய தேசத்தினை ஆண்டுக் கொண்டிருந்த பராக்கிரம பாண்டியனை குலசேகரப் பாண்டியன் முற்றுகை இட்டான். பராக்கிரம பாண்டியன் சிங்கள மன்னனாகிய பராக்கிரம பாகுவின் உதவியை கோரினான். அவனது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சிங்களன், தனது மாதண்ட நாயகனை பெரும் படையுடன் பாண்டிய தேசத்துக்கு அனுப்பித்தான். சிங்களப் படை நுழைவதற்குள் குலசேகரன், பராக்கிரம பாண்டியனையும் அவனது உற்றத்தையும் கொன்று ஆட்சியை கைப்பிடித்தான். இதனை அறிந்த சிங்கள மாதண்டன் மதுரை நகரத்தினுள் நுழைந்து பாண்டிய படைகளை அழித்தான், பராக்கிரமனின் புதல்வனாகிய வீர பாண்டியனை ஆட்சிப் பொறுப்பில் எற்றுவித்தான்.
 
பராக்கிரம பாண்டியனின் ஆட்சியை விரும்பாத பாண்டியர்கள் அவனது மகனாகிய வீரப் பாண்டியனின் ஆட்சியை விரும்பவில்லை. அவர்கள் குலசேகர பாண்டியனையே மன்னனாக்க விரும்பினர், அவர்கள் ஒரு பெரும் படை சேர்த்து வீரப் பாண்டியனை ஆட்சியில் இருந்து அகற்றினர். இதனை உணர்ந்த சிங்கள மாத்தண்டன் உதவிப் படை கோரி சிங்களனிடம் விண்ணப்பித்தான். அதனால், சிங்கள மன்னன் ஜகத்விஜயன் என்ற தண்டனாயகனை சிங்கள மாதண்டனாயகனுக்கு துணை அனுப்பித்தான். இந்த இரண்டு வீரர்களிடம் ஈடுக் கொடுக்க முடியாத குலசேகரன் தனது அரியாசனத்தை இழக்க வேண்டி இருந்தது.
 
===சோழர்களின் நுழைவு===
வரிசை 28:
==சிங்களனின் பாண்டிய உறவு==
 
சோழர்களிடம் வலிமையை இழந்த சிங்களன், தான் பராக்கிரம பாண்டியனிற்கு உதவியதால் தான் இந்த தோல்விகளை அடைய நேர்ந்தது என்பதனை உணர்ந்து, தனது ஆதரவை குலசேகரப் பாண்டியனிற்கு நீட்டினான். தனது புதல்வியை குலசேகரப் பாண்டியனிற்கு திருமணம் முடிப்பித்தான். இதனால் ராசாதிராசன் தனக்கு உதவியதை மறந்த குலசேகரன் சிங்களனின் சொற்படி நடக்க ஆரம்பித்தான். அரண்மனை வாயிலில் தொங்கிக் கொண்டிருந்த சிங்களர்களின் தலைகளை அகற்றி அவர்களுக்கு கல் தூண் நாட்டினான்.
 
இதனை அறிந்த சோழன் குலசேகரன்பால் வெகுண்டெழுந்தான். தனது உதவிகளை மறந்து சிங்களனுடன் தொடர்புக் கொண்ட குலழேகரனை ஆட்சியை விட்டு நீக்குவதற்கு முடிவு செய்தான். இதனையடுத்து அண்ணன் பல்லவராயன் மற்றும் பெருமானம்பிப் பல்லவராயன் தலைமையில் படைகளை அனுப்பினான். அண்ணன் பல்லவராயனின் இளவலான கருணாகரப் பல்லவனும் இப்போரினில் ஈடுபட்டதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பெரும் படைகளோடு சிங்களனையும் பாண்டியனையும் எதிர்த்து சோழர்கள் வெற்றி நடைப் போட்டு பாண்டிய தேசத்தினை முற்றுகை இட்டனர். மிகக் கடுமையாக நிகழ்ந்த போரினால் சிங்களர்கள் தோற்று புறமுதுகிட்டு ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டிற்கே ஓடினர். போரினில் தோற்ற குணசேகரப் பாண்டியனும் ஈழ தேசத்தில் புகலிடமடைந்தான். இதனையடுத்து வீரப்பாண்டியனிற்கே பாண்டிய தேசத்தினைக் கொடுத்து தனக்கு படிந்த மன்னனாக ஆட்சிப் புரிந்து கப்பம் செலுத்தப் பணித்தான் சோழன். இவ்வாறு எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தான் இரண்டாம் ராசாதிராச சோழன்.
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_இராசாதிராச_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது