டையாப்ட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
[[படிமம்:Diopter-tam-wiki.jpg|thumb|இங்கு காட்டப்பட்டிருக்கும் குவிவு வில்லையின் குவியத்தூரம் 25 செ.மீ, ஆகவே இந்த வில்லையின் ஒளி வலு +4 டையாப்ட்டர் ]]
 
'''டையாப்ட்டர்''' (diopter) அல்லது '''தையொத்தர்''' என்பது வில்லை அல்லது வளைந்த கண்ணாடியொன்றின் ஒளியின் வலுவை அளக்கப் பயன்படும் அலகு ஆகும். இதன் பெறுமானம் குவியத்தூரத்தின் தலைகீழ் அளவு மீற்றரில் அளக்கப்படுவதற்குச் சமமானதாகும். டையாப்ட்டரிற்கேன்று ஒரு சுருக்கக் குறியீடு அனைத்துலக முறை அலகுகள் பட்டியலில் சர்வதேச அளவில் இல்லை. [[பெர்டினாண்ட் மோனயர்]] எனும் பிரஞ்சு கண்நோய் நிபுணர் இந்த அலகை 872 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தார். <ref>{{Cite journal|date=1975-09-01|title=Vergence, vision, and geometric optics|url=http://homedirs.wtamu.edu/~dcraig/PHYS4330/1975_vergence_vision.pdf|journal=American Journal of Physics|volume=43|issue=9|pages=766–769|doi=10.1119/1.9703|issn=0002-9505}}</ref>
== பார்வை அளவையியலில் ==
 
குவியமில் குறைபாடுகளான [[கிட்டப்பார்வை|கிட்டப் பார்வை]], [[எட்டப் பார்வை|தூரப் பார்வை]] போன்றவற்றிற்கு கண் வைத்தியரால் எழுதப்படும் மருந்துக்குறிப்பில் டையாப்ட்டர் பயன்படுத்தப்படுகிறது. குழிவு வில்லைகள் "எதிர்" பெறுமானத்தை உடையது, கிட்டப் பார்வையைச் சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது. குவிவு வில்லைகள் "நேர்" பெறுமானத்தை உடையது, தூரப்பார்வையை சரிசெய்யப் பயன்படுகிறது. மிதமான மையோபியா (கிட்டப் பார்வை) கண்ணிற்கான வில்லையின் பெறுமானம் -1.00 இலிருந்து -3.00 வரையாகும், அதேநேரத்தில் தூரப்பார்வைக்கு +1.00 - +3.00 ஆகும்.<ref>A K KHURANA. Comprehensive Ophthalmology. 4th Edition. 2007.</ref>
"https://ta.wikipedia.org/wiki/டையாப்ட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது