ஆட்டுச் சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 5:
 
== ஆட்டை தயார் செய்தல் ==
வெள்ளாட்டு வகையறா ஆடுகள் இந்த சண்டை இனத்தில் சேராது. செம்பறி, குரும்பை ஆட்டினத்தின் சில வகைகள் மட்டும் இதற்கென்றே சிறப்பு கவனத்தில் வளர்க்கப்படுகின்றன. இவற்றை தயார்படுத்தப் படுத்தும் விதமாக ஆடுகளை குட்டியாக இருக்கும்போதே வாங்கி வளர்க்கும்போது, ஆட்டுக் கொம்பின் மூலகுருத்தை விட்டுவிட்டு மேலோட்டைமட்டும் உடைத்து விடுவார்கள். பின் மறுகொம்பு சற்று பெரியதாக வளர்ந்ததும் மீண்டும் உடைத்து எடுப்பார்கள் அதன் கொம்புகளை இவ்வாறு மூன்று முதல் ஐந்து முறை பிடுங்கிவிடுவர்.<ref name="இந்து">{{cite web | url=http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article8092152.ece | title=இளைஞர்களிடையே வேகமாக அதிகரித்து வரும் ‘ஆடு சண்டை’ சூதாட்ட மோகம் | publisher=தி இந்து | accessdate=23 பெப்ரவரி 2016}}</ref> இதன்பிறகு முளைக்கும் கொம்பு பெரியதாகவும் உறுதியாகவும் முரட்டுத்தனமாகவும் இருக்கும். இந்த ஆட்டை உயர் தரமுள்ள உணவைக் கொடுத்து நல்ல வலிமை உள்ளதாக வளர்ப்பர்.
 
== போட்டி விதிமுறைகள் ==
போட்டியில் கலந்து கொள்ளும் ஆடுகளை மோதவிடுவர். அதிகபட்சம் 50 முட்டல்கள் நடக்கும்.<ref name="இந்து"/> மோதலில் ஈடுபடும் ஆடு பின்வாங்கி ஓடிவிட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ தோற்றுவிட்டதாக அறிவிக்கப்படும். 50 முட்டலையும் தாண்டி இரண்டும் சமபலத்துடன் களத்தில் நின்றிருந்தால் அவைகளை நடுவர்கள் பிரித்து சற்று தொலைவாக மைதானத்தின் இரு எதிர்முனைகளுக்கு கொண்டுசென்று விடுவித்து மோத விடுவார்கள். அந்த இறுதி ஒற்றை மோதலில் தடுமாறிய கிடா தோற்றதாக அறிவிக்கப்படும்.<ref>{{cite web | url=https://solvanam.com/2014/11/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/ | title=கிடாச் சண்டை | publisher=சொல்வனம் | work=கட்டுரை | date=2014 நவம்பர் 23 | accessdate=28 சூலை 2018 | author=யா. பிலால் ராஜா}}</ref>
== பழந்தமிழகத்தில் ஆட்டுச் சண்டை ==
[[File:Racka (Fabian).jpg|thumb|படம் ஹங்கேரி நாட்டுத் தகர். தமிழ்நாட்டு தகர் ஆட்டின் முறுக்கிய கொம்பு இப்படித்தான் இருக்கும் ([[அகநானூறு]] - 101)]]
பழந்தமிழகத்தில் ஆட்டுச் சண்டையானது '''தகர்ச்சணை்டை''' என அழைக்கப்பட்டது. தகர் என்பது செம்மறியாடு. செம்மறி ஆட்டுக் கடாக்கள் இரண்டினை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் விளையாடாக இது இருந்தது.
 
விலங்குகளில் ஆணைக் குறிக்க வழங்கப்படும் மரபுச் சொற்களில் ஒன்று தகர் என்னும் சொல். <ref>விலங்குகளில் ஆண்பால் பெயர்கள் - ஏறு, ஏற்றை, ஒருத்தல், களிறு, சே, சேவல், இரலை, கலை, மோத்தை, தகர், உதள், அப்பர், போத்து, கண்டி, கடுவன், பிற (தொல்காப்பியம் 3-546)</ref> இவற்றில் ஆண்-ஆட்டைக் குறிக்கும் செற்களில் ஒன்று தகர். <ref>ஆண் ஆட்டைக் குறிக்கும் சொற்கள் - மோத்தை, தகர், உதள், அப்பர் (தொல்காப்பியம் 3-592)</ref>
 
போரிடும்போது தகர் பின்வாங்கிப் பின்வாங்கித் தாக்கும். <ref>ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர், தாக்கற்குப் பேரும் தகைத்து [[திருக்குறள்]] 486 </ref>
 
தகரின் மலையிலுள்ள கொம்புகள் வேல் நுனி போலக் கூர்மையாக இருக்கும். <ref>வேல் தலை அன்ன வைந் நுதி, நெடுந் தகர் (பெரும்பாணாற்றுப்படை - அடி 87)</ref> அவை முறுக்கிக்கொண்டிருக்கும். <ref>தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு, சுரிந்த சுவல் மாய் பித்தை, செங் கண், மழவர்(அகநானூறு 101)</ref> மலைச்சாரல்களில் வாழும் இவற்றின் ஒர் இனம் '''[[வருடை]]'''. <ref>வரை வாழ் வருடை வன் தலை மாத் தகர் (மலைபடுகடாம் - அடி 503)</ref> <ref>[[மலைபடுகடாம்]] நூலின் [[பாட்டுடைத் தலைவன்]] நன்னன் நாட்டு [[மூணார்|மூணாறு]] பகுதியில் இன்றும் அவற்றைக் காணலாம்.</ref> வருடையாட்டுக் குட்டிகள் யாழிசைக்கு ஏற்ப வயிரியர் மகளிர் துள்ளிக் குதித்து ஆட்டம் காட்டுவது போலத் துள்ளி விளையாடும். <ref>வரை வாழ் வருடைக், கோடு முற்று இளந் தகர்ப் பாடு விறந்து, அயல ஆடு கள வயிரின் இனிய ஆலி, பசும் புற மென் சீர் ஒசிய, விசும்பு உகந்து, இருங் கண் ஆடு அமைத் தயங்க இருக்கும் (அகநானூறு 378)</ref> [[துருவை]] என்னும் வெண்ணிறச் செம்மறி ஆடுகளோடு சேர்ந்து வருடையாடு மேய்வதும் உண்டு. <ref>தகர் விரவு துருவை வெள்ளையொடு விரைஇ, கல்லென் கடத்திடைக் கடலின் இரைக்கும் பல் யாட்டு இனம் நிரை (மலைபடுகடாம் - அடி 414)</ref> '''ஏழகத்தகர்''' என்னும் அதன் இனம் [[நீர்ப்பெயற்று]] என்னும் கீழைக்கடற்கரைத் துறைமுகப் பட்டினத்தில் அக்காலத்தில் [[எகினம்]] <ref>அன்னம்</ref> போலச் சுழன்று விளையாடியது. <ref>நீர்ப்பெயற்று துறைமுகத்தில் ஏழகத் தகரோடு எகினம் கொட்கும் (பெரும்பாணாற்றுப்படை - அடி 326)</ref> இந்த இனம் [[காவிரிப்பூம்பட்டினம்]] கீழைக் கடற்கரைத் துறைமுகப் பகுதியில் [[ஞமலி]] என்னும் வேட்டைநாய்களோடு சேர்ந்து இணக்கமாகத் தகர் விளையாடியது. <ref>கூர் உகிர் ஞமலிக் கொடுந் தாள் ஏற்றை ஏழகத் தகரோடு உகளும் முன்றில் (பட்டினப்பாலை - அடி 141)</ref>
 
போரிடப் பயன்படுத்தப்படும் தகரை '''மேழகத்தகர்''' என்பர். <ref>நினைவுகூர்க - மேழம் என்னும் மேஷ ராசி</ref> காவிரிப்பூம்பட்டினத்தின் உறைக்கிணற்றுப் புறஞ்சேரியில் மேழகத்தகர் விளையாட்டும், சிவல் விளையாட்டும் <ref>ஒப்புநோக்குக - [[சேவல் சண்டை]]</ref> நடந்தன. <ref>உறைக் கிணற்றுப் புறச் சேரி, மேழகத் தகரொடு சிவல் விளையாட[[பட்டினப்பாலை]] - அடி 77</ref>
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/ஆட்டுச்_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது