சமூகச் சூழல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''சமூகச் சூழல்''' (social environment) என்பது, மக்கள் வாழுகின்ற, அல்லது ஏதாவது நடைபெறுகின்ற அல்லது உருவாகின்ற பௌதீக, சமூகப் பின்னணி அமைப்பு ஆகும். இது தனிப்பட்டவர்கள் கற்றுக்கொள்கின்ற அல்லது வாழுகின்ற [[பண்பாடு]], அவர்கள் ஊடாடுகின்ற மக்கள் மற்றும் பிற நிறுவனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.<ref>[http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1446600/pdf/11249033.pdf Elizabeth Barnett, PhD and Michele Casper, PhD, A Definition of “Social Environment”, American Journal of Public Health, March 2001, Vol. 91, No. 3]</ref> தொடர்பாடல் நேரடியானதாகவோ, தொடர்பு ஊடகங்கள் வழியானதாகவோ இருக்கலாம். அடையாளம் காட்டாமலோ, ஒருவழித் தொடர்பாகவோகூட இருக்க முடியும்.<ref>Marjorie Taylor, ''Imaginary Companions'' (1999) p. 147</ref> இது சமமான [[சமூகத் தகுதிநிலை]]யோடு இருக்கவேண்டியது இல்லை. இதனால், சமூகச் சூழல் என்பது சமூக வகுப்பு, சமூக வட்டம் போன்றவற்றிலும் பரந்த கருத்துரு ஆகும்.
 
ஒரே சமூகச் சூழலைச் சேர்ந்த மக்கள் பெரும்பாலும் சமூக ஒருமைப்பாட்டு உணர்வை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம். அவர்கள் பெரும்பாலும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை கொள்வதுடன் உதவியும் செய்துகொள்வர். அத்துடன் அவர்கள் சமூகக் குழுக்களாகக் கூடுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. முடிவுகள் வெவ்வேறாக இருக்கக்கூடும் ஆயினும், அவர்கள் பெரும்பாலும் ஒரே விதமாகவே சிந்திக்கின்றனர்.
வரிசை 5:
== இயற்கையும் செயற்கையும் ==
 
தங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்காக மக்கள் இயற்கை வளங்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால், இயற்கைச் சூழலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. மனிதக் குடியிருப்புக்கள், சாலைகள், தோட்டங்கள், அணைகள், மற்றும் பல இவ்வாறாக உருவாகியுள்ளன. இவ்வாறான மனிதன் உருவாக்கிய கூறுகள் அனைத்தும் பண்பாட்டுச் சூழலில் அடங்குகின்றன. எர்விங் கோஃப்மன் என்பவர் தனிப்பட்ட சூழல்களின் சமூக இயல்பு குறித்துக் குறிப்பாக வலியுறுத்துகின்றார்.<ref>Erving Goffman, ''Relations in Public'' (1972) p. 296</ref>
 
== சமூக அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சமூகச்_சூழல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது