சத்தியாகிரகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 5:
== பெயரின் பிறப்பும், பொருளும் ==
[[படிமம்:Marche_sel.jpg|thumb|250x250px|சத்தியாகிரகத்துக்கு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டான, காந்தி 1930இல் மேற்கொண்ட [[உப்புச் சத்தியாகிரகம்]].]]
[[தென்னாப்பிரிக்கா]]வில் இனவெறி அரசின் சட்டக்களுக்கு எதிராக இனவெறி அவசரச் சட்டத்துக்கு இந்தியர்கள் யாரும் அடிபணியக் கூடாது; அப்படி அடிபணியாததால் கிடைக்கும் எல்லாத் தண்டனைகளையும் மனமுவந்து இந்தியர்கள் அனுபவிக்க வேண்டும் என தென்னாப்பிரிக்காவின் ஜோஹனஸ்பர்க் நகரத்தில் இருந்த இம்பீரியல் அரங்கில் ஒன்றுகூடிய இந்தியர்கள் சத்தியம் செய்தனர்.
 
இந்தப் போராட்ட முறைக்கு காந்தி முதலில் ‘Passive Resistance’ (சாத்வீக எதிர்ப்பு) என்ற பெயரை வைத்திருந்தார். இந்தியர்களின் போராட்டத்துக்கு ஆங்கிலத்தில் பெயர் இருப்பதை காந்தி அசௌகரியமாக உணர்ந்தார். மேலும், அதுவரையில் மேற்குலகில் நடைபெற்ற ‘சாத்வீக எதிர்ப்பு’களுக்கும் காந்தி உருவாக்கிய புதிய போராட்டத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதால் தனது போராட்டத்துக்குப் புதிய பெயர் வைக்க காந்தி நினைத்தார்.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/opinion/columns/article25831124.ece?utm_source=HP&utm_medium=hp-editorial | title=காந்தியின் சத்தியாகிரகம் பிறந்த கதை! | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 திசம்பர் 26 | accessdate=26 திசம்பர் 2018 | author=ஆசை}}</ref>
இதையடுத்து தனது போராட்ட வடிவத்துக்குச் சரியான பெயரைப் பரிந்துரைப்பவர்களுக்குப் பரிசு உண்டென்று [[தென்னாப்பிரிக்கா]]வில் காந்தி தனது ‘இந்தியன் ஒப்பீனியன்’ பத்திரிகையில் 1906இல் அறிவிப்பு கொடுத்தார்.<ref name="Majmudar p38">{{Cite book|author=Uma Majmudar|title=Gandhi's pilgrimage of faith: from darkness to light|url=https://books.google.com/books?id=xM4paHEq5oQC&pg=PA138|year=2005|publisher=SUNY Press|page=138|isbn=9780791464052}}</ref> நிறைய பேரிடமிருந்து பரிந்துரைகள் வந்தன. இறுதியில், காந்தியின் உறவினரின் மகனாகிய மகன்லால் காந்தியின் ‘சதாகிரகம்’ எனும் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டு பரிசளிக்கப்பட்டது. சாதாரண மக்களுக்கு ஏற்றவிதத்தில் அதில் மாற்றம் செய்து ‘சத்தியாகிரகா’ (சத்தியாகிரகம்) என்ற சொல்லை காந்தி உருவாக்கினார். "சத்தியாகிரகம்" என்பது ‘சத்ய+ஆக்ரஹ’ என்ற இரு சமசுகிருத சொற்களின் இணைவு ஆகும். அதற்கு ‘சத்தியத்திலிருந்து அல்லது அகிம்சையிலிருந்து பிறந்த சக்தி’ என்று பொருள்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{வார்ப்புரு:மோகன்தாசு கரம்சந்த் காந்தி}}
 
[[பகுப்பு:காந்தியம்]]
"https://ta.wikipedia.org/wiki/சத்தியாகிரகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது