மெசொப்பொத்தேமியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 63:
சுமேரியர்களின் காலம் முதல் கோயில் மத குருமார்கள் கோள்கள் மற்றும் விண்மீன்களின் அமைவிடத்தை பொருத்து அவர்கள் காலத்தைக் கணித்து வந்தனர். இது அசிரியர் காலம் வரை தொடர்ந்தது. இக்காலத்தில் அசிரியர்கள் [[லிம்மு]] (உயர் அரசு அலுவலரின் பதவியின் பெயர்) எனப்படும் அரசு அலுவலர்களின் பெயரில் ஒவ்வொரு வருடத்திற்குமான பட்டியல் தயரித்தனர். அது மேற்கண்ட முறையில் நடப்பு நிகழ்வுகளுடன் கோள்கள் மற்றும் விண்மீன்களின் நிலையுடன் தொடர்புபடுத்தப்பட்டதாகவே இருந்தது. இம்முறை இன்றும் நடைமுறையில் உள்ளது. இது மிகச் சரியான முறையில் மெசொப்பொத்தேமியாவின் காலக்கணக்கீட்டு முறையில் வரலாற்றைத் துல்லியமாகக் கணக்கிட உதவுகிறது.
 
அவர்கள் ஒரு வருடத்திற்க்கானவருடத்திற்கான நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்தனர். கணிதத்தில் திறமை வாய்ந்தவர்களாக இருந்ததால் அவர்களால் சூரிய,சந்திர கிரகணங்களை முன்கூட்டியே கணிக்க முடிந்தது. வானவியல் அறிஞர்கள் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஏதேனும் ஒரு காரணம் உண்டென்று நம்பினர். இது மதம் மற்றும் சடங்குகளுடன் தொடர்புடையதாகவே இருந்தது. அவர்கள் சந்திரனின் பயணத்தைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில் 12 மாதங்களைக் கொண்ட நாட்காட்டியைப் பயன்படுத்தினர். கோடை மற்றும் குளிர் காலம் என இரண்டு பருவங்களாக ஓர் ஆண்டின் பருவங்களைப் பகுத்திருந்தனர். இக்காலத்திலிருந்து தான் வானவியல் என்ற ஒன்று தோற்றம் பெற்றது.
 
கி.மு. 8 மற்றும் 7 வது நூற்றாண்டுகளில் பாபிலோனிய வானியலில் ஒரு புதிய அணுகுமுறை உருவாக்கப்பட்டது. பாபிலோனிய வானவியல் அறிஞர்களால் பிரபஞ்சத்தின் இயற்கை இயல்புகளைத் தத்துவங்களோடும் கோள்களோடும் தொடர்புபடுத்தி புதிய வானியல் கொள்கைகள் உருவாக்கப்பட்டு அவை பயிற்றுவிக்கப்பட்டன. இது வானியல் தத்துவத்திற்கான ஒரு முக்கியமான பங்களிப்பாகும். இவர்களின் இப்பங்களிப்பு 'விஞ்ஞானப் புரட்சி' எனக் குறிப்பிடப்படுகிறது.<ref name=Brown>D. Brown (2000), ''Mesopotamian Planetary Astronomy-Astrology'', Styx Publications, {{ISBN|90-5693-036-2}}.</ref> இப்புதிய முறையிலான வானியலை கிரேக்கர்களும் பின்பற்றி அதனை மேம்படுத்தினர்.
"https://ta.wikipedia.org/wiki/மெசொப்பொத்தேமியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது