புலவர் கால மன்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 726:
{| class="wikitable"
|-
| ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் || - || போந்தை, கானலம்பெருந்துறை, வானவரம்பன், நறவு ஊர், || ''பதிற்றுப்பத்து'' 6 ஆம் பத்து - கூற்றம் வலை வித்தது போலப் போந்தை(பனம்பூ) சூடிய படை உடையவன் (51), மனைவி மக்களை விட்டுவிட்டு வங்கக் கப்பல் கடலில் திரிவது போலப் போர்க்களத்திலேயே திரிந்தான் (52), ''பகைவரை வென்று கொண்டுவந்த பொருள்கள் உன் முன்னோர் உன் கோட்டையில் மிகுதியாக உள்ளன. இன்னும் கொண்டுவந்து எங்கே வைப்பாய். எனவே, போர்க்கோட்பாட்டை மாற்றிக்கொள்க'' எனப் புலவர் இவனுக்கு அறிவுரை கூறுகிறார் (53), விறலியர் பாட மனைவியோடு மகிழ்ந்திரு - என்கிறார் புலவர் (54), '''இரவலர் வராவிட்டால் தேரில் சென்று தேடி அழைத்துவந்து பரிசில் நல்குவான்.''' பரிசிலர்க்கு வழங்குவதற்க்கெனவழங்குவதற்கென இவனது கானலம்பெருந்துறைப் பகுதியில் பொருள்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன (55), ஊர்த் திருவிழாவில் கோடியர்(யாழிசைப் பாணர்) ஆடுவது போல இவன் போர்களத்தில் வெற்றி முழக்கத்துடன் ஆடுவான். (56) மனைவியின் ஊடல் கண்ணுக்கு அஞ்சுவதை விட இரவலரின் வாடும் கண்களுக்குப் பெரிதும் அஞ்சுவான். அத்தகைய கொடையாளி (57), வானவரம்பன் எனப் போற்றப்பட்டான் (58), போர் வீரர்களாகிய ''சான்றோர் மெய்ம்மறை'' (மெய்ம்மறை என்பது கவசம்) (58), ''வில்லோர் மெய்ம்மறை'' (59), நறவு என்பது இவன் நாட்டுத் தலைநகரம். இது '''துவ்வா நறவு''' எனப் போற்றப்பட்டது. (60)
|-
| || || குடக்கோ நெடுஞ்சேரலாதன், பதுமன், தண்டாரணியம், தொண்டி, மழவர், || ''பதிகம்'' - குடக்கோ நெடுஞ்சேரலாதன் இவனது தந்தை. வேள் ஆவிக் கோமான் பதுமன் தேவி(மகள்) இவனது தாய். தண்டாரணியம் (தெக்கணப் பீடபூமி) காட்டில் பிடிபட்ட வருடை ஆடுகளைத் தொண்டி நகருக்குக் கொண்டுவந்து பார்ப்பார்க்குக் கபிலையாக(பசுவாக) வழங்கினான். குடநாட்டில் ஓர் ஊரையும் பார்ப்பார்க்குக் கொடுத்தான். இந்தக் கொடையால் இவன் '''வானவரம்பன்''' என்னும் பெநரைப் பெற்றான். மழவரோடு போரிட்டு வென்றான். எதிர்த்த மன்னர்களை வென்றான். தன்னைப் பாடிய பெண் புலவர் நச்செள்ளையாருக்கு அணிகலன்கள் செய்துகொள்வதற்காக ஒன்பது கா நிறையளவு பொன் கொடுத்தான். அத்துடன் 100 ஆயிரம் காணம் பணமும் கொடுத்து அவைக்களத்தில் வைத்துக்கொண்டான். (அவைக்களப் புலவர்). 38 ஆண்டு அரசாண்டான்.
"https://ta.wikipedia.org/wiki/புலவர்_கால_மன்னர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது