காந்தி ஜெயந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 20:
[[படிமம்:Compact Charkha.jpg|thumb|250px|திரு [[ரா. கிருஷ்ணசாமி நாயுடு]] அவர்கள் பயன்படுத்திய பெட்டிராட்டை]]
1969 அக்டோபர் 2 அன்று [[திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்|திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்]] நடைபெற்ற காந்திஜி நூற்றாண்டு விழா நூற்பு வேள்வி -[[ரா. கிருஷ்ணசாமி நாயுடு]]- '''<--'''பங்குபெற்ற நிகழ்வு.
==கொண்டாட்டம்==
காந்தி ஜெயந்தி ஆண்டுதோறும் அக்டோபர் 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தேசிய விடுமுறை நாட்களில் ஒன்றாகும், இது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|யூனியன் பிரதேசங்களிலும்]] அனுசரிக்கப்படுகிறது.
 
காந்தி ஜெயந்தி அன்று [[புது தில்லி|புது தில்லியில்]] காந்தி தகனம் செய்யப்பட்ட நினைவு இல்லமான ராஜ் காட் உட்பட இந்தியா முழுவதும் பிரார்த்தனைகள், சேவைகள் மற்றும் அஞ்சலிகள் ஆகியவை நடத்தப்படுகிறது. கல்லூரிகள், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் சமூக-அரசியல் நிறுவனங்கள் வெவ்வேறு நகரங்களில் நினைவு விழாக்கள் மற்றும் பிரார்த்தனைக் கூட்டங்கள் போன்றவைகள் பிரபலமான நடவடிக்கைகளில் அடங்கும். ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகின்றன மற்றும் பள்ளிகளிலும் சமூகத்திலும் அகிம்சை வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதோடு [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்கத்தில்]] காந்தியின் முயற்சியைக் கொண்டாடுவதற்கும் சிறந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.<ref>{{cite web|url=http://www.gandhijayanti.com |title=Gandhi Jayanti |publisher=Simon Fraser University |accessdate=15 April 2006}}</ref> காந்தியின் விருப்பமான ''[[பஜனைகள்]] (இந்து பக்திப் பாடல்), ''[[ரகுபதி ராகவ ராஜாராம் (பாடல்)]]'' பொதுவாக அவரது நினைவாக பாடப்படுகிறது. <ref>{{cite news | url=http://www.hindu.com/2005/10/03/stories/2005100311220300.htm | title=Several programmes mark Gandhi Jayanti celebrations in Mysore | work=[[தி இந்து]] | accessdate=16 November 2006}}</ref> நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் சிலைகள் பூக்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்படும். மேலும் சிலர் அன்றைய தினம் மது அருந்துவதையோ அல்லது இறைச்சி சாப்பிடுவதையோ தவிர்க்கிறார்கள். அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் .<ref name=TimeandDate>{{cite web |url=https://www.timeanddate.com/holidays/india/mahatma-gandhi-jayanti |title=Mahatma Gandhi Jayanti in India |publisher=Time and Date |accessdate=1 October 2017}}</ref>
 
==காந்தி ஜி 150 வது ஆண்டுவிழா நிகழ்வுகள்==
 
மகாத்மா காந்தியின் 150 வது ஆண்டில் அவரது பிறந்த நாளைக் கொண்டாடுவது வரலாற்றை உருவாக்குவது போல அவருக்கு வேறு வகையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மத்திய இரயில்வே மண்டலம் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த ஆண்டை மூவர்ண்ணத்தின் பின்னணியில் மகாத்மா காந்தியின் படத்துடன் டீசல் என்ஜின்களை வரைந்து கொண்டாடியது.<ref name=www.livemint.com>{{cite web |url= https://www.livemint.com/news/india/indian-railways-pays-unique-tribute-to-mahatma-gandhi-on-his-150th-birth-anniversary-year-1569406782888.html |title=indian-railways-pays-unique-tribute-to-mahatma-gandhi-on-his-150th-birth-anniversary-year |publisher=www.livemint.com |accessdate=9 October 2019}}</ref>
 
காந்தி ஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நமது மதிப்புமிகு பிரதமர் அவரது 150 வது பிறந்தநாளில் ₹ 150 க்கான நாணயத்தை வெளியிட்டுள்ளார்.<ref name=www.indiatoday.in>{{cite web |url= https://www.indiatoday.in/india/story/gandhi-jayanti-150th-birth-anniversary-of-mahatma-gandhi-live-updates-1605351-2019-10-02 |title=PM Modi releases commemorative Rs 150 coins on Mahatma Gandhi's birth anniversary |publisher=www.indiatoday.in |accessdate=9 October 2019}}</ref> காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் ராஜ்காட்டில் அஞ்சலி செலுத்தினர். மகாத்மா காந்தியின் பார்வையை முன்னெடுக்க காங்கிரஸ் தொழிலாளர்கள் கூட்டாக உறுதிமொழி எடுத்தனர். இதற்கிடையில், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா கட்சியின் நாடு தழுவிய காந்தி சங்கல்ப் யாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாலையில், குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு பிரதமர் மோடி 10,000 சர்பஞ்ச்களுக்கிடையே உரையாற்றினார். இந்தியாவை 'திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத தேசம்' என்றும், ஸ்வச் பாரத் மிஷனின் வெற்றி என்றும் அறிவித்து, பிளாஸ்டிக்கிற்கு எதிரான போரைத் தொடங்கினார்.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
வரி 28 ⟶ 37:
 
{{மோகன்தாசு கரம்சந்த் காந்தி}}
 
[[பகுப்பு:இந்தியாவின் சிறப்பு நாட்கள்]]
[[பகுப்பு:இந்திய தேசிய தினங்கள்]]
[[பகுப்பு:அக்டோபர் சிறப்பு நாட்கள்]]
[[பகுப்பு:பிறந்த நாட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/காந்தி_ஜெயந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது