துரியோதனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
 
துரியோதனனது உடல் மின்னலாலானது என்று சொல்லப்படுகிறது. தனது சகோதரர்களால், குறிப்பாக [[துச்சாதனன்|துச்சாதனனால்]] பெரிதும் மதிக்கப்பட்டான். அவன் தனது [[குரு]]க்கள் [[கிருபர்]], மற்றும் [[துரோணர்|துரோணரிடம்]] போர்ப்பயிற்சி பெற்றான். கதாயுத்தத்தில் நிபுணத்துவம் பெற [[பலராமர்|பலராமரிடம்]] சீடனாக இருந்து நற்பெயர் பெற்று, அவனுக்குப் பிரியமான சீடனாக இருந்தான். கதாயுதத்துடன் கூடிய துரியோதனன் பீமனுக்கு நிகராக இருந்தான். [[கர்ணன்]], துரியோதனனின் உற்ற நண்பன்.
 
== கர்ணனுடனான உறவு ==
ஒரு கட்டத்தில் மகாபாரதத்தில் [[கௌரவர்|கெளரவ]] மற்றும் [[பாண்டவர் |பாண்டவ]] இளவரசர்கள் தங்கள் திறமைகளை பெரியோர்கள், குரு துரோணர் மற்றும் பேரரசின் மக்கள் ஆகியோருக்கு முன் வெளிக்காட்டும் நிகழ்வொன்றில் துரோணரால் சிறந்த இளவரசன் என்று கருதப்பட்ட அருச்சுணனுக்கு சவால் விடும் திறமைகளை கர்ணன் கொண்டிருந்ததை துரியோதனன் உற்றுநோக்குகிறான். இந்த சமயத்தில் கிருபாச்சாரியார் கர்ணன் அரசகுலத்தைச் சேர்ந்தவன் அல்ல என்பதால் இந்த நிகழ்வில் மற்ற இளவரசர்களுடன் அவன் போட்டி போட முடியாது என்று தடுக்கிறார். கர்ணன் ஒரு சத்திரியனாக பிறக்கவில்லையே என்று மனம் கவலையுற்று, அவமானப்பட்டு தலை கவிழ்கிறான்.
 
அவையில் அந்த நேரத்தில் துரியோதனன் கர்ணனை ஆதரிக்கிறான். சத்ரியனாக இருப்பதென்பது பிறப்பால் அல்ல செயல்களாலேயே வரையறுக்கப்படுகிறது என்று வாதிடுகிறான். திருதராட்டிரனால் அவனுக்கு அளிக்கப்பட்ட வரத்தைக் கொண்டு கர்ணனை அங்கத அரசின் மன்னனாக்குகிறான். இதன் காரணமாக கர்ணனை அருச்சுணனுக்கு சமமாக துரியோதனன் ஆக்குகிறான். கர்ணன் தனது நட்பையும், கூட்டணியையும் என்றும் கர்ணனுக்கே அளிப்பதாக உறுதி பூணுகிறான். அவையில் உள்ள யாருக்கும் கர்ணன் குந்திக்கும் பாண்டுவிற்கும் திருமணம் நடந்ததற்கு முன்னதாக சூரியனால் குந்திக்கு அருளப்பட்ட குழந்தை தான் என்பது தெரியாது.
 
[[குருச்சேத்திரப் போர் குருச்சேத்திரப் போரில்]], போரின் 15 ஆம் நாள் முதல் கர்ணன் துரியோதனின் மிகப்பெரிய படைத்தளபதியாவான். துரியோதனன் கர்ணன் அருச்சுணனை விடத் திறமையில் உயர்ந்தவன் என்பதை உறுதிபட நம்பினான். அருச்சுணனையும் அவனது நான்கு சகோதரர்களையும் கர்ணன் வெல்வான் என்பதைம் நமபினான். கர்ணன் போரில் கொல்லப்பட்டதற்கு துரியோதனன் மிகவும் வருந்தினான். தனது சொந்த சகோதரர்களின் இழப்பை விட இந்த இழப்பு அவனை ஆறுதல் கூற இயலாத சோகத்தில் ஆழ்த்தியது. கர்ணன் யாரென்ற உண்மை தெரிந்த போது கர்ணன் மீதான அன்பு வளர்ந்ததே ஒழிய குறையவில்லை. கர்ணனுக்கான இறுதிச் சடங்குகள் செய்யும் உரிமையை பாண்டவர்களைக் காட்டிலும் கர்ணனோடு நெருக்கமாகவும், உண்மையாகவும் இருந்த கர்ணனுக்கே கண்ணன் வழங்கினார்.
 
==குடும்பம்==
"https://ta.wikipedia.org/wiki/துரியோதனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது