புல்வாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: வாரம் - link(s) தொடுப்புகள் கிழமை உக்கு மாற்றப்பட்டன
வரிசை 28:
 
== வியத்திவரலாறும் இனப்பெருக்கமும் ==
இருபாலும் தன்னுடைய 1.5 முதல் 2 ஆண்டுகளில் பருவமடைகின்றன. ஆண்டு முழுவதும் [[இனப்பெருக்கம்]] நடந்தாலும் [[மார்ச்சு]] முதல் [[மே]] வரையிலும் [[ஆகஸ்டு]] முதல் [[அக்டோபர்]] வரையிலும் மிக கூடுதலான இனப்பெருக்கங்கள் நடக்கின்றன<ref>Schaller, G. B. 1967. The deer and the tiger. The University of Chicago Press, Chicago. Pp. 370.</ref>. இனப்பெருக்க காலத்தில் ஆண்கள் தங்களுக்கென்று ஒரு எல்லையை வகுத்திருக்கும். சராசரியாக ஒரு ஆணின் எல்லை 1 முதல் 17 [[எக்டயார்|ஹெக்டர்]] வரையிலும் இருக்கும்<ref>Isvaran, K. 2003. The evolution of lekking: Insights from a species with a flexible mating system. Ph.D. Dissertation, University of Florida, Gainesville.</ref><ref>Mungall, E. C. 1978. The Indian Blackbuck Antelope: A Texas View. Kleberg Studies in Natural Resources, College Station, Texas, USA.</ref><ref>Prasad, N. L. N. S. 1981. Home range, dispersal, and movement of blackbuck (Antilope cervicapra) population in relation to seasonal change in Mudmal and environs. Ph. D. dissertation, Dept. of Biosciences, Saurashtra University, Rajkot, India.</ref>. ஆண் தன்னுடைய எல்லையில் அதிக எண்ணிக்கையிலான புல்வாய்களை அதிக காலம் வைத்திருக்கும். ஆண் தன்னுடைய எல்லையை 2 [[கிழமை|வாரம்]] முதல் 8 [[மாதம்]] வரை பாதுகாக்கும். இவை தங்களுடைய எல்லைகளை சிறுநீர், மலம், ஒரு வகையான தூண்டுசுரப்பை மூலம் குறித்து வைத்துக்கொண்டு<ref>Isvaran, K. and Jhala, Y. V. 2000. Variation in lekking costs in blackbuck (Antilope cervicapra): relationship to lek-territory location and female mating patterns. Behaviour 137, 547-563.</ref>, அந்த எல்லையைச் சுற்றிச் சுற்றி வரும். அப்பொழுது வேறொரு ஆண் தன் எல்லையில் நுழைந்தாலோ வேறு வகையான எல்லைச் சிக்கல்கள் வரும்பொழுதோ, தன்னுடைய தோற்றத்தை வைத்தும் எச்சரிக்கை சைகைகள் எழுப்பியும் எல்லையைப் பாதுகாக்கும். மிகவும் அரிதாகக் கொம்புகளைக் கொண்டு முட்டி மோதி சண்டைகள் நடக்கும். இதன் சராசரி ஆயுட்காலம் சுமார் 10-12 ஆண்டுகள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. புல்வாய்கள் ஒரு ஆணின் எல்லையில் நுழையும் முன்பு அங்கிருக்கும் சிறுநீர், மலத்தை தூண்டுசுரப்பை நுகர்ந்து அந்த எல்லைக்குள் செல்வது குறித்து முடிவு செய்யும்.
 
இவ்விலங்கின் சூல்கொள்ளல் காலம் (பேறுகாலம்) 5 மாதங்கள் ஆகும். தாய் பேறுகாலத்திற்கு பிறகு ஒரு குட்டியை ஈன்றெடுக்கும். குட்டி ஈன்ற இரண்டு வாரங்களில் தாய் அடுத்த சினைக்குத் தயாராகும். ஈன்ற குட்டியை தாய் புற்களால் ஆன படுக்கையில் படுக்கவைத்திருக்கும். மேலும் ஒரு மாதத்திற்கு மிக தொலைவான இடங்களுக்கு குட்டியை அழைத்துச் செல்லாது. ஆண் புல்வாய்கள் குட்டிகளின் பராமரிப்பில் ஈடுபடா.
"https://ta.wikipedia.org/wiki/புல்வாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது