சுர்சித் சிங் பர்னாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: பஞ்சாப் - link(s) தொடுப்புகள் பஞ்சாப் (இந்தியா) உக்கு மாற்றப்பட்டன
வரிசை 34:
சுர்சித் சிங், [[ஹரியானா]] மாநிலத்திலுள்ள அடேலி பேக்பூரில் பிறந்தார். பள்ளிப் படிப்பை நாபாவில் முடித்தவுடன் உயர் கல்வி கற்க [[லக்னோ]] சென்று லக்னோ பல்கலைக்கழகத்தில் [[1946]] ஆம் ஆண்டு சட்டம் பயின்று தேறினார். அவர் [[1942]] ஆம் ஆண்டு லக்னோவில் இருந்தபோது ''[[வெள்ளையனே வெளியேறு]]'' இயக்கத்தில் கலந்து கொண்டார். 1967 ம் ஆண்டு [[பர்னாலா]]வில் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றினார். அதே ஆண்டு பர்னாலா தொகுதியிலிருந்து சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
இந்தத் தொகுதி உறுப்பினராக [[1999]] ஆம் ஆண்டு வரை இருந்தார். [[1969]] ஆம் ஆண்டு [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]] மாநில கல்வி அமைச்சரானார். அமிர்தசரஸிலிருக்கும் குரு நானக் தேவ் பல்கலைக்கழகம் அமைந்ததில் இவருடைய சேவை குறிப்பிடத்தக்கது. [[1977]] ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராகி [[மொரார்ஜி தேசாய்]] தலைமையில் விவசாயம் மற்றும் உணவுத்துறை அமைச்சரானார். [[1985]] ஆம் ஆண்டு [[சிரோமணி அகாலி தளம்|சிரோமணி அகாலி தள் கட்சி]] தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பஞ்சாப் மாநில முதல்வரானார்.பஞ்சாப் மாநிலத்தில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் முதலமைச்சர் பதவி வகித்தவர் பர்னாலா (29.9.1985 - 11.6.1987). பொற்கோவிலில் நடந்த ‘நீல நட்சத்திர நடவடிக்கை’ என்ற ராணுவத் தாக்குதலால் சீக்கியர்கள் மன நிம்மதி இழந்திருந்த நாட்கள் அவை. தங்களின் முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்ற பஞ்சாபியர்களின் கோபமும் வருத்தமும் மேலும் அதனுடன் சேர்ந்துகொண்டது. மிகவும் கொந்தளிப்பான காலகட்டம் என்றால் அது மிகையில்லை.
 
சிரோமணி அகாலி தளம் கட்சியில் குருசரண் சிங் டோரா, பிரகாஷ் சிங் பாதல் ஆகியோருடன் மூன்றாவது பெரும் தலைவராகக் கருதப்பட்டவர் சுர்ஜித் சிங்.
"https://ta.wikipedia.org/wiki/சுர்சித்_சிங்_பர்னாலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது