ஆய்த எழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 108:
ஆய்தத்தின் வடிவமாக முப்பாற்புள்ளியைத் தொல்காப்பியர் குறித்துள்ளார். இன்று எழுதப்படுவது போன்று ஆய்தம் அன்றும் எழுதப்பட்டது என்று கூறுவது ஐயத்திற்கிடமாக உள்ளது. அசோகர் காலத்தில் இன்றைய ஆய்தப் புள்ளிகள் இகரமாகப் படிக்கப்பட்டதாக கோபிநாத் ராவ் கூறுகிறார்.<ref>இரா.கிருட்டிணமூர்த்தி, சேரநாட்டில் தமிழ் வட்டெழுத்து ப-53, 1982, முதற்பதிப்பு</ref> ஆய்தத்தின் வடிவம் பிற்காலத்து வழக்கென்றும், நச்சினார்க்கினியர் காலத்தில் நடுவு வாங்கி எழுதும் வழக்கம் இருந்ததென்றும் மு.இராகவையங்கார் கருதுகிறார் <ref>இரா.கிருட்டிணமூர்த்தி, சேரநாட்டில் தமிழ் வட்டெழுத்து ப-52, 1982, முதற்பதிப்பு</ref>. எனவே, தொல்காப்பியர் காலத்து ஆய்தப் புள்ளிகள் எவ்வாறு அமைந்து அதை மக்கள் எழுதினர் என்று அறிய முடியவில்லை, அவை படுக்கை நிலையிலோ அல்லது நின்ற நிலையிலோ ஒன்றன் பின் ஒன்றாக அமைந்து ஆய்தத்தை அறிவுறுத்தியிருக்கலாம்.
 
எட்டாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் காலத்ததாக அமைந்த காச குடிப்பட்டயத்துள் வெஃகா என்ற சொல் வருமிடத்து மேலும் கிழூம்கீழும் புள்ளிகளும், இவற்றிடையே வளைந்த கோடுமுடைய ஆய்த வடிவம் கிடைக்கிறது.<ref>மு.இராகவையங்கார், ஆராய்ச்சித்தொகுதி, ப-130, 1964, பாரிநிலையம், இரண்டாம் பதிப்பு</ref>
 
ஒலிப்புக் குறைவை உணர்த்த எகர ஒகரங்கள் புள்ளி பெற்றது போல வைப்பு முறையில் ஆய்தத்திற்கு முன்னாக வரும் குற்றியலிகரமும், குற்றியலுகரமும் ஒரு புள்ளியும், இரு புள்ளியும் (நாகியாது, காடு) பெற்றன என்று கொள்ளவும் இடமிருக்கிறது. ஒலிப்பு நிலையமைப்பில் ஏறுமுகமாகக் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் ஆகிய மூன்றும் அமைந்து ஒன்று, இரண்டு, மூன்று புள்ளிகளைப் பெற்றன என்ற்என்று கொள்வதும் தவறாகாது அல்லது ஒலிப்புக் குறைவின் அடிப்படையில் குற்றியலிகரம் இரு புள்ளியும், குற்றியலுகரம் ஒரு புள்ளியும் (நாகியாது, காடு) பெற்றன என்றோ அவை ஒவ்வொரு புள்ளி (நாகியாது, காடு) மட்டுமே பெற்று எழுதப்பட்டன என்றோ கருதலாம். "ஒற்றெழுத்தியற்றே குற்றியலுகரம்" என்ற செய்யுளில் நூற்பாவும் இங்கு நினைக்கத் தக்கது. யாப்பருங்க ல இரண்டாம் நூற்பாவின் மேற்கோளாக வரும் "சங்கயாப்பின்"
 
"குற்றிய லிகரமுங் குற்றிய லுகரமும்
"https://ta.wikipedia.org/wiki/ஆய்த_எழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது