விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎கல்வியியல் நோக்கில் கேள்விகள்: எனது முன்மொழிவு விக்கிமூலம், மொழிபெயர்ப்பு கருவி அறிமுக நிலையில் வேண்டாம்
வரிசை 67:
 
::சரி. அப்படி என்றால், 1. விக்கியின் அனைத்துத் திட்டங்களிலும் அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என்று இல்லாமல், விக்கிப்பீடியாவில் பெருமளவும் பிற துணைத் திட்டம் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் அவர்கள் கவனம் செலுத்துமாறும் வடிவமைக்கலாம். 2. விக்கியில் ஆறாம் வகுப்பு மாணவர்கள் கூட சிறப்பாகப் பங்களித்திருப்பதைப் பார்க்கிறோம். ஆகவே, முதுகலை தமிழ் மாணவர்களிடம் இருந்து தரம், எண்ணிக்கை ஆகியவற்றில் இன்னும் சற்று கூடுதல் எதிர்பார்ப்புகளை முன் வைக்கலாம். இந்த இரண்டு தவிர என்னுடைய மற்ற கருத்துகளைப் பொருட்படுத்த வேண்டாம். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 18:10, 19 அக்டோபர் 2020 (UTC)
 
:::கட்டற்ற தரவுகளின் அளவு தமிழில் குறைவாகவே உள்ளதெனக் கற்குங்கருவியியலில் (Machine learning) செயற்படும் ஆய்வறிஞர்களின் கலந்துரையாடலில் தெரிய வருகிறது. பலவகையான காலக்கட்டங்களில் பயன்படுத்தச் சொற்களை விக்கிமூலத்திட்டத்தின் வழியே மட்டுமே கொண்டுவர இயலும். தற்போது மொழிபெயர்ப்புக் கருவிகளைக் கொண்டு உருவாக்கப்படும் கட்டுரைகளில், குறிப்பிட்ட சொற்களே சுழன்று வருகின்றன. எனவே, வளர்ந்து வரும் நுட்பங்களுக்கு விக்கித்திட்டங்களிலேயே தரவுகள் எடுக்கப்படுகின்றன என்பதை அறியும் பொழுது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. எனவே, சொற்களின் செழுமையைக் கூட்ட வேண்டியது நமது கடமையென்றே எண்ணுகிறேன். புதியவர்களுக்கு விக்கிமூலம் எளிது. '''படத்தைப் பார்த்து பங்களி''' என்ற பரப்புரை, தமிழ் வளம் பெருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நூல்களைச் சார்ந்து எழுதுதல் மேலோங்க வேண்டும். [[s:அட்டவணை:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf]] என்ற நூல் சில ஆண்டுகள் பயணப்பட்டு எழுதிய நூல். இதில் தமிழகத்தின் மலைவளங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. மொழிபெயர்ப்புக் கருவிகளைக் கொண்டு எழுதும் போக்கு தற்போது அதிகமாகி உள்ளன. அது சீர்தரமற்ற பல துப்புரவு பணிகளை செய்ய வேண்டிய நிலையில் உள்ளன. எனவே அவற்றினை பயிலரங்குளில் தவிர்ப்பது நல்லது.--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 01:34, 20 அக்டோபர் 2020 (UTC)
Return to the project page "தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020".