விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020

வரைவு

தொகு

உள்ளகப்பயிற்சித் திட்டத்திற்கான வரைவை உருவாக்கியுள்ளேன். விக்கித் திட்டமாகவும் இல்லாமல் வெறும் பயிற்சிப்பட்டறையாக மட்டுமில்லாமல் இலக்குடன் கூடிய நெடிய பயிற்சியாக இருக்கும். இதற்கும் முன் நிகழ்ந்த பரப்புரைகளின் படிப்பினையைக் கொண்டு தான்தோன்றித் தனமாகக் கட்டுரைகள் உருவாகாத வண்ணம் கவனம் செலுத்துவோம். ஒவ்வொரு இலக்கிற்கும் ஒவ்வொரு பொறுப்பாளர்களை அமைக்கலாம். விக்கித் துப்புரவு தேவைப்படும் பக்கங்களை இதன் இலக்காகக் கொள்ளலாமா? வேறு மாற்றங்களையோ திருத்தங்களோ வரைவில் செய்யலாம். மாணவர்களுக்கும் விக்கிச் சமூகத்திற்கும் பயனளிக்கும் வகையில் இந்தப் பயிற்சியினைத் திட்டமிடலாம். கல்லூரியின் பருவத்தேர்வின் அடிப்படையில் நவம்பர்க்குள் பயிற்சியினை முடிக்க வேண்டும். எனவே அதற்குள் பயிற்சிக்கான நாட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அனைவரின் வழிகாட்டலை எதிர்பார்க்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 05:08, 15 அக்டோபர் 2020 (UTC)Reply

சி.ஐ.எஸ். அமைப்பிடம் சான்றிதழுக்கும் இணையச் செலவிற்கும் கோரிக்கை வைத்துள்ளேன். மேலும் நடத்தவுள்ள சுமார் பத்து அமர்வுகளில் தொடர்ந்து பங்கெடுக்க யாருக்கேனும் இணையச் செலவிற்கு உதவி வேண்டினால் இங்கே குறிப்பிடலாம். மேலும் ஆதரவையும் கருத்தையும் அங்கேயும் இடலாம்-நீச்சல்காரன் (பேச்சு) 06:46, 15 அக்டோபர் 2020 (UTC)Reply
  1. கூடுதலாக பொறுப்பாளர்களை நியமிக்கலாம். அல்லது, ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒவ்வொரு குழுவாக நியமிக்கலாம். உதாரணமாக விக்கிமூலத்திற்க்கு ஒரு குழு, விக்கிப்பீடியாவிற்கு ஒரு குழு இதே போல மற்றதற்கும். காரணம் பணிகள் பிரித்துக் கொடுக்கும் போது வேலை சுலபமாகும் என்பது என் கருத்து.
  2. //விக்கித் துப்புரவு தேவைப்படும் பக்கங்களை இதன் இலக்காகக் கொள்ளலாமா?// இது சரியாக எனக்குப் புரியவில்லை. துப்புரவுப் பணிகளை மானவர்களுக்குக் கொடுக்கலாமா? எனக் கேட்டுள்ளீர்கள் எனப் புரிந்துகொள்கிறேன். பொதுவாகத் துப்புரவு என்பது சற்று விக்கிப்பீடியாவினைப் புரிந்து கொண்ட பின்னர் செய்யப்படுவது என்பது என் கருத்து. எனவே துப்புரவுப் பணிகளை மானவர்களுக்குக் கொடுக்க வேண்டாம் என்பது என் கருத்து.
ஸ்ரீ (✉) 16:01, 15 அக்டோபர் 2020 (UTC)Reply
ஆமாம் முந்தைய நிகழ்வு போல திட்டங்களுக்கான பொறுப்பாளர்களிடம் பொறுப்பை கொடுக்க வேண்டும். விரும்பும் பொறுப்பைப் பயனர்கள் இங்கே கருத்திட்டு முன்னெடுக்கலாம். விதிமுறைகளில் எத்தகைய மாற்றங்களையும் அவர்கள் சொல்லலாம். வழமை போல மற்றவர்களும் பங்கெடுக்கலாம். விக்கிமூலம், விக்சனரி, பொதுவகம், விக்கிப்பீடியா, விக்கித் தரவு, விக்கிசெய்திகள், விக்கிநூல், விக்கி மேற்கோள், இதர என்று விரும்பும் திட்டங்களில் பொறுப்பை எடுக்கலாம். பயிற்சியளித்தல், இலக்கு நோக்கிப் பங்களிக்க வைத்தல், பங்களிப்பைச் சரிபார்த்து ஒப்புதல் அளித்தல் ஆகியவை முக்கியப் பணியாக இருக்கும். -நீச்சல்காரன் (பேச்சு) 07:38, 16 அக்டோபர் 2020 (UTC)Reply

கருத்துகள் - ஞா. ஸ்ரீதர்

தொகு

மிகச் சிறப்பான முயற்சி இதனை முன்னெடுத்த மகாலிங்கம் மற்றும் நீச்சல்காரனுக்கு வாழ்த்துகள்.

  1. மாணவர்கள் இந்தத் திட்டத்தில் இணைவதற்கு எந்தக் கட்டணமும் செலுத்தவில்லை என்பதனை உறுதிபடுத்த வேண்டும். பொதுவாக நிறுவனங்களில் நடக்கும் நிகழ்விற்கு சிறு தொகை பெறப்படுவது வழக்கம். எனவே கட்டணம் செலுத்தவில்லை என அவர்களிடம் சான்று பெற்றால் அது இந்தத் திட்டத்திற்கும் விக்கிப்பீடியாவிற்கும் நல்லது எனக் கருதுகிறேன்.
  1. மாணவர்களுக்கு இறுதித் தேர்வு முடிந்து விட்டதா? அல்லது இந்தப் பயிற்சியினால் மாணவர்களது மற்ற தேர்விற்கு பாதிப்பு ஏற்படாதவாறு பயிற்சி நாட்களை அமைக்க வேண்டும்.
  2. ஒரு மாணவரை விக்கிமீடியாவின் அனைத்துத் திட்டங்களிலும் பங்களிக்கச் செய்ய வேண்டுமா?
  3. விக்கி மேற்கோள்களையும் சேர்க்கலாம்.
  4. பிற மொழி விக்கித் திட்டங்களில் விரும்பினால் பங்களிக்கச் செய்யலாம் என்பது இந்த முதல் முயற்சிக்கு குழப்பத்தினை ஏற்படுத்தலாம். ஸ்ரீ (✉) 16:29, 15 அக்டோபர் 2020 (UTC)Reply
இந்தத் திட்டத்தின் முன்னுரையில் கட்டணமில்லை என்று குறிப்பிட்டுள்ளோம். அதைக் கல்லூரித் தரப்பிலும் தெரிவித்துள்ளோம். அது கட்டாயக் கொள்கை. மாணவர்களுக்குத் தேர்வு எதுவும் இக்காலகட்டத்தில் இல்லை என்றே நினைக்கிறேன். அதற்கேற்ப முன்பின் நமது பயிற்சியை அமைத்துக் கொள்ளலாம். மாணவர்கள் விருப்ப நேரத்தில் பங்களிக்கலாம். ஏழாவது விதியில் அனைத்து இதர திட்டங்களும் சேர்த்து 50 தொகுப்பு என்றுள்ளது. விக்கிமேற்கோள் என்று தனியாக இலக்கு கொடுக்க வேண்டுமா?. எட்டாவது விதியாக உள்ளது விருப்பத்தேர்வுதான். ஆங்கில விக்கியில்/விக்சனரியில் தமிழ்ப் பக்கங்களை மொழிபெயர்க்க, மேம்படுத்த என்று அவர்களுக்குக் கூடுதல் அனுபவங்கள் கிடைக்கலாம் என நினைக்கிறேன். மாணவர்களின் பங்களிப்பைத் தரவரிசைப்படுத்த இவை கூடுதல் காரணங்களாகக் கொள்ளாமுடியும். அக்டோபர் 21 முதல் நவம்பர் 20 வரை திட்டமிடலாம். இலக்குகளை முடிப்பவர்களுக்கு உள்ளகப்பயிற்சிக்கான சான்றிதழ் வழங்குவோம். கல்லூரித் தரப்பில் இந்தப் பங்களிப்பின் அடிப்படையில் மதிப்பெண்கள் இட்டுக் கொள்ள உதவும். -நீச்சல்காரன் (பேச்சு)
  • விக்கிமூலம் 2ஆவது அமர்வில் விக்கிமூல நிரல்கள் பற்றி கூறலாம்.
  • விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை உருவாக்கும் போது ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எப்படி உருவாக்குவது , நாமாகவே சான்று சேர்த்து எப்படி உருவாக்குவது எனும் இரு முறைகளையும் சொல்லிக் கொடுப்பது நல்லது.
  • ஒவ்வொரு நாள் அமர்விற்கும் பிறகு அவர்களுக்குப் பயிற்சியாக கொடுக்க வேண்டும் தானே. அவ்வாறு கொடுக்கப்படும் பயிற்சியினை விக்கிப்பீடியாவில் ஆவணப்படுத்த வேண்டும்.
  • சான்றிதழ் கொடுப்பதோடு நமது பணி முடிவடைகிறதா? எனில் மதிப்பெண்கள் எதன் அடிப்படையில் வழங்கப்படும்? மதிப்பெண் வழங்குவதில் விக்கி சமூகத்திற்கு பொறுப்பு இல்லை எனில் அதனையும் திட்டப் பக்கத்தில் தெரிவிப்பது நல்லது. ஸ்ரீ (✉) 10:39, 16 அக்டோபர் 2020 (UTC)Reply

சஞ்சீவி சிவகுமார்

தொகு
# நல்ல திட்டம். முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
# விதிமுறைகளில் இப்படி எழுதினால் தெளிவாயிருக்கும் // 30 நாட்களுக்குள் மேற்கண்ட இலக்குகளை அடைபவர்களுக்கு உள்ளகப் பயிற்சிக்கான சான்றிதழ் தமிழ் விக்கிப்பீடியா சார்பாக வழங்கப்படும்.(அவ்வாறு முடிக்க இயலாவிட்டாலும் கூடுதலான நாட்களை எடுத்துக் கொண்டு முடிக்கும்பட்சத்தில் உள்ளகப் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்படும்).சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:17, 16 அக்டோபர் 2020 (UTC)Reply
 Y ஆயிற்று -நீச்சல்காரன் (பேச்சு) 07:29, 21 அக்டோபர் 2020 (UTC)Reply

பயிற்சி அளிக்க விரும்புவோர்

தொகு

பயிற்சி அளிக்க விரும்பும் பயனர்கள் தாங்கள் எந்த அமர்வில் அல்லது விக்கிமீடியாவின் எந்தத் திட்டத்தில் பயிற்சி அளிக்க விரும்புகிறீர்கள் எனத் தெரிவித்தால் நிகழ்ச்சி நிரல் அமைக்க ஏதுவாக இருக்கும்.

நீச்சல்காரனிடமிருந்து அழைப்பைப் பெற்றதிலிருந்து சற்று ஆர்வம் ஏற்பட்டுள்ளது. நான் மொழிபெயர்ப்புத் தொடர்பில் சற்றுப் பயிற்சி வழங்கலாம். அதற்குரிய நேர காலத்தைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டியுள்ளது.--பாஹிம் (பேச்சு) 14:18, 16 அக்டோபர் 2020 (UTC)Reply

மொழிபெயர்ப்புத் தொடர்பான பயிற்சியில் ஏற்கனவே இருக்கும் விக்கிப்பீடியர்களிலும் விருப்பமுள்ளோர் கலந்து கொள்வது பிழைகளைக் குறைக்க உதவும். அவற்றைத் திருத்த நேரத்தைச் செலவழிப்பதும் குறையும். எனவே, மொழிபெயர்ப்பைத் தனிப் பயிற்சியாக நடத்தினால் நல்லதென நினைக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 14:42, 16 அக்டோபர் 2020 (UTC)Reply

@Fahimrazick: சிறப்பு. ஆமாம் இணையவழி என்பதால் யாவரும் கலந்து கொள்ளலாம். இன்னும் மூன்று வாரமுள்ளதால் நீங்கள் நிதானமாகவே தயார் செய்யலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 17:33, 16 அக்டோபர் 2020 (UTC)Reply

எனக்குரிய தேதியையும் நேரத்தையும் சரியாக அறியத் தாருங்கள். மொழிபெயர்ப்புப் பயிற்சியிற் சேர ஏற்கனவேயுள்ள விக்கிப்பீடியர்களுக்கும் நேரகாலத்துடனேயே அறிவித்தால் நல்லது. இங்கே கிட்டத்தட்ட எல்லோரும் மொழிபெயர்ப்புச் செய்ய முயல்கிறார்களல்லவா.--பாஹிம் (பேச்சு) 05:02, 17 அக்டோபர் 2020 (UTC)Reply

வணக்கம் பாஹிம், நீங்கள் கூடுதலாக கட்டுரையின் தலைப்பிடல் பற்றிக் கூற இயலுமா? அண்மைக் காலமாக நீங்கள் தலைப்பிடல் பற்றி பல கட்டுரைகளில் கூறி வருவதனைப் பார்க்கிறேன். எனவே நீங்கள் இந்த பயிற்சியில் இது பற்றி கூறினால் என் போன்றவர்களுக்கும் , மாணவர்களுக்கும் தலைப்பிடல் பற்றி அறிவதில் பேருதவியாக இருக்கும். நன்றி ஸ்ரீ (✉) 09:03, 18 அக்டோபர் 2020 (UTC)Reply

கட்டாயம். அதைப் பற்றிக் கூறத்தான் வேண்டும். இங்கே கிட்டத்தட்ட எல்லாமே மொழிபெயர்ப்புத்தான். அவை எங்கள் மொழிக்கேற்றவாறு அமைவதன்றோ முறை. ஒரு பயிற்சியளிப்பவருக்கு எத்தனை மணி நேரம் வழங்கப்படும்? அதற்கேற்றவாறு தானே திட்டமிட வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 13:10, 18 அக்டோபர் 2020 (UTC)Reply

ஒரு மணி நேரம் அதில் 40 நிமிடங்கள் பயிற்சி அளிப்பதற்கும் 20 நிமிடங்கள் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்பதற்கும் பயன்படுத்தலாம். இருப்பினும், பயிற்சியாளர் விரும்பினால் சற்று நேரத்தினை அதிகரித்துக்கொள்ளலாம். ஸ்ரீ (✉) 14:07, 18 அக்டோபர் 2020 (UTC)Reply

நான் அக்டோபர் 28 முதல் நவம்பர் 4 வரையிலுமாகிய இரண்டாம் கிழமையில் ஒரு மணி நேரமோ ஒன்றறை மணிநேரமோ ஒவ்வொரு நாளுமோ, அல்லது மொத்தம் 4 நாட்களோ பயிற்சி வழங்கமுடியும். ஆனால் பயிற்சி பெறவிரும்புவோர் எங்கிருக்கின்றனர் என்பதைப் பொருத்து நேரத்தைத் தேர்வு செய்துகொள்ளலாம். இசூம் (zoom), வெபெக்ஃசு (Webex), கைப்பு (skype) ஆகிய ஏதோ ஒரு வழியாகப் பயிற்சியை மேற்கொள்ளலாம். பங்குகொள்வோர்கள் எவ்வளவு பேர் என்பதைப் பொருத்து தொலையரங்க முறையைத் தேர்வு செய்யவேண்டும். --செல்வா (பேச்சு) 13:24, 21 அக்டோபர் 2020 (UTC)Reply

@செல்வா: கருத்திற்கு மிக்க நன்றி. சுமார் 70 மாணவர்கள் கூகிள் மீட் வழியாகப் பங்கேற்கிறார்கள். அனைவரும் மதுரைப் பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்திய நேரப்படி மாலை 3 முதல் 8 வரை எந்த நேரத்திலும் உங்களுக்கு ஏற்ப அமைக்கலாம். முதல்வாரம் விக்கிமூலம் அவர்களுக்கு எளிதாக இருக்கும் என்பதால் உங்களது அமர்வை நவம்பர் 3 & 4 ஆகிய நாட்களில் வைத்துக் கொள்வோம். -நீச்சல்காரன் (பேச்சு) 06:20, 22 அக்டோபர் 2020 (UTC)Reply
நன்று. நவ. 3,4 ஆகிய நாள்களில் இந்திய நேரம் மாலை 7:30 முதல் 8:30 வரை என்று வைத்துக்கொள்ளலாம். --செல்வா (பேச்சு) 15:05, 23 அக்டோபர் 2020 (UTC)Reply

நல்கை

தொகு

தொடர்ந்து பல கல்லூரிகளுக்காகவும், தனியார் அறக்கட்டளைகளிலும் விக்கிப்பரப்புரை செய்வதால் இணைய இணைப்புக்கும், சில குறும்பயணங்களுக்கும் உதவித்தொகை வேண்டும். தற்போது செய்துவரும் பணப்பணி, நிலையற்றதாகவும், போதிய வருமானம் இல்லாமலும் இருக்கிறது. திட்டப்பணி மூலம் நல்கைப் பெற்று, உதவக் கோருகிறேன் --உழவன் (உரை) 06:04, 17 அக்டோபர் 2020 (UTC)Reply

குறும்பயணங்கள் செய்ய வேண்டாம். கொரோனா காலத்தில் நல்கையில் விக்கிப் பரப்புரைக்குப் பயணங்கள் செய்யக் கூடாது. இணையக் கட்டண உதவி கிடைக்கலாம் காத்திருப்போம். -நீச்சல்காரன் (பேச்சு) 08:31, 17 அக்டோபர் 2020 (UTC)Reply

இற்றை

தொகு

கல்லூரித் தரப்பில் வழங்கப்படும் கூகிள் மீட் பயன்படுத்தலாம். இதுவரை 60 மாணவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இலக்காகக் கொடுத்த பங்களிப்புகள் செய்யும்பட்சத்தில் மட்டுமே பங்களிப்புச் சான்றிதழ் வழங்கப்படும். மற்றவர்கள் கலந்து கொண்டு கற்றுக் கொள்ளலாம். அதில் எந்தத் தடையும் இல்லை. பல பயனர்கள் பயிற்சியளிக்க இசைவு தெரிவித்ததனடிப்படையில் நிகழ்ச்சி நிரல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்வமுள்ளவர்களுக்கு ஏற்ப நிகழ்ச்சி நிரலை மாற்றியமைக்கலாம். இன்னும் பலர் ஒருங்கிணைப்பில் ஈடுபட்டால், ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனிப் பொறுப்பாளர்கள் என்று பிரிக்கும் வகையில் செய்யலாம். இன்னும் சில தினங்கள் காத்திருந்து தேதியை இறுதி செய்யலாம் எனப் பரிந்துரைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 11:55, 19 அக்டோபர் 2020 (UTC)Reply

கல்வியியல் நோக்கில் கேள்விகள்

தொகு

இந்த உள்ளகப் பயிற்சி சான்றிதழின் கல்விப்புல பெறுமதி என்ன? அந்த மாணவர்கள் கட்டாயம் முடிக்க வேண்டிய பயிற்சி, மதிப்பெண், creditக்கு ஈடாக இது ஏற்றுக் கொள்ளப்படுமா? ஆம் எனில், இதற்கு அக்கல்லூரியின் முதல்வர், பல்கலை முறையான ஏற்பு அளித்துள்ளதா? Wikipedia in Education திட்டம் Christ பல்கலையில் இப்படி முறையான ஏற்பு பெற்று நடத்தப்படுகிறது.

முறையான ஏற்பு எனில், முதுகலை தமிழ் மாணவர்கள் இந்த உள்ளகப் பயிற்சியில் பெற வேண்டிய பயிற்சி, learning outcome என்னவென்று அவர்கள் பாடத்திட்டம் வரையறுக்கிறது? அதனைக் கருத்தில் கொண்டு நமது பயிற்சி எப்படி அமைக்கப்பட்டுள்ளது?

இதற்கு அக்கல்லூரியில் இருந்து பொறுப்பேற்கும் ஆசிரியர்(கள்) யார்?

விக்கியின் அனைத்துத் திட்டங்களிலும் அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என்று இல்லாமல், விக்கிப்பீடியாவில் பெருமளவும் பிற துணைத் திட்டம் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் அவர்கள் கவனம் செலுத்துமாறும் வடிவமைக்கலாம்.

பாடத்திட்டம் படி, ஒரு மாதத்தில் அவர்கள் பயிற்சியில் எத்தனை மணி நேரம் செலவழிக்க வேண்டும் என்று உள்ளது? அதற்கு ஏற்ப deliverables இருக்க வேண்டும். விக்கியில் ஆறாம் வகுப்பு மாணவர்கள் கூட சிறப்பாகப் பங்களித்திருப்பதைப் பார்க்கிறோம். ஆகவே, முதுகலை தமிழ் மாணவர்களிடம் இருந்து தரம், எண்ணிக்கை ஆகியவற்றின் படி நிறைய எதிர்பார்ப்பு உண்டு.

இது பல்கலை ஏற்பு பெற்ற பயிற்சி இல்லை ஏதோ நாம் விருப்பத்தின் அடிப்படையில் செய்கிறோம் என்றால் மேலே உள்ள கருத்துகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை. --இரவி (பேச்சு) 13:40, 19 அக்டோபர் 2020 (UTC)Reply

இது பல்கலைக்கழக ஏற்போ, கல்லூரியின் கட்டாயமோ அல்ல. விருப்பத்தின் பெயரில் நடைபெறும் உள்ளகப்பயிற்சி மட்டுமே. ஏதேனும் ஒரு இணைய ஊடகத்தில் பயிற்சியை விரும்பினர். மற்றொரு தனியார் ஊடகத்திலும் அழைப்பு வந்தது ஆனால் அவர்கள் விக்கித் திட்டங்களில் பயிற்சி பெறவே முடிவு செய்தனர். ஏற்கனவே மதுரையில் வேங்கைத் திட்டப் போட்டிக்கு நடத்திய பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட இக்கல்லூரி மாணவர்கள் மூலமே இத்தகைய முன்னெடுப்புகள் நடைபெறுகின்றன. -நீச்சல்காரன் (பேச்சு) 15:25, 19 அக்டோபர் 2020 (UTC)Reply
சரி. அப்படி என்றால், 1. விக்கியின் அனைத்துத் திட்டங்களிலும் அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என்று இல்லாமல், விக்கிப்பீடியாவில் பெருமளவும் பிற துணைத் திட்டம் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் அவர்கள் கவனம் செலுத்துமாறும் வடிவமைக்கலாம். 2. விக்கியில் ஆறாம் வகுப்பு மாணவர்கள் கூட சிறப்பாகப் பங்களித்திருப்பதைப் பார்க்கிறோம். ஆகவே, முதுகலை தமிழ் மாணவர்களிடம் இருந்து தரம், எண்ணிக்கை ஆகியவற்றில் இன்னும் சற்று கூடுதல் எதிர்பார்ப்புகளை முன் வைக்கலாம். இந்த இரண்டு தவிர என்னுடைய மற்ற கருத்துகளைப் பொருட்படுத்த வேண்டாம். --இரவி (பேச்சு) 18:10, 19 அக்டோபர் 2020 (UTC)Reply
கட்டற்ற தரவுகளின் அளவு தமிழில் குறைவாகவே உள்ளதென, கற்குங்கருவியியலில் (Machine learning) செயற்படும் ஆய்வறிஞர்களின் கலந்துரையாடலில் தெரிய வருகிறது. பலவகையான காலக்கட்டங்களில் பயன்படுத்தச் சொற்களை விக்கிமூலத்திட்டத்தின் வழியே மட்டுமே கொண்டுவர இயலும். தற்போது மொழிபெயர்ப்புக் கருவிகளைக் கொண்டு உருவாக்கப்படும் கட்டுரைகளில், குறிப்பிட்ட சொற்களே சுழன்று வருகின்றன. எனவே, வளர்ந்து வரும் நுட்பங்களுக்கு விக்கித்திட்டங்களிலேயே தரவுகள் எடுக்கப்படுகின்றன என்பதை அறியும் பொழுது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. எனவே, சொற்களின் செழுமையைக் கூட்ட வேண்டியது நமது கடமையென்றே எண்ணுகிறேன். புதியவர்களுக்கு விக்கிமூலம் எளிது. படத்தைப் பார்த்து பங்களி என்ற பரப்புரை, தமிழ் வளம் பெருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நூல்களைச் சார்ந்து எழுதுதல் மேலோங்க வேண்டும். s:அட்டவணை:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf என்ற நூல் சில ஆண்டுகள் பயணப்பட்டு எழுதிய நூல். இதில் தமிழகத்தின் மலைவளங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. மொழிபெயர்ப்புக் கருவிகளைக் கொண்டு எழுதும் போக்கு தற்போது அதிகமாகி உள்ளன. அது சீர்தரமற்ற பல துப்புரவு பணிகளை செய்ய வேண்டிய நிலையில் உள்ளன. எனவே அவற்றினை பயிலரங்குளில் தவிர்ப்பது நல்லது.--உழவன் (உரை) 01:34, 20 அக்டோபர் 2020 (UTC)Reply
எனக்கும் இலக்குகள் சற்று மிகுதியாகவும் பரவலாகவும் உள்ளதுபோலப் படுகிறது. குறிப்பாக கல்லூரிப்பாடத்தின் ஒருபகுதியாக இல்லாமல் கூடுதல் முனைப்பின்வழி பங்கேற்பதால், நாம் குறிப்பிட்ட இலக்குகளில் மாணவர் விருப்பப்படி இரண்டையோ மூன்றையோ தேர்ந்தெடுத்து அடைந்தால் போதுமானது. தேவைப்பட்டால், கூடுதல் இலக்குகளை எட்டுபவர்களுக்குச் சிறப்பாக எதுவும் சான்றிதழோ பரிசோ அறிவிக்கலாமென நினைக்கிறேன். இந்த முனைவைத் தொடங்கியமைக்கு நன்றி, நீச்சல் காரன். இதில் பங்காற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள். நானும் என்னாலியலும் பணிகளை மேற்கொள்ளப் பார்க்கிறேன். -- சுந்தர் \பேச்சு 05:19, 20 அக்டோபர் 2020 (UTC)Reply
இங்கு கருத்துக்களைப் பதிவிட்ட இரவி, உழவன், சுந்தர் ஆகியோருக்கு நன்றி. நாட்கள் அதிகமாக உள்ளதால் நம்மால் இயன்றவரை அவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம் என்ற எண்ணத்தினால் தான் விக்கிமீடியாவின் அனைத்துத் திட்டங்களையும் இங்கு குறிப்பிட்டோம். இரு கருத்துக்களுமே விக்கிமீடியாவிற்கு நன்மை பயக்கக் கூடியதே. ஸ்ரீ (✉) 08:21, 20 அக்டோபர் 2020 (UTC)Reply

இற்றை 2

தொகு

மேலே குறிப்பிட்டுள்ள அனைவரின் கருத்துக்களை உள்வாங்கி பயிற்சியை அளிப்போம். கல்லூரித் தரப்பில் 66 நபர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். உள்ளகப்பயிற்சி அல்லாமல் கலந்து கொள்பவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கலாம் எனப் பரிந்துரைக்கிறேன். 60% கைப்பேசி, 30% மடிக்கணினி என்றே மாணவர்கள் தரப்பில் பங்களிக்கவுள்ளனர். எனவே பயிற்சி பெரும்பாலும் கைப்பேசி சார்ந்து அமையுமாறு அமைப்போம். மாற்றுத் தேதிகள் ஏதுமில்லாததால் அக்டோபர் 23 அன்றே தொடங்கிவிடலாம் மேலும் பயிற்சியாளர்களின் பரிந்துரைப்படி இதர அமர்வுகளின் தேதியை இறுதி செய்வோம். மாணவர்கள் விரும்பினால் சில அமர்வுகளை மீண்டும் நடத்தும் வகையில் அவ்வப்போது முடிவு செய்து கொள்ளலாம். அனைத்துப் பங்கேற்பாளர்களின் பயனர் பெயர்களையும் முன்பதிவு செய்யச் சொல்லுவோம். அதனால் ஏதேனும் பக்கம் தவறானால் இந்தப் பயனர்களின் பக்கங்களை நீக்காமல் பயனர்வெளிக்கு மாற்றிவிடக் கேட்டுக் கொள்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 07:14, 21 அக்டோபர் 2020 (UTC)Reply

முதல் நாள் இற்றை

தொகு

சி.ஐ.எஸ். நிகழ்ச்சி நல்கைக்கு ஒப்பம் அளித்துவிட்டனர். திட்டமிட்டபடி இன்று விக்கித் திட்டங்கள் குறித்த மேலோட்டமான அறிமுகம், உள்ளகப்பயிற்சிக்கான அறிமுகம், பயனர் பெயர் உருவக்கம் நடந்தன. விக்கிப்பீடியா சார்பாக பாஹிம், மகாலிங்கம், ஸ்ரீதர், தகவலுழவன், நீச்சல்காரன் முதலியோர் கலந்து கொண்டனர். மாணவர்களைத் திட்டப்பக்கத்தில் முன்பதிவு செய்யச் சொல்லியுள்ளோம்.-நீச்சல்காரன் (பேச்சு) 12:19, 23 அக்டோபர் 2020 (UTC)Reply

தள அறிவிப்பு தேவைப்படுமா?

தொகு

இந்த உள்ளகப்பயிற்சி என்பது முன்பதிவு செய்த ஒரே கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சியளிக்கும் குழு என்கிற நோக்கில் விக்கிப் பயனர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். ஆனால் இதர பொது மக்களுக்கோ புதுப் பயனர்களுக்கோ திட்டமிடப்படவில்லை, சான்றிதழும் அளிக்க இயலாது. மேலும் கல்லூரியின் வலையரங்கை நாம் பயன்படுத்துவதால் வெளிநபர்களைத் தவிர்க்கலாமா? அல்லது பொது அழைப்பை விடுக்கலாம்? அவ்வாறு பொது அறிவிப்பு இல்லையென்றால் விக்கிப்பீடிய வாசகர்களுக்குக் குழப்பத்தைத் தவிர்க்கத் தள அறிவிப்பாக உள்ள விளம்பரத்தைத் தவிர்க்கலாம் எனப் பரிந்துரைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 03:06, 24 அக்டோபர் 2020 (UTC)Reply

தற்போதைய உள்ளகப்பயிற்சியில் வெளிநபர்களைத் தவிர்த்தாலும், தள அறிவிப்புகள் இருப்பது விக்கிப்பீடிய நிகழ்ச்சிகளுக்கு ஒரு விளம்பரமாக அமையும். பிற கல்லூரியைச் சார்ந்த நபர்கள் இத்தகு விளம்பரத்தைப் பார்க்கநேரிடின் அவர்கள் உங்களைத் தொடர்பு கொண்டு தங்கள் கல்லூரியிலும் இத்தகுப் பயிற்சிகளை நடத்தக் கோருவதற்கு ஒரு தொடக்கமாக அமையுமே!--நந்தகுமார் (பேச்சு) 03:37, 24 அக்டோபர் 2020 (UTC)Reply

மாணவருக்கான தொழினுட்ப உதவி

தொகு

பயிற்சி பெறுவோரில் 7 ஆவதாகப் பதிவு செய்துள் பயனர் ஆதிலெட்சுமி என்பவர் பிழையாக ஆதிெலட்சுமி என்று பதிவு செய்துள்ளார். அதைச் சரிபார்த்து, யாராவது திருத்திக் கொடுத்தால் நல்லது.--பாஹிம் (பேச்சு) 06:05, 24 அக்டோபர் 2020 (UTC)Reply

பயனர் பெயர்களை பயனரின் விருப்பப்படி தான் மாற்ற இயலும் எனக் கருதுகிறேன். அவரின் பேச்சுப் பக்கத்தில் மேலதிக தகவல்களைத் தெரிவித்துள்ளேன். நன்றி ஸ்ரீ (✉) 08:39, 24 அக்டோபர் 2020 (UTC)Reply

இற்றை - விக்கிமூலம்

தொகு

விக்கிமூலம் குறித்த லெனின் அமர்வும், தகவலுழவன் அமர்வும் மிகச் சிறப்பாக அமைந்தன. சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களும் பல கேள்விகளைக் கேட்டு மிகுந்த ஈடுபாடுகாட்டுகிறார்கள். பல பக்கங்களில் மாணவர்கள் பங்களிக்கிறார்கள். இதற்கென உருவாக்கப்பட்ட வாட்சப் குழுவிலும் மாணவர்கள் எழுப்பும் ஐயங்களை ஸ்ரீதர் உட்படப் பலரும் தெளிவுபடுத்திவருகின்றனர். மாணவர்களின் பங்களிப்பை இங்கே இற்றை செய்யவுள்ளோம். சான்றிதழுக்கான மாதிரி வடிவமைப்பைச் சில தினங்களில் இறுதி செய்து சி.ஐ.எஸ். அமைப்பிற்கு அனுப்பவுள்ளோம். ஏதேனும் ஆலோசனைகள் அல்லது கருத்துக்களிருந்தால் அறியத்தரலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 06:31, 29 அக்டோபர் 2020 (UTC)Reply

புதிய இயற்றை

தொகு

திட்டமிட்டபடி பொதுவகம் - நந்தினி, விக்சனரி - உழவன், விக்கித்தரவு -நீச்சல்காரன், மொழிப்பயிற்சி -செல்வா எனப் பயிற்சிகள் நிறைவடைந்துள்ளன. இனி தொடர்ந்து விக்கிப்பீடியா தொடர்பான பயிற்சிகள் நடைபெறவுள்ளன. -13:55, 10 நவம்பர் 2020 (UTC)

பயிற்சிகள் நிறைவு

தொகு

மிகவும் சிறப்பான விக்கிப்பீடியப் பயிற்சியினை @TNSE Mahalingam VNR, Sivakosaran, Fahimrazick, and Sridhar G: கடந்த வாரங்களில் மாணவர்களிடையே வழங்கினர். மாணவர்களின் பங்களிப்பும் பரவலான திட்டங்களில் காணமுடிகிறது. ஆர்வமாகக் கேட்டுத் தெளிவு பெறுகின்றனர். திட்டமிட்டபடி ஐந்து திட்டங்கள் குறித்த பயிற்சி நிறைவு பெறுகிறது. மாணவர்களிடம் எழும் ஐயங்களைப் போக்க சில அமர்வுகள் எதிர்வரும் நாட்களில் நடக்கவுள்ளன. 24 மாணவர்கள் இலக்கினை அடையும் பட்சத்தில் அவர்களுக்கான உள்ளகப்பயிற்சிச் சான்றிதழ் வழங்கவும், 43 மாணவர்கள்/ஆசியர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழும் வடிவமைக்கப்பட்டு வருகிறது. லெனின் மிக அருமையாகச் சான்றிதழ் வடிவமைப்பினைச் செய்துள்ளார். சில தினங்களில் அதனை இங்கே இறுதி செய்வோம். இதர பயனர்கள் பங்களிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்த மாணவர்கள் விடும் தவறுகளைத் திருத்தி வழிகாட்டலாம்; பேச்சுப் பக்கங்களில் பாராட்டலாம். உள்ளகப் பயிற்சி என்பது புதிய முயற்சி என்பதாலும் மற்ற மாணவர்களுக்கு முன்னோடியாகவும் இருப்பதால் அவர்கள் பங்களிப்பைப் பற்றி ஊடகங்களுக்குச் செய்தி அனுப்பலாம் என நினைக்கிறேன். மேலும் ஆலோசனைகளைத் தந்தும் உதவலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 14:30, 18 நவம்பர் 2020 (UTC)Reply

சான்றிதழ் உருவாக்கம்

தொகு

பயிற்சி பெற்றவர்களுக்கும் பங்கேற்றவர்களுக்கும் சான்றிதழ் மாதிரிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. குறைந்த நேரத்தில் சிறப்பாக லெனின் தயாரித்துள்ளார். 24 மாணவர்களுக்கு உள்ளகப்பயிற்சிக்கான சான்றிதழும் மற்றவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழும் திட்டமிட்டுள்ளோம். மாணவர்கள் இலக்கை அடைந்தவுடன் சான்றிதழை அவர்களிடம் கொடுக்கவுள்ளோம். சி.ஐ.எஸ். நமக்கு அச்சேற்றித் தரவுள்ளனர். பயிற்சி நாளையுடன் முடிவடைகிறது. இருந்தாலும் தேவைப்படும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகுப்புகள் அவ்வப்போது திட்டமிடலாம். இந்த மூன்றில் திருத்தமோ பரிந்துரையோ இருந்தால் அறியத் தரலாம்.

பங்கேற்பாளர் சான்றிதழுக்கு இதே வார்ப்புருவில் கீழுள்ள வாசகங்கள் இடம் பெறும்.

Certified that <Student Name> has participated in Tamil Wiki online workshops held in Oct 23 to Nov 22 2020 in following Creative Commons Projects: 
Tamil Wikisource
Tamil Wiktionary 
Tamil Wikipedia
Wikicommons
Wikidata
Certified also that he/she has attended training in Content writing, proofreading, and copyright licensing.

-நீச்சல்காரன் (பேச்சு) 09:48, 21 நவம்பர் 2020 (UTC)Reply

சான்றிதழ் இருமொழிகளில் (தமிழ், ஆங்கிலம்) இருப்பதே சிறப்பு. இது தமிழ் விக்கிப்பீடியா பங்கேற்புச் சான்றிதழ் அல்லவா?--நந்தகுமார் (பேச்சு) 10:32, 21 நவம்பர் 2020 (UTC)Reply
இது உள்ளகப் பயிற்சிக்கான சான்றிதழ். இரு மொழியில் சான்றிதழ் கொடுத்துப் பார்த்ததில்லை. ஏதேனும் மாதிரிச் சான்றிதழ் அனுப்ப இயலுமா? --நீச்சல்காரன் (பேச்சு) 13:00, 21 நவம்பர் 2020 (UTC)Reply
ஆம், இருமொழிகளில் இருப்பது நல்லது. அழகு குறையாமல் வடிவமைப்பது சற்று சிக்கலாக இருக்கலாம், ஆனால் கட்டாயம் இயலும் என்றே நினைக்கின்றேன். எல்லா வரிகளும் இருமொழியில் இல்லாவிடினும், தலைப்பு மட்டுமோ அல்லது முக்கியமான சில வரிகள் மட்டும் இருமொழிகளில் இருக்குமாறும் வடிவமைக்க முயலலாம். இயலாது எனில் தனித்தனியாக தமிழிலும் ஆங்கிலத்திலும் தரலாம். Tamil version, English version என்று குறிப்பிட்டுத் தர இயலுமா என்றும் சிந்திக்கலாம். இப்பொழுதுள்ள சான்றிதழ்கள் அருமையாக வடிவமைத்து இருக்கின்றீர்கள். எனக்கு 1., 3 ஆகியவை பிடித்துள்ளன.--செல்வா (பேச்சு) 16:28, 21 நவம்பர் 2020 (UTC)Reply
@Neechalkaran: உங்கள் மின்னஞ்சல் முகவரியினைக் கொடுத்தால் இருமொழிகளில் உள்ள என்னுடைய மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டத்தினை மாதிரிக்காக அனுப்புகிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 11:31, 22 நவம்பர் 2020 (UTC)Reply
@Nan: நன்றி. அனுப்புங்கள் அதன்படி அமைப்போம். எனது பயனர் பக்கத்திலும் உள்ளது. neechalkaran@gmail.com -நீச்சல்காரன் (பேச்சு) 12:33, 22 நவம்பர் 2020 (UTC)Reply
மேலே சுட்டிக்காட்டியதைப் போல உள்ளகப்பயிற்சிக்கான சான்றிதழில் கீழுள்ள வாசகங்கள் இடம்பெறும். சான்றிதழை landscape அல்லாமல் portrait வடிவில் அச்சேற்றிக் கொள்வோம்.

உள்ளகப் பயிற்சிச் சான்றிதழ்(மாதிரி 1)

தமிழ் விக்கிமீடியா குழுமம்
Tamil Wikimedia Community

தமிழ் விக்கி உள்ளகப் பயிற்சியில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 23 முதல் நவம்பர் 22 வரை  கலந்து கொண்டு நிர்ணயித்த 
பங்களிப்புகளைத் தமிழ் விக்கிமூலம், தமிழ் விக்சனரி, தமிழ் விக்கிப்பீடியா, பொதுவகம், விக்கித்தரவு ஆகிய படைப்பாக்கப் பொதுமம் சார் விக்கிமீடியத் திட்டங்களில் சிறந்த முறையில் பங்களித்தமையைப் பாராட்டி <name> என்பவருக்குச் சான்றளிக்கப்படுகிறது. மேலும் இவர் உள்ளடக்கக் கட்டுரையாக்கம், மெய்ப்புத் திருத்தம் மற்றும் காப்புரிமை உரிமங்கள் குறித்தும் செயல்முறைப் பயிற்சி பெற்றார் எனச் சான்றளிக்கிறோம்.

Certified that <Name> in the Tamil Wiki Internship programme 2020 held in October 23 to November 22 has reached the expected contribution in the Creative Commons Projects such as Tamil Wikisource, Tamil Wiktionary, Tamil Wikipedia, Wikimedia Commons, Wikidata. Certified also that he/she has received hands-on experience in content writing, proofreading and copyright licensing.

தகவல் உழவன்   ஞா. ஸ்ரீதர்   நா.ரெ. மகாலிங்கம்   நீச்சல்காரன்
ஒருங்கிணைப்பாளர்கள்

பங்கேற்புச் சான்றிதழ் (மாதிரி 3)

தமிழ் விக்கிமீடியா குழுமம்

<Name> அவர்கள் தமிழ் விக்கிமீடியா சார்பில் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 23 முதல் நவம்பர் 22 வரை நடத்தப்பட்ட இணையவழிப் பயிற்சிப் பட்டறையில் தமிழ் விக்கிமூலம், தமிழ் விக்சனரி, தமிழ் விக்கிப்பீடியா, பொதுவகம், விக்கித்தரவு ஆகிய படைப்பாக்கப் பொதுமம் சார் விக்கிமீடியத் திட்டங்களைப் பற்றிய பயிற்சியில் கலந்து கொண்டார் எனப் பாராட்டி இச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.

தகவல் உழவன்   ஞா. ஸ்ரீதர்   நா.ரெ. மகாலிங்கம்   நீச்சல்காரன்
ஒருங்கிணைப்பாளர்கள்

-நீச்சல்காரன் (பேச்சு) 07:14, 23 நவம்பர் 2020 (UTC)Reply

உள்ளகப் பயிற்சிச் சான்றிதழ் (மாதிரி 1) நன்றாக உள்ளது. வரிகளை சீர்மையாக்கினால் (justify instead of left indent) நன்றாக இருக்கும்.--நந்தகுமார் (பேச்சு) 08:00, 23 நவம்பர் 2020 (UTC)Reply
மேலும் இவர் உள்ளடக்க எழுத்து, மெய்ப்புத் திருத்தம் மற்றும் காப்புரிமை உரிமங்கள் குறித்தும் செயல்முறைப் பயிற்சி பெற்றார் எனச் சான்றளிக்கிறோம். (என்பதை சேர்த்தால் நன்றாக இருக்கும்).--நந்தகுமார் (பேச்சு) 08:05, 23 நவம்பர் 2020 (UTC)Reply
 Y ஆயிற்று -நீச்சல்காரன் (பேச்சு) 06:56, 24 நவம்பர் 2020 (UTC)Reply

இறுதி இற்றை

தொகு

நவம்பர் 24 அன்று முறையாக நிறைவு விழா இணையம் வழியாக நடந்தேறியது. கல்லூரியின் துறைத் தலைவர் மற்றும் இதர பேராசிரியர்கள் உட்பட மாணவர்களும் விக்கிப்பீடியாவிலிருந்து, மகாலிங்கம், தகவலுழவன், ஸ்ரீதர், அம்மார் போன்றோர் கலந்து கொண்டனர். இதுவொரு தொடக்கமாகவும், மாணவர்கள் தொடர்ந்து விக்கித் திட்டங்களில் பங்களிக்கவும் கருத்துரை வழங்கப்பட்டது. பெண் பங்களிப்பாளர்களின் தேவையும் கூட்டு முயற்சியின் தன்மையையும் எடுத்துரைக்கப்பட்டது. சுமார் பத்து விக்கிப்பீடியர்களுடன் பயிற்சி தொடங்கி சுமார் எழுபது விக்கிப்பீடியர்களாகப் பயிற்சி நிறைவடைந்துள்ளது. மாணவர்கள் இலக்குகளை முடித்தபிறகு சான்றிதழ்களை அவர்களிடம் வழங்கப்படும். கல்லூரித் தரப்பிற்கும், விக்கித் தரப்பிற்கும் பயனுள்ளதாக நிகழ்ச்சி அமைந்தது. நிகழ்ச்சியை வெற்றிகரமாக ஒருங்கிணைத்துப் பயிற்சியளித்த மகாலிங்கம், ஸ்ரீதர், தகவலுழவன், மேலும் பயிற்சியளித்த லெனின் குருசாமி, நந்தினிகந்தசாமி, செல்வா, சிவகோசரன், பாஹிம் அனைவருக்கும் நன்றி. மேலும் கலந்துரையாடல் குழுவிலிருந்து உதவிய பாலு, ஹிபயதுல்லா, அம்மார், கி.மூர்த்தி, அருளரசன், அஸ்வின் ஆகியோர்க்கும் மற்றும் உறுதுணையாக இருந்த விக்கிமீடியத் திட்டப் பயனர்கள் அனைவருக்கும் நன்றிகள். -நீச்சல்காரன் (பேச்சு) 06:09, 25 நவம்பர் 2020 (UTC)Reply

நல்லதொரு முயற்சி. பயிற்சியளிக்க வாய்ப்பளித்த நீச்சல்காரனுக்கு நன்றி. பயிற்சிபெற்ற மாணவியரில் சிலராவது தொடர்ந்து விக்கித்திட்டங்களில் பங்களிப்பார்கள் என நம்புவோம். நிகழ்வை ஒருங்கிணைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்! --சிவகோசரன் (பேச்சு) 13:35, 25 நவம்பர் 2020 (UTC)Reply
வாய்ப்பளித்தற்கு நன்றி நீச்சல்காரன். ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். —நந்தினிகந்தசாமி (பேச்சு) 13:04, 10 சனவரி 2021 (UTC)Reply

இந்திய விக்கிச்சந்திப்பு 2021 இல் பகிர்வு

தொகு

இந்த முன்னெடுப்பு தொடர்பான இன்றைய இந்திய விக்கிச்சந்திப்பில் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டேன். இது ஒரு கற்றலாகும், மேலும் எதிர்காலத்தில் இது போல பயிற்சிகளை முன்னெடுக்க உதவலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 13:48, 21 பெப்ரவரி 2021 (UTC)

Return to the project page "தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020".