திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரிய கோயில் இணைக்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 66:
சாலையில் 2.2 கி.மீ செல்ல கோயிலை அடையலாம்.அல்லது விழுப்புரத்தில் இருந்து செஞ்சி செல்லும் சாலையில் ஆமாத்தூர் பிரிவு சாலையில் 2.5 கி.மீ செல்லவேண்டும்.
 
== கோயில் அமைப்பு ==
இத்தலத்தில் கோயில்களை அமைத்திருப்பதில் ஒரு புதுமை உள்ளது. இங்கு இறைவனுக்கும் இறைவிக்கும் தனித்தனியாக ஒன்றை ஒன்று எதிர் நோக்கிய வண்ணம் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன இங்கே. இறைவன் கிழக்கு நோக்கியவராகவும் இறைவி மேற்கு நோக்கிய வண்ணமும் இருக்கிறார்கள். இறைவன் கோயில் வாயிலில் கோபுரம் இல்லை. அடிப்படை போட்டது போட்டபடியே நிற்கிறது. இறைவன் திருப்பெயர் அபிராமேசுவரர். அழகியநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இவரையே ஆமாத்தூர் அம்மான் என்று பாடிப் பரவுகிறார் திருஞான சம்பந்தர். இந்த ஆமாத்தூர் அம்மான் சுயம்பு மூர்த்தி. பசுக்கள் வழிபாடு செய்த அடையாளமாகக் குளம்புச் சுவடு லிங்கத்தின் தலையில் உள்ளது.
 
இந்தக் கோவிலுக்கு இரண்டு பிரகாரங்கள் உள்ளன. முதல் பிராகாரத்தில் வடகிழக்கு மூலையில் இக்கோயில் கட்டிய அச்சுத தேவராயனுக்கு சிலை இருக்கிறது. இரண்டாம் பிரகாரத்தில் விநாயகர், இராமர், காசி விசுவநாதர், சுப்பிரமணியர் எல்லாம் தனித் தனி சந்நிதிகளில் உள்ளனர்.
 
== வழிபட்டவர்கள் ==
முருகன், திருமகள் எல்லாம் இத்தலத்தில் வழிபட்டு அருள் பெற்றவர் என்பது புராண வரலாறு. இவரை இராமன் இலங்கையிலிருந்து திரும்பும்போது வழிபாடு செய்திருக்கிறான். அதனால் 'இராமனும் வழிபாடு செய்யும் ஈசன் இவர்' என்பது அப்பர் பாடியுள்ளார். ஞானசம்பந்தர், அப்பர் இருவரையும் தவிர சுந்தரராலும் பாடப் பெற்றவர் இவர்.
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
==வெளி இணைப்புக்கள்==
*[[s:வேங்கடம் முதல் குமரி வரை 2/ஆமாத்தூர் அம்மான்|வேங்கடம் முதல் குமரி வரை 2/ஆமாத்தூர் அம்மான்]]
* [http://www.shivatemples.com/nnaadut/nnt21.html தல வரலாறு]
* [http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=21 கோயில் வரலாறும் கல்வெட்டு விபரமும்]