வித்யா பாலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்திய திரைப்பட நடிகை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Beachelliots (பேச்சு | பங்களிப்புகள்)
Translated from http://en.wikipedia.org/wiki/Vidya_Balan (revision: 340656907) using http://translate.google.com/toolkit with about 96% human translations.
(வேறுபாடு ஏதுமில்லை)

15:22, 10 மார்ச்சு 2010 இல் நிலவும் திருத்தம்

வித்யா பாலன் (தமிழ்: வித்யா பாலன்); (பிறப்பு ஜனவரி 1, 1978) ஒரு பாலிவுட் படங்களில் தோன்றக்கூடிய இந்திய நடிகை ஆவார்.

Vidya Balan
இயற் பெயர் Vidya P Balan
பிறப்பு சனவரி 1, 1978 (1978-01-01) (அகவை 46)
Palakkad, Kerala, India
தொழில் Actress, model
நடிப்புக் காலம் 2003 - present

வித்யா பாலன், தனது நட்சத்திர தொழில்முறை பயணத்தை பல இசை வீடியோக்கள், சோப்பு விளம்பரங்கள் மற்றும் பல வணிகரீதியிலானவற்றில் துவங்கி, பாலோ தேகோ (2003) என்னும் பெங்காலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம், விமர்சனரீதியிலான வரவேற்பைப் பெற்றார். பிறகு இவர் இந்தி திரைப்படமான பரிநீத்தா (2005) என்பதில் அறிமுகமாகி, பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினைப் பெற்றார், மற்றும் தனது முதல் வணிகரீதியிலான வெற்றியை ராஜ்குமார் ஹிரானியின் லகே ரஹோ முன்னாபாய் (2006) படத்தின் மூலம் பெற்றார்.[1]

ஆரம்பகால வாழ்க்கையும் பின்னணியும்

வித்யா பாலன் கேரளாவின்,[2] பாலக்காட்டில் உள்ள ஒரு தமிழ் பேசும் ஐயர் குடும்பத்தில், பி.ஆர். பாலன் (ETC சேனலின் துணைத்தலைவர்) என்பவருக்கும் மற்றும் இல்லத்தரசியாக இருக்கும் தாய்க்கும் பிறந்தார். வித்யாவிற்கு பிரியா என்னும் மூத்த சகோதரி ஒருவரும் உள்ளார். ஒரு காணொலி நேர்முகத்தில், இவர் தன்னை ”மிகுந்த கடவுள் நம்பிக்கையுடைவர்” என்றும் மற்றும் தான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோவில் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வித்யா பாலன் தன் பள்ளிப்படிப்பை புனித அந்தோணி பள்ளியிலும் அதற்கு பிறகு தனது சமூகவியல் பட்ட படிப்பை புனித சேவியர் கல்லூரியிலும் முடித்துள்ளார்.[2] இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் முதுகலை (MA) படிப்பைப் படிக்கும் பொழுது, தனது முதல் திரைப்பட வாய்ப்பைப் பெற்றார்.[2]

தொழில் வாழ்க்கை

ஆரம்பகால திரைத்துறை வாழ்க்கை

இவருடைய நடிப்புத் தொழில் மலையாள திரைப்படமான சக்கரம் என்பதில் மோகன்லாலுடன் ஒன்றுசேர்ந்து நடிக்க கையொப்பமிடப்பட்டு துவங்கியது, ஆனால் அப்படம் பிறகு தள்ளிவைக்கப்பட்டது. அதன்பிறகு இவர் தமிழ் திரைப்படமான ரன் என்பதில் நடிக்க கையொப்பமிட்டார், ஆனால் காரணங்கள் வெளியிடப்படாமல் முதல்கட்ட படப்பிடிப்பிற்குப் பிறகு இவர் அதிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டு அவருக்கு பதிலாக மீரா ஜாஸ்மீன் நடிக்க வைக்கப்பட்டார்.[3] மீண்டும் சக்கரம் படம் பிருதிவிராஜை முதன்மையாகக் கொண்டு துவங்கப்பட்ட பொழுது, மீண்டும் வித்யா பாலனுக்கு பதிலாக மீரா ஜாஸ்மீனே தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஸ்ரீகாந்த்துடன் நடிக்கவிருந்த இரண்டாவது தமிழ் திரைப்படமான மனசெல்லாம் படத்திலிருந்தும் ’செயல்திறமற்றவர்’ என்கிற அடிப்படையில் விலக்கப்பட்டார் மற்றும் இவருக்கு பதிலாக திரிஷா கிருஷ்ணன் அதில் நடிக்கவைக்கப்பட்டார்.

அதன்பிறகு இவர் தன்னை தொலைக்காட்சி விளம்பரங்களில் திசைதிருப்பிக் கொண்டார். 1998 முதல், இவர் எண்ணிறந்த தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றினார், அவற்றில் பலவும் பிரதீப் சர்காரால் இயக்கப்பட்டது. இவர் இசைக் காணொலிகளின் துணை பாத்திரங்களையும் ஏற்று, இயுஃபோரியா, சுபா முட்கல் மற்றும் பங்கஜ் உதாஸ் போன்ற இசைக்கலைஞர்களின் பாடகர்கள் மற்றும் இசைக்குழுவினருடனும் தோன்றினார். வித்யா பாலன் ஹம் பாஞ்ச் என்கிற தொலைக்காட்சி தொடரின் முதல் பருவத்தின் சில பகுதிகளில் ராதிகா மாதூர் என்னும் கதாபாத்திரத்தில் தோன்றினார், ஆனால் முதல் பருவத்தின் இறுதியில் இவருக்கு பதிலாக அமிதா நங்கியா என்பவர் நடிக்கவைக்கப்பட்டார்.

திருப்புமுனை, 2003-தற்காலம்

2003 இல், இவர் பெங்காலி திரைப்படமான பாலோ தேகோ வில் தோன்றியதன் மூலம், கொல்கத்தாவின் அனந்தலாக் புரஸ்கார் சிறந்த நடிகை க்கான விருதினை வென்றார். வித்யா பாலன் அடுத்து அறிமுகமான இந்தி திரைப்படமான பரிநீத்தா மிகுந்த விமர்சனரீதியிலான வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தில் அவரது செயல்திறம் விமர்சகர்களால் வரவேற்கப்பெற்று,[4] அவருக்கு பிலிம்பேரின் சிறந்த அறிமுகநடிகைக்கான விருதினையும் மற்றும் பிலிம்பேரின் சிறந்த நடிகைக்கான விருதுக்காக முன்மொழியும் வாய்ப்பினையும் பெற்றுத்தந்தது. இவரது முதல் இரண்டு படங்களின் வெற்றிக்குப் பிறகு, மனசெல்லாம் படத்திலிருந்து தன்னை நீக்கிய அதே தயாரிப்பாளரால் தசாவதாரம் படத்தில் கமல்ஹாசனுக்கு மாறுபட்ட பாத்திரத்தில் நடிக்க கையொப்பமிடும்படி ஆர்வமுடன் கேட்டுக்கொள்ளப்பட்டார், ஆனால் இவர் அந்த வாய்ப்பை மறுத்தார் மற்றும் இவருக்கு பதிலாக இப்படத்திற்காக அசின் தொட்டும்கல் கையொப்பமிட்டார். 2006 இல், இவர் மிகப்பெரிய வெற்றிப்படமான லகே ரஹோ முன்னாபாய் படத்தில் சஞ்சய்தத்துக்கு மாறான பாத்திரத்தில் தோன்றினார். மீண்டும் ஒருமுறை இவரது செயல்திறம் விமர்சகர்களால் மிகுந்த வரவேற்பைப் பெற்றது[5] மற்றும் இப்படம் அவ்வாண்டின் மிகுந்த மொத்தவருமானம் ஈட்டிய இரண்டாவது திரைப்படமாகத் திகழ்ந்தது.[6]

மணிரத்னம் அவர்களின் சிறந்த விமர்சன வரவேற்பைப் பெற்ற குரு திரைப்படம் 2007 ஆம் ஆண்டில் வெளிவந்த முதல் படமாக வித்யா பாலனுக்கு அமைந்தது, இதில் இவர் தண்டுவட மரப்பு நோயால் அவதிப்படும் பெண்ணாக நடித்திருந்தார். இத்திரைப்படம் மிகச்சிறந்த வசூலைப் பெற்றது[7] மற்றும் இவரது பாத்திரமும் வெகுவாக பாரட்டப்பட்டது.[8] இவர் நடித்து அடுத்து வெளியான இரண்டு படங்களான,Salaam-e-Ishq: A Tribute To Love (2007) மற்றும் Eklavya: The Royal Guard (2007) ஆகிய படங்கள் வெற்றி பெறமால் தோல்வியடைந்தன[7] ஆனால் பின்னால் கூறப்பட்ட படம் 80 வது அகாடமி விருதுகளுக்காக ஆஸ்காருக்கான இந்தியாவின் அதிகாரபூர்வ பட்டியல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டது.[9] அவ்வாண்டிலேயே வித்யா பாலன் நடித்து இறுதியாக வெளியான இரு படங்களான, ஹேய் பேபி (2007) மற்றும் பூல் புலைய்யா (2007) ஆகியவை மிகச்சிறந்த வசூலைக்குவித்த படங்களாக அமைந்தன.[7]

இவர் தற்பொழுது பணியாற்றிவரும் செனாப் காந்தி திரைப்படம் பிளாக் படத்தின் கதையை எழுதிய பவானி ஐயரால் எழுதப்பட்டு, விபு பூரி அவர்களால் இயக்கப்பட்டு வருகிறது. ஒரு காதலுக்கு அப்பாற்பட்ட பாடல்களற்ற இத்திரைப்படம் அமிதாப் பச்சன், ராஜீவ் காண்டெல்வால் மற்றும் வித்யா பாலன் ஆகியோர் ஏற்று நடித்துள்ள மூன்று கதாபாத்திரங்களை சுற்றியும் மற்றும் இந்திய சுதந்திர போராட்ட வீரரான எல்லை காந்தி என்றறியப்படும் கான் அப்துல் காஃபர் கான் அவர்களை மையமாகக் கொண்டும் அமைந்துள்ளது.[10]

இயக்குநர் நிகில் அத்வானி கடந்த ஜனவரி 2009 இல் தாம் வித்யா பாலனுடன் பணியாற்ற இருப்பதாக அறிவித்தார். சந்த் பாய் என்று பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தில் உடன் நடிக்கும் நட்சத்திரம் அக்‌ஷய் குமார் ஆவார். இத்திரைப்படம் கடமை தவறும் இளையோரை அடிப்படையாகக் கொண்டது.[10] வித்யா பாலன் UTV ஸ்பாட்பாய்ஸ் நிறுவன தயாரிப்பில் நோ ஒன் கில்டு ஜெஸிக்கா திரைப்படத்தில் ராணி முகர்ஜியுடன் ஒன்று சேர்ந்து நடிக்கவிருக்கிறார்.

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

பிலிம்பேர் விருதுகள்

வெற்றி பெற்றது

ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள்

வெற்றி பெற்றது

ஜீ சினி விருதுகள்

வெற்றி பெற்றது

சர்வதேச இந்திய திரைப்பட அகாடெமி விருதுகள்

வெற்றி பெற்றது

ஸ்டார் டஸ்ட் விருதுகள்

வெற்றி பெற்றது

மற்ற விருதுகள்

திரைப்படப் பட்டியல்

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
2003 பாலோ தேகோ ஆனந்தி பெங்காலி திரைப்படம்
2005 பரிநீத்தா லலிதா இரட்டை-வெற்றிகள் , பிலிம்பேர் சிறந்த பெண் அறிமுக தோற்றம் விருது &
அவ்வாண்டின் பிலிம்பேர் முகத்திற்கான விருது
பிலிம் பேரின் சிறந்த நடிகைக்கான விருதிற்கு, முன்மொழியப்பட்டார்.
2006 லகே ரஹோ முன்னா பாய் ஜான்வி
2007 குரு மீனு சக்ஸேனா
Salaam-e-Ishq: A Tribute To Love தேஸிப் ரெய்னா
Eklavya: The Royal Guard ராஜேஸ்வரி ஆஸ்காருக்கான இந்தியாவின் அதிகாரபூர்வ நுழைவு
ஹேய் பேபி இஷா
பூல் புலைய்யா அவ்னி/மஞ்சுலிகா பிலிம்பேரின் சிறந்த நடிகைக்கான விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஓம் சாந்தி ஓம் அவராகவே தீவாங்கி தீவாங்கி பாடலில் மட்டும் சிறப்புத் தோற்றம்
2008 ஹல்லா போல் ஸ்நேகா
கிஸ்மத் கோன்னெக்சன் பிரியா
2009 பா வித்யா
2010 இஷ்க்யுயா கிருஷ்ணா 29 ஜனவரி, 2010 இல் திரையிடப்பட உள்ளது
முக்தி ஹாஷி படப்பிடிப்பு
சந்த் பாயி படப்பிடிப்பு
செனாப் காந்தி படப்பிடிப்பு
மதிலுக்கல்க்கப்புரம் மலையாளத் திரைப்படம்
அறிவிக்கப்பட்டது
நோ ஒன் கில்டு ஜெஸிக்கா சப்ரினா லால் அறிவிக்கப்பட்டது

மேலும் பார்க்க

குறிப்புதவிகள்

  1. குல்கர்னி, ரோன்ஜிதா (23 டிசம்பர் 2005). 2005 ஆம் ஆண்டின் சிறந்த பத்து பாலிவுட் நடிகைகள். ரீடிப்.காம் ஜனவரி 2009 இல் திரும்ப எடுக்கப்பட்டது.
    சென், ராஜா (25 ஆகஸ்ட் 2006). பவர்லிஸ்ட்: சிறந்த பாலிவுட் நடிகைகள். ரீடிப்.காம் ஜனவரி 2009 இல் திரும்ப எடுக்கப்பட்டது.
    சென், ராஜா (18 டிசம்பர் 2007). 2007 ஆம் ஆண்டின் மிக ஆற்றல் வாய்ந்த நடிகைகள். ரீடிப்.காம் ஜனவரி 2009 இல் திரும்ப எடுக்கப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 "Biography". vidyabalan.net. பார்க்கப்பட்ட நாள் 2009-12-26.
  3. "The Vidya magic!". Sify.com. 2005-07-07. பார்க்கப்பட்ட நாள் 2006-11-23.
  4. "Parineeta". Movie Review: Parineeta. பார்க்கப்பட்ட நாள் 10 June 2005. {{cite web}}: Unknown parameter |dateformat= ignored (help)
  5. "Lage Raho Munna Bhai". Movie Review: Lage Raho Munna Bhai. பார்க்கப்பட்ட நாள் 31 August 2006. {{cite web}}: Unknown parameter |dateformat= ignored (help)
  6. "Box Office 2006". Lage Raho Munna Bhai becomes second highest grossing film of 2006. பார்க்கப்பட்ட நாள் 9 January 2008. {{cite web}}: Unknown parameter |dateformat= ignored (help)
  7. 7.0 7.1 7.2 "Box Office 2007". பார்க்கப்பட்ட நாள் 9 January 2008. {{cite web}}: Unknown parameter |dateformat= ignored (help)
  8. "Guru". Guru: Movie Review. பார்க்கப்பட்ட நாள் 12 January 2007. {{cite web}}: Unknown parameter |dateformat= ignored (help)
  9. "Eklavya is India's official entry to the Oscars". India's choice for Oscars. பார்க்கப்பட்ட நாள் 26 September 2007.
  10. 10.0 10.1 Subhash K Jha, India.fm. "Vidya Balan signs Nikhil Advani's Chand Bhai and Bhansali's Chenab Gandhi".
  11. "Winners Interviews". Vidya Balan on winning Best Debut & Face of the Year for Parineeta. பார்க்கப்பட்ட நாள் 7 September 2007. {{cite web}}: Unknown parameter |dateformat= ignored (help)
  12. http://www.bollywoodhungama.com/features/2006/01/22/974/index.html
  13. http://www.indya.com/sfk09/previous_years/2006.asp#yr
  14. "SRK, Vidya Balan get Anandalok Puraskar". Vidya Balan wins for Bhool Bhulaiyaa. பார்க்கப்பட்ட நாள் 24 December 2007. {{cite web}}: Unknown parameter |dateformat= ignored (help)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்யா_பாலன்&oldid=493452" இலிருந்து மீள்விக்கப்பட்டது