பொசுபோரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

வடமேற்குத் துருக்கியிலுள்ள ஒரு குறுகிய நீரிணை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(வேறுபாடு ஏதுமில்லை)

18:51, 24 ஆகத்து 2006 இல் நிலவும் திருத்தம்

பொஸ்போரஸ் என்பது கருங்கடலையும் மர்மாராக் கடலையும் இணைக்கும் ஒரு நீரிணையாகும். இது துருக்கி நாட்டை, ஐரோப்பியப் பகுதிக்கும், ஆசியப் பகுதிக்கும் இடையிலான எல்லையாகவும் அமைகின்றது. அனைத்துலக கடற் போக்குவரத்துக்குப் பயன்படும் நீரிணைகளில் அதிகுறைந்த அகலம் கொண்டது இதுவே. இது அண்ணளவாக 30 கிமீ நீளமானது. இதன் வடக்கு நுழைவாயிலில் ஆகக் கூடிய அளவாக 3700 மீட்டர் அகலம் கொண்டது. இதன் மிகக் குறைந்த அகலம் 700மீட்டர் ஆகும். இதன் ஆழம் 36 தொடக்கம் 124 மீட்டர்கள் வரை வேறுபடுகின்றது.

பொஸ்போரஸ் - அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட படம். ஏப்ரல் 2004

இதன் இரு மருங்கும் மக்கள் செறிவு மிகுந்த பகுதிகளாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொசுபோரசு&oldid=58729" இலிருந்து மீள்விக்கப்பட்டது