பாலைக் கௌதமனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பாலைக் கௌதமனார்''' [[சங்க காலப் புலவர்கள்|சங்ககாலப் புலவர்களில்]] ஒருவர். இவர் பாடியனவாக 11 பாடல்கள் சங்கநூல்களில் காணப்படுகின்றன. [[பதிற்றுப்பத்து]] என்னும் தொகுப்பு நூலில் மூன்றாம் பத்தாக அமைந்துள்ள 10 பாடல்களும், [[புறநானூறு|புறநானூற்றில்]] 366 எண்ணுள்ள பாடலும் இவரால் பாடப்பட்டவை.
 
பாலை என்பது இக்காலத்தில் கேரள மாநிலத்தில் பாலக்காடு என்னும் பெயருடன் விளங்கும் ஊரைக் குறிக்கும். கௌதமன் என்னும் பெயர் வடமொழித் தொடர்புடையதாகக் காணப்படுகிறது. புலவரும் பார்ப்பனர். இமயவரம்பன் தம்பி பல்யானைச்செல்கெழு குட்டுவன் மீது இவர் பாடிய 10 பாடல்கள் பதிற்றுப்பத்தில் உள்ளன. தருமபுத்திரன்மீது இவர் பாடிய பாடல் புறநானூற்றில் உள்ளது.
வரிசை 10:
 
ஒரு பாடலில் (21) கடவுளுக்குச் செய்யும் பெரும்பெயர் ஆவுதி, மக்களுக்குச் செய்யும் அடுநெய் ஆவுதி என்னும் வேள்விகளைக் குறிப்பிடுகிறார்.
==== தருமபுத்திரனைப் பாடியது \- புறநானூறு 366 ====
இந்தப் பாடல்களின் சில அடிகள் சிதைந்துள்ளன. பெருங்காஞ்சி என்னும் துறையைச் சேர்ந்த இந்தப் பாடலில் நிலையாமை பற்றிப் பேசப்படுகிறது. முரசு முழக்கத்துடன் தன் பெயரை நிலைநாட்டிக்கொண்டு வாழ்ந்த தனிப்பெருஞ் சிறப்புடையோரும் சென்று மாய்ந்தனர் என்று பாடல் குறிப்பிட்டுச் செல்கிறது.
 
பாடலில் 'அறவோன் மகனே' என விளிக்கும் தொடர் காணப்படுகிறது. புறநானூற்றைத் தொகுத்த ஆசிரியர் இந்தத் தொடரைக்கொண்டு 'தருமபுத்திரன்' என்னும் பெயரை உருவாக்கியுள்ளார்.
 
பாடப்பட்ட தரும்புத்திரன் ஒரு வள்ளல். அவன் சோறு வேண்டியவர்களுக்கு மாட்டை வெட்டிக் கறி சமைத்துச் சோறு போட்டான். கள் விரும்பியவர்களுக்குக் கள் தந்தான். பகல் வேளையில் பிறர் முயற்சிகளுக்கு உதவினான். இரவு வேளையில் மறுநாள் செய்யவேண்டியதை எண்ணிப்பார்த்துக்கொளவான். இப்படி அவன் பண்புகள் பாராட்டப்படுள்ளன.<ref>sanganool.wordpress.com</ref>
 
 
<ref>சங்கநூல்</ref>
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பாலைக்_கௌதமனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது