வன்னி தேர்தல் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
[[இலங்கை]]யில், [[நாடாளுமன்றம்]], [[மாகாணசபை]]கள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகே '''வன்னித் தேர்தல் மாவட்டம்''' எனப்படுகிறது. இது இலங்கையின் வட பகுதியில், [[வடக்கு - கிழக்கு மாகாண சபை]]யின் கீழ் அமைந்துள்ளது. இப்பகுதி மிகவும் [[மக்கள்தொகை அடர்த்தி]] குறைந்த பகுதியாக இருப்பதனால், [[பரப்பளவு|பரப்பளவில்]], வடக்கு - கிழக்கு மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய தேர்தல் மாவட்டமாக இருப்பதுடன், முழு நாட்டிலும் உள்ள பெரிய தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இத் தேர்தல் மாவட்டத்திலிருந்து 5 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படுகிறார்கள்.
'''வன்னித் தேர்தல் மாவட்டம்''' எனப்படுவது தேர்தல் நோக்கங்களுக்காக ஒருங்கமைக்கப்பட்ட மூன்று மாவட்டங்களாகும். இதனுள் [[வவுனியா]], [[மன்னார்]], [[முல்லைத்தீவு]] அகிய மூன்று மாவட்ட்டங்கள் அமைகின்றன. இவை தேர்தல் தவிர்ந்த ஏனைய நிர்வாக நடவடிக்கைகளில் தனித்தனி நிர்வாக மாவட்டங்களாகவே இயங்குகின்றன.
 
==உருவாக்கம்==
 
இலங்கையில், 1978 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம், விகிதாசாரத் தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்னிருந்த தேர்தல் முறையின் கீழ் நாட்டிலிருந்த நிர்வாக மாவட்டங்கள் ஒவ்வொன்றும் பல தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் ஒரு உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டார். 1978 இல் இம்முறை ஒழிக்கப்பட்டது. விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் பல தேர்தல் தொகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டுத் தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு உருவானவற்றில் ஒன்றே வன்னித் தேர்தல் மாவட்டம் ஆகும்.
 
பெரும்பாலும், ஒவ்வொரு நிர்வாக மாவட்டமும் ஒரு தேர்தல் மாவட்டமாகவும் அமைந்தது. ஆனால் [[முல்லைத்தீவு மாவட்டம்|முல்லைத்தீவு]], [[மன்னார் மாவட்டம்|மன்னார்]], [[வவுனியா மாவட்டம்|வவுனியா]] ஆகிய நிர்வாக மாவட்டங்கள் குறைவான மக்கள் தொகையைக் கொண்டிருந்தால், இம் மாவட்டங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தேர்தல் தொகுதியை மட்டுமே கொண்டிருந்தன. எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் பல உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு மக்கள் தொகை போதுமானதாக இல்லாதிருந்ததால், அருகருகேயிருந்த இம் மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கி வன்னித் தேர்தல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
 
==புள்ளிவிபரங்கள்==
 
 
{{stub}}
[[பகுப்பு:இலங்கை]]
"https://ta.wikipedia.org/wiki/வன்னி_தேர்தல்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது