மலாயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 98:
 
மலாக்கா வாழ் மக்களைக் கிறிஸ்துவச் சமயத்திற்கு கொண்டு வர போர்த்துகீசியர்கள் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டனர். ஆனால், அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இஸ்லாமியச் சமயத்தில் இருந்து அவர்களைத் திசை திருப்ப முடியவில்லை. இஸ்லாமியச் சமயம் நன்றாக வேரூன்றி இருந்தது. அதனால் தங்கள் கவனத்தை வியாபாரத்தில் செலுத்தினர். மலாக்கா மக்களின் உள் விவகாரங்களிலும் போர்த்துகீசியர்கள் அதிகமாகத் தலையிடவும் இல்லை.
 
1641ல் போர்த்துகீசியர்கள் டச்சுக்காரர்களிடம் தோல்வி அடைந்தனர். டச்சுக்காரர்களின் முக்கிய நோக்கம் வியாபாரம் செய்வது. பொருள் சேர்த்து வீடு பக்கம் போய்ச் சேர்வது. 1795 வரையில் டச்சுக்காரர்கள் மலாக்காவை ஆட்சி செய்தனர். ஐரோப்பாவில் பிரெஞ்சு புரட்சி நடைபெற்றது. அதனால் சில ஆண்டுகள் மலாக்கா ஆங்கிலேயர்களின் கைவசம் இருந்தது.
 
===டச்சு-ஆங்கிலோ உடன்படிக்கை===
 
பின்னர் 1818 ஆம் ஆண்டு மலாக்கா டச்சுக்காரர்களிடமே மீண்டும் ஒப்படைக்கப் பட்டது. 1824 ஆம் ஆண்டு டச்சு-ஆங்கிலோ உடன்படிக்கையின் படி மலாக்கா ஆங்கிலேயரின் வசம் வந்தது. சுமத்திராவில் ஆங்கிலேயர்களின் கைவசம் இருந்த பென்கூலன் டச்சுக்காரர்களிடம் ஒப்படைக்கப் பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/மலாயா" இலிருந்து மீள்விக்கப்பட்டது