விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் எதிர்மாறான பெயர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சி clean up
வரிசை 1:
'''[[விஷ்ணு சஹஸ்ரநாமம் |விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில்]] வரும் எதிர்மாறான பெயர்கள்''' [[வேதாந்தம் |வேதாந்த]] நுணுக்கங்களையும் [[புராணங்கள்]] கூறும் தெய்வச் செயல்களையும் விளக்கக் கூடியவை. தத்துவத்தின் அடிப்படையில் அணுகினாலன்றி அவைகளினால் ஏற்படும் ஐயப்பாடுகள் விலகா. [[பீஷ்மர்]] இவைகளைத் தொகுத்ததில் இன்னொரு சிறப்பும் உள்ளது. எதிர்மாறாக உள்ள ஒவ்வொரு சோடியினிலுள்ள இரு சொற்களும் ''அடுத்தடுத்து'' வருவதைப் பார்க்கலாம். கீழே அடைப்புகளில் கொடுக்கப் பட்டிருக்கும் எண் அவ்விரு சொற்களும் ஸஹஸ்ரநாமத்தின் 107 சுலோகங்களில் வரும் தொடர் எண் என்று அறிக.
 
=''நிமிஷோநிமிஷ:'' (23)=
வரிசை 5:
:''நிமிஷ:'' - மூடிய கண்கள் உள்ளவர்
 
ஊழிக்காலத்தில் தனது [[மாயை]] யாகிய யோகநித்திரையில் கண்களை மூடிக்கொண்டு தனது [[வாசுதேவன் என்ற பெயர்ச் சொற்பொருள் |வாசுதேவனாகிய]] பரம்பொருள் நிலையைத் தியானம் செய்து கொண்டு இருப்பவர். <ref> விஷ்ணு புராணம் 6 - 4 - 6 </ref> யோகமாயையின் சக்தியால் உலகைத் தாங்குவதற்குக் கண்கள் முதலிய பொறிகள் வேண்டாதவர்.
 
:''அநிமிஷ:'' - கண்களை மூடாதவர்
 
ஊழிக்காலத்தில் [[மச்சாவதார]] மூர்த்தியாய் தன்னுள் ஒடுங்கியதனைத்தையும் விதை வடிவில் காப்பதற்காக ஓடத்திலிட்டு ஊழிக்கடலில் நீந்துகின்ற இமைப் பாதுகாப்பற்ற கண்களுள்ள மீன் வடிவில் இருந்தவர். தேவர்கள் வடிவில் இமைக்காமல் இருப்பவர். மற்றவர்கள் ஒடுங்கி அடங்கிய ஊழி வேளையில் தான் மட்டும் அடங்காமல் விழித்திருப்பவர்<ref> கடோபநிடதம்: 'ய ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி' 5-8</ref>.
 
=''நைகரூபோ பிருஹத்ரூப:'' (29)=
 
 
:''நைகரூப:''- வடிவம் ஒன்றல்லாதவர்
 
உபநிடதத்தில் கண்டபடி, <ref>இந்த்ரோ மாயாபி: புருரூப ஈயதே.பிருகதாரண்யக உபநிடதம்: 2-5-19</ref> மாயைகளால் பல ரூபங்களை அடைந்த பரம்பொருள்.
 
:''பிருஹத்ரூப:'' - பெருவடிவமுள்ளவர்
 
உலகைத்தாங்குவதற்கென பெரிய உருவம் பெற்றவர். [[வராஹர்]], [[ஆதிசேஷர்]], [[கூர்மர்]] முதலான வடிவில் உள்ளவர்.<ref> விஷ்ணு புராணம் 1-4-46 </ref> வராஹ வடிவில் பூமியைத்தாங்கும்போது பகவானின் பெரிய உருவின்மேல் அமைந்தபடியால் பூமி நீரில் மூழ்காதிருந்தது. திரிவிக்ரமத் தோற்றத்தில் ஆகாய இடைவெளி அனைத்திலும் பரவி நின்ற பெருவடிவினர்.
 
=''அத்ருஶ்யோவ்யக்தரூபஶ்ச'' (33)=
வரி 47 ⟶ 46:
:''க்ஷரம்'' - தேயும் பொருளானவர்
 
தோன்றி மாறுபட்டு அழிவது க்ஷரம். எல்லா உயிரினங்களும் க்ஷரம் <ref> க்ஷர: ஸர்வாணி பூதானி - பகவத் கீதை. 15-16 </ref>. காலத்தால் மாறுபடுவதனைத்தும் க்ஷரம். மனம் புத்தி, புலன்கள், உடல், இவற்றைத்தான் என்று அபிமானிக்கும் ஜீவர்கள் யாவரும் க்ஷரம்.
 
:''அக்ஷரம்'' - மாறுபாடடையாதவர்
 
க்ஷரநிலை அடையாதது அக்ஷரம். க்ஷரநிலை என்பது காரியநிலை.இவ்வுலகம் காரியநிலையில் உள்ளது. அதைத் தோற்றுவித்தது காரணநிலையிலுள்ள மாயை. அது அக்ஷரம். எல்லாஜீவர்களின் பிறவிகளை அளிக்கக்கூடிய வினை விதைகள், வாஸனைகள் எனும் மனப்பதிப்புகள் இவையெல்லாவற்றிற்கும் இருப்பிடம்தான் அக்ஷரம். பகவத் கீதை இதை கூடஸ்தன் என்று அழைக்கிறது <ref>15வது அத்தியயம், சுலோகம் 16 </ref> கூடம் என்பது குவியல். இது ஜீவராசிகளாக மாற இருக்கும் காரணநிலை. தோற்றத்தில் ஒருவிதமாகவும் உண்மையில் வேறுவிதமாகவுமிருந்து ஏமாற்றுவதற்கு கூடம் என்று பெயர். உலகமாக மாறவிருக்கும் வாசனைக்குவியல் அத்தகையது. அந்த அக்ஷரமாயிருப்பர் பகவான்.
 
=''தீப்தமூர்த்திரமூர்த்திமான் '' (77)=
வரி 57 ⟶ 56:
:''தீப்தமூர்த்தி:'' - ஒளி வடிவுள்ளவர்
 
அறிவுமயமாக விளங்கும் உருவமுள்ளவர்.அறிவொன்றே ஆதவன் முதலியதன் ஒளி இருக்கும்போதும் இல்லாதபோதும் பொருள் இருப்பதை விளக்குகிறது.பிருகதாரண்யக உபநிடதம் இதை கேள்வியாகக்கேட்டு விடையும் பகர்கிறது: <ref>4.3.6, 4.3.7</ref>. 'சூரியனும் அஸ்தமித்துச் சந்திரனும் அஸ்தமித்து தீயும் ஒடுங்கி பேச்சும் கூட மௌனமாகிவிட்டால் இந்த மனிதனுக்கு ஒளியாவது எது?' 'ஆன்மாவே இவனுக்கு ஒளியாகிறது; ஆன்ம ஒளியாலேயெ இவன் இருக்கிறான், வெளியே செல்கிறான், வேலை செய்கிறான், திரும்பி வருகிறான்'.
 
:''அமூர்த்திமான்'' - வடிவில்லாதவர்
 
வினையாலுண்டான உடம்பில்லாதவர். பகவத்கீதையில் கண்ணனுடைய உறுதியான அறிவிப்பு: <ref>4 - 6 </ref>. 'பிறப்பற்றவனாகவும் மாறுபாடற்றவனாகவும் உண்டானவற்றிற்கெல்லாம் இறைவனாகவும் இருந்தபோதிலும் எனது பிரகிருதியை வசப்படுத்திக்கொண்டு என் மாயையினால் நான் தோன்றுகிறேன்'.
 
=''அநேகமூர்த்திரவ்யக்த:'' (77)=
வரி 67 ⟶ 66:
:''அநேகமூர்த்தி:'' - பல வடிவங்கள் கொண்டவர்
 
அவதாரங்களில் பல உடல்களை எடுத்திருப்பவர். தன்னிச்சையால் விளையாட்டாகச் சில. நெறிப் பாதுகாப்பிற்காகச் சில. உலகை வாழ்விப்பதற்காகச் சில. கண்ணனாக உருவெடுத்த ஒரே அவதாரத்தில் மாயையால் பல உருவங்களில் மாறி மாறித் தோன்றியவர். தான் மணந்த 16000 பெண்களுக்காக அவர்கள் ஒவ்வொருவருக்குத் தக்கபடி அவ்வளவு உருவங்களை எடுத்துக் கொண்டார் என்றும் ராஸலீலையில் ஒவ்வொரு கோபிக்கும் ஒரு கண்ணனாகக் கூடி விளையாடியதையும் ஸ்ரீமத் பாகவதமும் விஷ்ணுபுராணமும் சொல்லும்.விஷ்ணு சஹஸ்ரநாமத்திலேயே, 'நைகரூப:', 'நைகாத்மா', 'நைக:' என்ற பெயர்களும் இதை ருசுப்பிக்கின்றன.நம்மாழ்வாரும்திருவிருத்தம் 96-வது பாட்டில்<ref>
:: வணங்கும் துறைகள் பல பல ஆக்கி மதி விகற்பால்
:: பிணங்கும் சமயம் பல பல ஆக்கி அவை அவைதோறு
வரி 76 ⟶ 75:
:''அவ்யக்த:'' - வெளிப்படாதவர்
 
இவர் இப்படிப்பட்டவர் என்று யாராலும் அறியக்கூடாதவர். அவர் எடுத்த பல தோற்றங்களிலும் அவரது முழுச்சிறப்பு வெளிப்படையாக உணரப்படவில்லை.இதை கண்ணனே தன் கீதையில் சொல்லி <ref> ''அவ்யக்தம் வ்யக்திமாபன்னம் மன்யந்தே மாம் அபுத்தய:/பரம் பாவம் அஜானந்தோ மமாவ்யயம் அனுத்தமம்'' // கீதை: 7-24</ref> அங்கலாய்க்கிறார்.
 
=''ஏகோனைக:'' (78)=
வரி 82 ⟶ 81:
:''ஏக:'' - ஓன்றானவர்
 
பல வடிவங்களில் காணப்பெறுபவர் ஒருவரே. வேறுபாடுகள் அனைத்தும் உண்மையானவை அல்ல. வேறுபாடுகள் மூவகை. தன்னினத்தைச்சார்ந்த வேறுபொருளால் வேறுபாடு (''ஸஜாதீய பேதம்''); வேறு இனத்தைச்சார்ந்த பொருளால் வேறுபாடு (''விஜாதீய பேதம்''); தனக்குள்ளேயே பல பாகங்களினால் வேறுபாடு (''ஸ்வகத பேதம்''). சாந்தோக்ய உபநிடதம் 'ஒருவனே. இரண்டற்றவன்'<ref> ''ஏகமேவாத்விதீயம் பிரம்ம'' சா.உ. 6-2-1</ref> என்று இம்மூன்று வேறுபாடுகளும் இல்லாதவர் என்பதைச் சொல்கிறது.
 
மற்றும் அவரது பெருமைக்கு ஈடான பெருமைகளைக் கொண்டவர் வேறொருவர் இல்லை.பட்டர் உரை: 'எவ்வகையிலும் ஒப்பில்லாத பகவானை யாருடனும் சேர்த்து எண்ணக் கூடாமையால்
வரி 101 ⟶ 100:
* அசையாதிருப்பவரே வாயுவாகத்தானும் அசைந்து மற்ற எல்லாவற்றையும் அசையும்படிச்செய்பவர்.
 
* பாண்டவர் போன்ற வேண்டியவர்களுக்காகத் தானே தனக்கு ஏற்படுத்திக்கொண்ட வரையை மீறினவர்<ref> ஸ்ரீமத் பாகவதம், பீஷ்மர் வாக்கு: 1-9-37 </ref>.
 
=''அணுர்பிருஹத்'' (90)=
வரி 130 ⟶ 129:
<References/>
 
[[பகுப்பு: இந்து சமய நூல்கள்]]
[[பகுப்பு: மந்திரங்கள்]]
 
[[பகுப்பு: மந்திரங்கள்]]