அருகதர், சமணம்

அருகதர் (Arihant) (சமக்கிருதம்: अर्हत), என்பதற்கு விருப்பு, வெறுப்பு, இகழ்ச்சி, புகழ்ச்சி மற்றும் கவலைகளை வென்று வாகை சூடியவர் அல்லது வெற்றியாளர் அல்லது ஜீனர் எனப் பொருளாகும்.[1] மேலும் அருகதர் என்பதற்கு தூய எல்லையற்ற அறிவு கொண்டவர் (கேவல ஞானம்) என்றும் பொருள் படும் அனைத்தையும் அறிந்தவர்.[2][3]

அருகதர் பாகுபலிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆளுயரச் சிற்பம், சரவணபெலகுளா, கர்நாடகா

அருகதரை அனைத்தையும் வென்றவர் எனும் பொருளில் ஜீனர் என்றும் அழைப்பர். அருகதர்கள் மோட்சம் அடையும் நிலையில், அனைத்து நான்கு கர்மங்களை (செயல்களை) துறந்து சித்த புருச நிலைக்குச் (விடுதலை அடைந்த ஆன்மா) செல்வர். எல்லாவற்றையும் அறிந்தவர்கள் எனப்படும் கேவலி (Kevalī) புருசர்கள் இரண்டு வகையாக உள்ளனர். எல்லாவற்றையும் அறிந்தவர்[2]

  1. தீர்த்தங்கர கேவலர்கள் - 24 மனிதர்களுக்கு ஆன்மீக வழிகாட்டிகளாக வாழ்ந்து, அனைவருக்கும் மனித விடுதலையின் (மோட்சம்) பாதையை கற்பிப்பவர்.[4]
  2. சாமானிய கேவலர்கள் (Sāmānya kevalī) – தங்கள் சொந்த முக்திக்காக மட்டும் வாழ்பவர்கள்

விடுதலை / மோட்சம் தொகு

அருகதர்கள் மோட்சத்தின் போது நான்கு வினைகளை செய்வதை துறந்து விடுவார்கள். அவைகள்:

  1. உடல் வளர்ச்சிக்கான செயல்களை துறத்தல் (physical structure forming)
  2. தங்களின் குடும்ப கோத்திரத்தை துறத்தல்
  3. துன்பம் மற்றும் மகிழ்ச்சி ஏற்படுத்தும்செயல்களை துறத்தல்
  4. வாழ்நாள் காலத்தை தீர்மானித்தல்

இந்நான்கு செயல்களை துறந்த அருகதர்களை சித்தர் அல்லது சித்த புருசர்கள் என அழைக்கப்படுகிறார். மோட்சம் அடையும் வரை சித்த புருசர்களை மக்களுக்கு நல்லுரைகளை உபதேசிப்பர்.

வழிபாடு தொகு

 
பொ.ஊ. 2ஆம் நூற்றாண்டில் உதயகிரி, கந்தகிரி குகைகளில் மன்னர் காரவேலனின் ஹாத்திகும்பா கல்வெட்டுகளில் நிமோகர் மந்திரங்கள்

சமணர்கள் முதலில் அருகதர்களை வழிபட்ட பின்னரே சித்த புருசர்களை வழிபடுவர்.

இதனையும் காண்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

  1. Sangave 2001, ப. 15.
  2. 2.0 2.1 Sangave 2001, ப. 16.
  3. Sangave 2001, ப. 164.
  4. Rankin 2013, ப. 40.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருகதர்,_சமணம்&oldid=3830820" இலிருந்து மீள்விக்கப்பட்டது