உலக உணவு நாள்

உலக உணவு நாள் (World Food Day) ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர ஐநா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது. நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

உலக உணவு நாள்
World Food Day
கடைபிடிப்போர்அனைத்து ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள்
நாள்அக்டோபர் 16
நிகழ்வுஒவ்வொரு ஆண்டும்
2015 ஆம் ஆண்டு புகைப்படம் உலக உணவுத் திட்டத்தன் சமூக ஊடக பிரச்சாரம்

2008 ஆம் ஆண்டிற்கான உலக உணவு நாளின் கருப்பொருள் "உலக உணவுப் பாதுகாப்பு: காலநிலை மாற்றம் மற்றும் உயிரியல் ஆற்றலுக்கான சவால்கள்" என்பதாகும்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_உணவு_நாள்&oldid=3161554" இலிருந்து மீள்விக்கப்பட்டது