கனரா வங்கி

இந்தியப் பொதுத் துறை வங்கி

கனரா வங்கி (Canara Bank) இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு நகரைத் தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது.

கனரா வங்கி
வகைபொதுத்துறை நிறுவனம்
BSE, NSE
நிறுவுகை1906
தலைமையகம்கனரா வங்கி.,
112, Jayacharamarajendra Road,
இந்தியா பெங்களூரு இந்தியா
தொழில்துறைவங்கி
காப்புறுதி
Capital Markets, allied industries
உற்பத்திகள்கடன், கடன் அட்டைகள், சேமிப்பு, காப்புறுதி
வருமானம்ரூ. 5500.35 கோடி
மொத்தச் சொத்துகள்ரூ. கோடி மார்ச் 31, 2009.
இணையத்தளம்கனரா வங்கி
தமிழகக் கிளை அலுவலகம், ஆத்தூர்.(கனரா வங்கி)

வரலாறு தொகு

வள்ளல் அம்மெம்பால் சுப்பாராவ் பாய் என்பவரால் 1906-ம் ஆண்டு ஜூலை 1-ம் நாள் கனரா இந்து நிரந்தர நிதி என்ற பெயரில் மங்களூரில் இருந்த வங்கி பின்னர் 1910-ஆம் ஆண்டு கனரா வங்கி லிமிடட் என்கிற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டது. 1958- இல் இந்திய ரிசர்வ் வங்கி ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜி. ரகுமத்முல் வங்கியை கையகப்படுத்தச் சொல்லி கனரா வங்கிக்கு உத்தரவிட்டது. 1870-இல் உருவாக்கப்பட்ட இவ்வங்கி 1925- இல் வரையரைக்குட்பட்ட நிறுவனமாக மாறியது. கையகப்படுத்தப்படும் சமயத்தில் இவ்வங்கி ஐந்து கிளைகளைக் கொண்டிருந்தது.

இந்திய அரசு 1969 ஜூலை 19 அன்று கனரா வங்கி உள்ளிட்ட 13 வர்த்தக வங்கிகளை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளாக மாற்றியது. 1976-ல் கனராவங்கி தனது ஆயிரமாவது கிளையைத் திறந்தது. 1985- இல் மீட்பு நடவடிக்கையில் வட இந்தியாவில் செயல்பட்டு வந்த லஷ்மி வணிக வங்கியைக் கையகப்படுத்தியது இதன் மூலமாக கனரா வங்கிக்கு வட இந்தியாவிலும் 230 கிளைகள் பரவியது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனரா_வங்கி&oldid=3693063" இலிருந்து மீள்விக்கப்பட்டது