குவர்சக்கு

ஈரானின் நகரம்

குவர்சக்கு (Qarchak) (பாரசீக மொழி: قرچک‎; பிற பெயர்: Qar chak ) என்ற இந்த நகரம், குவர்சக்கு மண்டலத்தின் நலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 173,832 ஆக இருந்தது. இந்த நபர்கள் 42,508 குடும்பங்களில் வாழ்ந்தனர். இந்த நகரமானது, நடு தெகுரான் நகரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

குவர்சக்கு
قرچک
நகரம்
குவர்சக்கு is located in ஈரான்
குவர்சக்கு
குவர்சக்கு
ஆள்கூறுகள்: 35°26′22″N 51°34′08″E / 35.43944°N 51.56889°E / 35.43944; 51.56889
நாடு ஈரான்.
மாகாணம்தெகுரான் மாகாணம்
மண்டலம்குவர்சக்கு மண்டலம்
பாக்ச்சுநடுவ மாவட்டம், குவர்சக்கு மண்டலம்
மக்கள்தொகை (2016 கணக்கெடுப்பு)
 • நகர்ப்புறம்2,31,075 [1]
நேர வலயம்IRST (ஒசநே+3:30)
 • கோடை (பசேநே)IRDT (ஒசநே+4:30)
தொலைபேசி குறியீடு021
இணையதளம்Qarchak.ir
Tehran foods too

மக்கள் தொகை தொகு

2016 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, ஒட்டுமொத்த ஈரான் நகரங்களின் மக்கள் தொகை அடர்வில், இந்த நகரம் 41 வது இடத்தினைப் பெறுகிறது.[2] 2006 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகரத்தில் 42,508 குடும்பங்கள் இருந்தன. அந்த குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 173,832 ஆக, மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இருந்தது. பொதுவாக ஈரான் நாட்டில் நகரங்களில் மக்கள் குடியேற்றம், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, வேகமாக அதிகரித்து வருகின்றது என ஐக்கிய நாட்டு ஆய்வுகள் கூறுகின்றன.[3][4] இந்த நாட்டில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்படுகின்றது. இந்த நகரத்தில் பல்வேறு மொழியிலானப் பாரம்பரிய குடும்பங்கள் வாழ்ந்தாலும், பெரும்பான்மையான ஈரானியக் குடும்பங்களில் பிறந்தவர்கள், பாரவேறு எந்த வகையான சமூக சீரமைப்புடன் தொடர்புடையவர்களை விடவும், அதிக முக்கியத்துவத்தை, தமது குடும்ப வழித்தோன்றல்களுக்குக் கொடுக்கின்றனர். இதனால் அவர்கள் அருகருகே வாழ்ந்தாலும், தொலைவில் வாழ்ந்தாலும், சிறிய, பெரிய குடும்பங்களுக்கு இடையை உறவுப் பிணைப்புகள் உறுதியுடன் இருக்கின்றன. மேலும், அவரவர் நடத்தும் தொழில்களிலும் குடும்ப உறுப்பினர்கள் பின்னிப்பிணைந்து சமூகத்தில் நன்மதிப்பைப் பெறுகின்றனர்.[5] 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தொகை கணக்கெடுப்பின்படி நகரத்தின் மக்கள் தொகை 231,075 நபர்கள் இருந்தனர். இதற்கு முன் எடுக்கப்பட்ட அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2011 ஆம் ஆண்டு, 191,588 நபர்கள் இருந்தார்கள். தற்பொழுது உள்ள மக்கள் தொகை எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, இந்நகரத்தின் மக்கள்தொகை அடர்வு +20.61% அதிகரித்துள்ளது.

குறிப்புகள் தொகு

  1. "Statistical Center of Iran > Home". www.amar.org.ir. பார்க்கப்பட்ட நாள் 6 November 2018.
  2. https://www.amar.org.ir/english
  3. Asia-Pacific Population Journal, United Nations. "A New Direction in Population Policy and Family Planning in the Islamic Republic of Iran". Archived from the original on 14 February 2009. பார்க்கப்பட்ட நாள் 14 April 2006.
  4. "Iran – population". Countrystudies.us. பார்க்கப்பட்ட நாள் 18 June 2011.
  5. http://countrystudies.us/iran/52.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவர்சக்கு&oldid=2878937" இலிருந்து மீள்விக்கப்பட்டது