சங்கர்சிங் வகேலா

இந்திய அரசியல்வாதி

சங்கர்சிங் வகேலா (Shankersinh Vaghela) (பிறப்பு: 21 சூலை 1940) இந்தியாவின் குஜராத் மாநில முதலமைச்சராகவும், குஜராத் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும் இருந்தவர்.

சங்கர்சிங் வகேலா
குஜராத்தின் 12வது முதலமைச்சர்
பதவியில்
23 அக்டோபர் 1996 – 27 அக்டோபர் 1997
முன்னையவர்சுரேஷ் மேத்தா
பின்னவர்திலீப் பரிக்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதிகபத்வஞ்சு
குஜராத் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்
பதவியில்
25 டிசம்பர் 2012 – 21 சூலை 2017
முன்னையவர்சக்திசிங் கோகில்
தொகுதிகபத்வஞ்சு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1940-07-21)21 சூலை 1940
வாசன், காந்திநகர், குஜராத்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (1970 - 1996)
இராஷ்டிரிய ஜனதா கட்சி (1996 - 1998)
இந்திய தேசிய காங்கிரசு (1998-முதல்)
துணைவர்குலாப் பாய்
பிள்ளைகள்3 மகன்கள்
வாழிடம்காந்திநகர்
இணையத்தளம்Shankersinh Vaghela
As of 25 பிப்ரவரி, 2006
மூலம்: [1]

அரசியல் தொகு

துவக்கத்தில் குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சியில் செயல்பட்ட சங்கர்சிங் வகேலா, பின்னர் இராஷ்டிரிய ஜனதா கட்சியை நிறுவி, இந்திய தேசிய காங்கிரசு ஆதரவுடன் குஜராத் மாநில முதலமைச்சராக 1996 முதல் 1997 முடிய ஒராண்டு காலம் ஆட்சி செய்தவர். பின்னர் தான் நிறுவிய ராஷ்டிரிய ஜனதா கட்சியை இந்திய தேசியக் காங்கிரசு கட்சியுடன் இணைத்து விட்டார்.

இந்திய நாடாளுமன்றத்தின் 6, 9, 10, 13 மற்றும் 14வது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1984 முதல் 1989 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். மன்மோகன் சிங்கின் முதல் அமைச்சரவையில் ஜவுளித் துறை அமைச்சராக 2004 – 2009 வரை செயல்பட்டார்.

தற்போது கபத்வஞ்சு சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, குஜராத் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1]

உள்கட்சி அரசியல் பிணக்கு தொகு

1995-இல் பாரதிய ஜனதா கட்சியின் சங்கர்சிங் வகேலா, குஜராத் முதலமைச்சர் கேசுபாய் படேலுக்கு எதிராக 47 சட்டமன்ற உறுப்பினர்களுடன் குரல் கொடுத்ததால், கேசுபாய் படேல் மாற்றப்பட்டு சங்கர்சிங் வகேலாவின் ஆதரவாளரான சுரேஷ் மேத்தா, குஜராத் மாநில முதல்வராக நியமிக்கப்பட்டார்.[2]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கர்சிங்_வகேலா&oldid=3628585" இலிருந்து மீள்விக்கப்பட்டது