ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)

இந்திய அரசியல் கட்சி

ஜனதா தளம் (மதசார்பற்ற) அல்லது மத சார்பற்ற ஜனதா தளம் (Janata Dal (Secular)) முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கௌடாவின் தலைமையில் இயங்கும் நடு-இடது கொள்கையுடைய ஓர் இந்திய அரசியல் கட்சி ஆகும்.[1] இந்தக் கட்சியை இந்திய தேர்தல் ஆணையம் மாநிலக் கட்சியாக கருநாடக மாநிலத்திலும் கேரள மாநிலத்திலும் அங்கீகரித்துள்ளது. சூலை 1999ஆம் ஆண்டில் ஜனதா தளம் பிளவுபட்டு இந்தக் கட்சி உருவானது.[2][3]

ஜனதா தளம் (மதசார்பற்ற)
தொடக்கம்ஏப்ரல் 6, 1999
தலைமையகம்காந்திநகர், பெங்களூரு
கொள்கைசமூகநீதி சனநாயகம்
சமயச் சார்பின்மை
அரசியல் நிலைப்பாடுநடு-இடது
கூட்டணிமூன்றாம் அணி (2009)
யூபிஏ (2009-2019)
இணையதளம்
www.janatadalsecular.org.in
இந்தியா அரசியல்

இந்தக் கட்சியில் உள்ள குறிப்பிடத்தக்க அரசியல்வாதிகள் எச். டி. குமாரசாமி (முன்னாள் கர்நாடக முதலமைச்சர் மற்றும் கர்நாடக மாநில அமைப்பின் தலைவர்), எஸ். பங்காரப்பா (முன்னாள் கர்நாடக முதலமைச்சர், எச்.டி.ரேவண்ணா ஆகியோர் ஆவர்.

மேற்கோள்கள் தொகு

  1. "History of Janata Dal (Secular) according to its website". Archived from the original on 2008-05-27. பார்க்கப்பட்ட நாள் 2007-09-30.
  2. "EC to hear Janata Dal symbol dispute". பார்க்கப்பட்ட நாள் 2007-09-30.
  3. "The Nation:Janata Dal:Divided Gains (India Today article)". Archived from the original on 2016-01-09. பார்க்கப்பட்ட நாள் 2007-09-30.