ஜின்னி மஹி

ஒரு இந்திய பஞ்சாப் நாட்டுப்புற இசை கலைஞர், கலாச்சார இசை மற்றும் சொல்லிசை பாடகர்

ஜின்னி மஹி (Ginni mahi பிறப்பு: நவம்பர் 26, 1999) இவர் ஓர் இந்திய பஞ்சாப் நாட்டுப்புற இசை கலைஞர், கலாச்சார இசை மற்றும் சொல்லிசை பாடகர் ஆவார்.[1] ஃபன் பாபா சாஹிப் டி மற்றும் டேன்ஜர் சமர் ஆகிய பாடல்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக அறியப்பட்டார். 2018 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் நடைபெற்ற உலகளாவிய ஊடக மன்றத்தில் இவர் கலந்துகொண்டார் (GMF 2018). இங்கு இவர் சமூக வேறுபாட்டால் ஒருவரையொருவர் அடிப்பதை எதிர்த்துப் பேசியதற்காக சமத்துவம் மற்றும் சுதந்திரத்தின் இளம் குரல் என அழைக்கப்பட்டார்.[2].

ஜின்னி மஹி
ஜின்னி மஹி பின்புறம் திரு.அம்பேத்கர் புகைப்படம் உடம்
பிறப்பு26 நவம்பர் 1999
ஜலந்தர், பஞ்சாப், இந்தியா
தேசியம்இந்தியா
மற்ற பெயர்கள்குர்கன்வால் பாரதி
பணிபாடகர்
வலைத்தளம்
முகநூல் பக்கம்

ஜின்னி மஹி தனது பாடல்களில் லதா மங்கேஷ்கர் மற்றும் சிரேயா கோசல் ஆகியோரின் வழியில் உயர்திரு.அம்பேத்கர் அவர்களின் கருத்துக்களை சொல்ல முயற்சித்தார். இவர் இந்திய நாட்டிற்கு வெளியே ஜெர்மனி, கனடா, கிரீஸ், இத்தாலி மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தனது பாடல்களை பாடினார். இவர் முதன்முதலில் 2016 ஆம் ஆண்டு டில்லியில் என்டிடிவி தனது நேர்காணல் நிகழ்வில் புர்கா தத்துடன் கலந்துகொண்டார். மேலும் இவர் 2018 ஆம் ஆண்டு டில்லியில் ஆஜ்தாக் தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'சாகித்யா' நேரடி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர் இந்திய சமூகத்தில் பெண்களுக்கான நிலை மற்றும் சமத்துவம் பற்றிய கருத்துக்களை பேசி வருகின்றார். [3]

ஆரம்ப வாழ்க்கை தொகு

ஜின்னி மஹி 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் நாள் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் நகரில் ராகேஷ் சந்தர் மஹி[4] மற்றும் பர்ம்ஜித் கௌர் மஹி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார்.[5] இவர் தன் ஏழாம் வயதிலேயே தனது தந்தைக்கு பாடல்களை பாடி காண்பித்தார். இவருடைய பெற்றோர்கள் தமது அனைத்து குழந்தைகளின் கடைசி பெயராக பாரதி என மாற்றி அமைத்துக் கொண்டனர். இதனால் இவர் தனது மேடை பெயராக குர்கன்வால் பாரதி என அழைக்கப்பட்டார். இவர் ஹன்ஸ் ராஜ் மஹிளா மஹா வித்யாலயா கல்லூரியில் இசை படிப்பில் படிக்கிறார்.[6] தனது 13வது வயதிலேயே மதம் சார்ந்த பாடல்களை பாடினார். இவர் இசை படிப்பில் முனைவர் பட்டம் பெற விரும்புவதாக கூறியுள்ளார். மேலும் இவர் பாலிவுட் சினிமா துறையில் பின்னணி பாடகியாக வர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

பாடும் நடை தொகு

தனது டேஞ்சர் சமர் பாடலின் மூலம் தனது சாதி பெயரான சமர் உடன் தொடர்புடைய விரும்பத்தகாத தன்மையை ஒழிக்கவும் அதை மேலும் அதிகாரம் அளிக்கும் பெருமையாக மாற்றுவதையும் அவர் கண்டார். இவரின் முதல் இரண்டு பாடல்களான குரான் டி டிவானி மற்றும் குருபுராப் ஹாய் கன்ஸி வாலி டா ரவிடாசியா சமூகத்தைச் சேர்ந்த பக்தி பாடல்கள் ஆகும். இவரின் பாடல்கள் அனைத்தும் யார் மனதையும் புண்படுத்தும் வகையில் இல்லாமல் இருக்குமாறு இவரின் பெற்றோர்கள், இசையமைப்பாளர் அமர்ஜித் சிங் மற்றும் ஒளிப்பட இயக்குனர் ராமன் ராஜத் ஆகியோர் உள்ள ஒரு குழுவால் உறுதி செய்யப்படுகிறது.

பாடல் வரலாறு தொகு

இவர் ஆரம்ப காலத்தில் பக்தி பாடல்களை தேர்வு செய்து பாடி வந்தார். பின் பிரபலமான பிறகு அரசியல் சார்ந்த மற்றும் சாதி பேதங்களுக்கு எதிராக பாடல்களை தற்போது பாடி வருகிறார்.

தொகுப்பு பாடல்கள் தொகு

  • குரான் டி டிவானி (2015)
  • குருபுராப் ஹாய் கன்ஸி வாலி டா (2016)
  • நாட்டுப்புற இணைப்பு பாடல்கள் (2019)

தனி பாடல்கள் தொகு

  • டேன்ஜர் சமர் (2016)
  • ஹாக் (2016)
  • ஃபன் பாபா சாஹிப் டி (2016)
  • 1932 (ஹாக் 2) (2017)
  • சூட் பாட்டியாலா (2017)
  • சாலாமான் (2018)
  • ராஜ் பாபா சாஹிப் டா (2018)
  • மார்டு டலிர் (2019)

மற்ற பாடல்கள் தொகு

  • தீ ஹான்
  • சூட் பாட்டியாலா
  • விடுமுறை நாட்கள் (Holidays)
  • கீழே பூமிக்கு (Down to Earth)

மேற்கோள்கள் தொகு

  1. "At 17, Ginni Mahi has brought Dalit politics to music and become a Punjabi pop sensation". Scroll.in. 25 July 2016 10 June 2017 அன்று. பரணிடப்பட்டது.. Error: If you specify |archivedate=, you must also specify |archiveurl=. https://video.scroll.in/812422/watch-at-17-ginni-mahi-has-brought-dalit-politics-to-music-and-become-a-punjabi-pop-sensation. 
  2. https://www.m.dw.com/en/global-media-forum-2018-global-inequalities-and-the-digital-future/a-44122976?xtref=https%253A%252F%252Fwww.google.co.in%252F[தொடர்பிழந்த இணைப்பு]
  3. https://www.youtube.com/watch?v=ok5MXktGGAk
  4. Kuruvilla, Elizabeth. "Ginni Mahi: The rise of a brave singer". Live Mint. http://www.livemint.com/Leisure/vInFgOP6POSxxOOznQ7qzO/The-rise-of-a-brave-singer.html. பார்த்த நாள்: 2019-04-27. 
  5. Bhasin, Shivani. "Meet Ginni Mahi, the Young Punjabi Dalit Singer Spreading Ambedkar's Message". Ladies Finger இம் மூலத்தில் இருந்து 2019-04-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190417003950/http://theladiesfinger.com/ginni-mahi-dalit-singer/. பார்த்த நாள்: 2019-04-27. 
  6. Manu, Gayatri. "How 18-Year-Old Ginni Mahi of Punjab Is Singing to End Social Inequality". The Better India. http://www.thebetterindia.com/66560/ginni-mahi-b-r-ambedkar-dalit-assertion/. பார்த்த நாள்: 2017-06-11. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜின்னி_மஹி&oldid=3710773" இலிருந்து மீள்விக்கப்பட்டது