கிரான்ட் பூங்கா (சிகாகோ)
image:Buckingham_Fountain_in_Chicago_at_night_.jpg|thumb|300px| File:Grant Park Chicago map.png|thumb|கிரான்ட் பார்க்கிலுள்ள பக்கிங்கம் நீர்விழ்ச்சி]]
கிரான்ட் பார்க் (முன்னதாக லேக் பார்க்) சிகாகோ லூபில் உள்ள ஒரு பெரிய நகரப்பூங்கா (319 ஏக்கர்கள் or 1.29 km²). சிகாகோவின் நடுவில் இருக்கும் கிரான்ட் பார்க்கில் மில்லிணீயம் பூங்கா, பக்கிங்ஹாம் நீர்வீழ்ச்சி, சிகாகோவின் கலை நிறுவனம் மற்றும் அருங்காட்சியகம் ஆகியவை உள்ளன. அமெரிக்க ஜனாதிபதியும் சிவில் வார் ஜெனரலுமான உலய்ச்செஸ் எஸ். கிரான்ட் என்பவரின் பெயரால் இப்பூங்கா பெயரிடப்பட்டது. வடக்கில் ரான்டொல்ப் தேருவும் தெற்கில் ரூஸ்வேல்ட் சாலையும் மேற்கில் மிச்சிகன் அவென்யு மற்றும் கிழக்கில் மிச்சிகன் குலமும் உள்ளன.
வரலாறு
சிகாகோ நகரின் திட்டப்பணிகள் மிச்சிகன் அவென்யு பகுதிகளை பிரிக்காமல் காலியாக விட்டது. அரசு மிச்சிகன் அவென்யு பகுதி மக்களுக்கு அந்நிலங்கள் காலியாக வைக்கப்படும் என்று உறுதியளித்தது. 1890இல் டியர்போர்ன் கோட்டை சிகாகோவுடன் இணைக்கப்பட்டபோது இந்த நிலங்கள் "பொதுச்சொத்து. என்றென்றும் கட்டடங்கள் இல்லாமல் இருக்க வேண்டும்."[1] என்று அறிவிக்கப்பட்டது
April 29, 1844 ஆம் நாள் சிகாகோ நகராட்சி இப்பகுதியை பூங்காவிற்கு என்று ஒதுக்கி இதற்கு லேக் பார்க் என்று பேரிட்டது.
இடம்
சிகாகோவின் வாசல்படி என்று அடிக்கடி அழிக்கபடுகிறது.
நிகழ்ச்சிகள்
- 1911இல் சிகாகோவின் ஏவியேசன் சந்திப்பு இங்கே நடந்தது.
- 1968இல் சிகாகோ போலீசிற்கும் மக்களுக்கும் இங்கே சண்டை நடந்தது.
- 1979இல் போப் ஜான் பால் II இங்கே தொழுகை நடத்தினார்.
- 2008இல் அமெரிக்க ஜனாதிபதியான பரக் ஒபாமா தனது தேர்தல் வெற்றி பற்றிய பேச்சை இங்கே கொடுத்தார்.
- வருடம் முழுவதும் இப்பூங்கா பல நிகழ்ச்சிகளை நடத்துகிறது.
- “டேஸ்ட் ஓப் சிகாகோ” ஒரு பெரிய சாப்பாட்டு திருவிழா மற்றும் பாட்டுக்கச்சேரியாகும். தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும்.[2]
அம்சங்கள்
பக்கிங்ஹம் நீர்விழ்ச்சி
கிரான்ட் பார்க்கின் நடுவில் இருப்பது உலகின் பெரிய நீர்விழ்ச்சிகளில் ஒன்றான பக்கிங்ஹாம் நீர்விழ்ச்சியாகும்.[3] ரோகோகோ கல்யாண கேக் பாணியில் கட்டப்பட்ட இந்த நீர்விழ்ச்சி 1927 ஆம் ஆண்டு கேடி பக்கிங்ஹாமின் கேடி ஸ்டர்ஜெஸ் என்பவர் சிகாகோ நகரத்திற்கு பரிசாக தந்தார். இந்நீர்விழ்ச்சி ஏப்ரில் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 20 நிமிட இடைவெளியில் தண்ணீரை வெளியேற்றுகிறது. அம்மாதங்களில் காலை ஒன்பது மணி முதல் பத்து மணி வரை மற்றுமே இயங்கும்.
குறிப்புகள்
- ↑ Macaluso, p. 12
- ↑ "Chicago's Largest Festivals". ChicagoBusiness. Crain Communications, Inc. 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-08-08.
- ↑ "Chicago Park District". பார்க்கப்பட்ட நாள் 2011-2-28.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)