சிறீதர் திரையரங்கம்

இந்தியாவின் கொச்சி நகரத்திலுள்ள ஒரு திரையரங்கம்

சிறீதர் திரையரங்கம் (Sridar Theatre) இந்தியாவின் தென்னிந்திய நகரமான கேரளாவின் கொச்சியில் உள்ளது. கடலை ஒட்டியுள்ள அகலமான பாதையில் உள்ள, சண்முகம் சாலையில் இது அமைந்துள்ளது. சிறீதர் சினிமா என்ற பெயராலும் அழைக்கப்படும் இத்திரையரங்கம் 1964 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. சிறீதர் திரையரங்கம் கேரளாவின் முதல் குளிரூட்டப்பட்ட திரையரங்கம் என்ற சிறப்புக்குரியதாகும்.[1]

சிறீதர் திரையரங்கம்
Sridar Theatre
முகவரிசண்முகம் சாலை, மெரைன் டிரைவ், கொச்சி,
நகரம்கொச்சி, கேரளம்,
நாடுஇந்தியா
உரிமையாளர்செனாய் குடும்பம்
திறப்பு1964
செயல்பட்ட ஆண்டுகள்1964–முதல்
பிற பெயர்கள்சிறீதர் திரையரங்கம்

வரலாறு

தொகு

சிறீதர் திரையரங்கம் 1964 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது, இது செனாய் குடும்பத்தினரின் மூன்றாவது திரையரங்கமாகும். இலக்மன் செனாயின் இறந்த மகனான சிறீதர் செனாய் நினைவாக திரையரங்கத்திற்கு பெயரிடப்பட்டது. அப்போது கேரள ஆளுநரும், பின்னர் இந்தியக் குடியரசுத் தலைவருமான வி.வி.கிரி அவர்களால் சிறீதர் திரையரங்கம் திறக்கப்பட்டது . [2] அப்போது கொச்சியில் உள்ள இத்திரையரங்கில் ஆலிவுட் படங்கள் வெளியாகும். கேரளாவில் டால்பி ஒலி வசதியை அறிமுகப்படுத்திய முதல் திரையரங்கமும் சிறீதர் திரையரங்கம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். கேரளாவில் முதல் முப்பரிமான எண்ணிம படவீழ்த்தி 2009 ஆம் ஆண்டில் சிறீதர் திரையரங்கில் அவதார் திரைப்படத்தின் வெளியீட்டில் வந்தது. [3]

மேற்கோள்கள்

தொகு
  1. M, Sunaya. "A Memory in 70mm" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-17.
  2. "ഷേണായ്മാർ 50 പിന്നിടുമ്പോൾ". 1994. 
  3. "സിനിമാലോകത്തെ ഷേണായിമാർ" (in ஆங்கிலம்). 2021-01-30. பார்க்கப்பட்ட நாள் 2023-07-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீதர்_திரையரங்கம்&oldid=3812052" இலிருந்து மீள்விக்கப்பட்டது