சிறீ பிரவரசேனன்

அல்கான் ஹூன அரசன்

சிறீபிரவரசேனன் (Sri Pravarasena) (ஆட்சிக் காலம் பொ.ச.530-590), காஷ்மீரின் வரலாற்றைக் கூறும் இராஜதரங்கிணியின் ஆட்சிப் பட்டியல்களின் அடிப்படையில் இரண்டாம் பிரவரசேனன் எனவும் அறியப்படும் இவர்,[2] வடமேற்கு இந்தியாவின் காந்தாரதேசம், காஷ்மீர் ஆகிய பகுதிகளில் 6-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த அல்கான் ஹூன வம்சத்தின் ஹூன அரசன் ஆவார். இவரது ஆட்சியானது பொ.ச.530-ஆம் ஆண்டிலிருந்து சுமார் 60 ஆண்டுகள் நீடித்தது.[3][4]

சிறீ பிரவரசேனன்
அல்கான் ஹூன அரசன்
சிறீநகரின் நிறுவனர் என்று கூறப்படும் பிரவரசேனனின் நாணயம். முதுகுப்புறம்: கீழே அமர்ந்திருக்கும் இரண்டு உருவங்களுடன் நிற்கும் அரசன், பெயர் "பிரவரசேனர்". தலைகீழ்: சிங்கத்தின் மீது அமர்ந்துள்ள தேவி. புராணக்கதை "கிடாரன்". ஏறத்தாழ பொ.ச.6- 7ஆம் நூற்றாண்டின் தொடக்கம்.[1]
சிறீ பிரவரசேனன் is located in South Asia
சிறீ பிரவரசேனன்
பிரவரசேனனின் பிரதேசத்தின் தோராயமான இடம்
ஆட்சி530-590
முன்னிருந்தவர்மிகிரகுலன்
பின்வந்தவர்கோகர்ணன்

கல்கணரின் 12-ஆம் நூற்றாண்டின் உரையான இராஜதரங்கிணியின் படி, இரண்டாம் பிரவரசேனன் என்ற அரசன் பிரவரபுரம் (பிரவரசேன-புரம் என்றும் அழைக்கப்படுகிறது) என்ற புதிய தலைநகரை நிறுவினான். நிலப்பரப்பு விவரங்களின் அடிப்படையில், பிரவரபுரம் நவீன நகரமான சிறீநகரைப் போலவே தோன்றுகிறது. பிரித்தானிய தொல்பொருள் ஆராய்ச்சியாளரான ஆரல் இசுடெயின் இந்த அரசரை 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் குறிப்பிடுகிறார்.[3][5] "பிரவரேசம்" என்ற பெயரில் ஒரு கோவிலையும் கட்டினார்.[3][4]

காஷ்மீர், காந்தாரதேசம் போன்ற பகுதியில் ஆண்டு வந்த அல்கான் ஹூன ஆட்சியாளரான மிகிரகுலனுக்குப் பிறகு பிரவரசேனன் ஆட்சிக்கு வந்ததாகக் கருதப்படுகிறார், மேலும் இவர் தோரமணனின் மகனாக இருக்கலாம்.[3]

பிரவரசேனனுக்குப் பின் சிவ பக்தரான கோகர்ணன் என்ற மன்னன் ஆட்சிக்கு வந்தான். பின்னர் அவனது மகனான நரேந்திராதித்ய கிங்கிலன் ஆட்சிக்கு வந்தான்.[3][4] நரேந்திராதித்யாவின் மகன் யுதிஷ்டிரன், அல்கன் ஹூனர்களில் கடைசியாக அறியப்பட்ட ஆட்சியாளராவான்.[3]

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீ_பிரவரசேனன்&oldid=3924985" இலிருந்து மீள்விக்கப்பட்டது