அல்கான் ஹூனர்கள்
அல்கான் ஹூனர்கள் (Alchon Huns) மேலும் அல்கோனோ, அல்க்சன், அல்கான், அலகானா, வால்க்சன் என்றும் அழைக்கப்படும் இவர்கள் , மத்திய ஆசியா மற்றும் தெற்கு ஆசியாவில் பொ.ச. 4 நூற்றாண்டு முதல் பொ.ச.6 ஆம் நூற்றாண்டு அரசுகளை நிறுவிய நாடோடி மக்களாவர். இவர்கள் இராச்சியம் முதலில் பரோபமிசஸில் அமைந்திருந்தாகக் குறிப்பிடப்பட்டு, பின்னர் தென்கிழக்கு, பஞ்சாப் , மத்திய இந்தியா வரையிலும், ஏரண் முதல் கோசாம்பி வரையிலும் விரிவடைந்திருந்தது. இந்தியத் துணைக்கண்டத்தின் மீதான அல்கான்களின் படையெடுப்பு, அவர்களுக்கு முன்பு ஒரு நூற்றாண்டுக்கு முன்பு ஆட்சி செய்து வந்த கிடாரைட்டு ஹுனர்களை ஒழித்தது. மேலும் குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்கும் பங்களித்தது. ஒரு வகையில் இடைக்கால இந்தியாவை முடிவுக்குக் கொண்டு வந்தது. [1]
ஹூனர்களால் இந்தியாவின் மீதான படையெடுப்பு முந்தைய நூற்றாண்டுகளில் யவன ( இந்தோ-கிரேக்கர்கள் ), சாகா ( இந்தோ-சிதியர்கள் ), பலவா ( இந்தோ-பார்த்தியர்கள் ) மற்றும் குசானர் ஆகியோரால் துணைக் கண்டத்தின் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து வருகிறது. அல்கோன் பேரரசு மத்திய மற்றும் தெற்காசியாவில் நிறுவப்பட்ட நான்கு பெரிய ஹுன மாநிலங்களில் மூன்றாவதாக இருந்தது. அல்கோன்களுக்கு முன் கிடாரைட்டுகள் இருந்தனர். பாக்திரியாவில் ஹெப்தலைட்டுகள் மற்றும் இந்து குஷில் நெசாக் ஹுனர்கள் ஆகியோர் வெற்றி பெற்றனர். அல்கோன் அரசர்களின் பெயர்கள் அவர்களின் விரிவான நாணயங்கள், புத்த கணக்குகள் மற்றும் இந்திய துணைக்கண்டம் முழுவதும் உள்ள பல நினைவு கல்வெட்டுகள் ஆகியவற்றிலிருந்து அறியப்படுகின்றன.
அல்கோன்கள் நீண்ட காலமாக ஹெப்தாலைட்டுகளின் ஒரு பகுதியாக அல்லது துணைப்பிரிவாக அல்லது அவர்களின் கிழக்குக் கிளையாகக் கருதப்படுகின்றனர். ஆனால் இப்போது அவை ஒரு தனி அமைப்பாகக் கருதப்படுகின்றன. [2] [3]
சான்றுகள்
தொகு- ↑ Bakker, Hans (2017), Monuments of Hope, Gloom and Glory in the Age of the Hunnic Wars: 50 years that changed India (484–534), Royal Netherlands Academy of Arts and Sciences, Section 4, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-6984-715-3, archived from the original on 2020-01-11, பார்க்கப்பட்ட நாள் 2022-03-21
- ↑ "Note 8: It is now clear that the Hephtalites were not part of those Huns who conquered the land south of the Hindu-Kush and Sind as well in the early 6th century. In fact, this latter Hunnic group was the one commonly known as Alkhon because of the inscriptions on their coins (Vondrovec, 2008)."
- ↑ Rezakhani, Khodadad. "From the Kushans to the Western Turks" (in en). King of the Seven Climes: 207. https://www.academia.edu/32671225.
வெளி இணைப்புகள்
தொகு- Nezak Kings in Zabulistan and Kabulistan பரணிடப்பட்டது 2020-07-26 at the வந்தவழி இயந்திரம் Coin Cabinet of the Kunsthistorisches Museum Vienna
- Coinage of the Hephthalites/ Alchons, Grifterrec