இந்தோ சிதியன் பேரரசு

இந்தோ-சிதியர்கள் அல்லது இந்தோ-சகர்கள் (ஆட்சி காலம்: கி மு 200 முதல் கி பி 400 முடிய) (Indo-Scythian Kingdom) என்ற சொல் நடு ஆசியாவின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளிலிருந்து, இந்திய துணை கண்டத்தின் கந்தகார், பாகிஸ்தான், காஷ்மீர், பஞ்சாப், அரியானா, இராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், பிகார் போன்ற இந்திய துணைக் கண்டப் பகுதிகளில் குடியேறிய சிதியர்கள் எனும் சகர்களையும் குறிக்கும். இந்தோ-சிதியர்கள் கி. மு இரண்டாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து, கி பி நான்காம் நூற்றாண்டு வரை இந்தியத் துணைக்கண்டத்தில் குடியேறினார்கள்.[1]

இந்தோ-சிதியர்கள்
இந்தோ-சகர்கள்

 

 

கி மு 200–கி பி 400 [[குசான் பேரரசு|]]
 

 

உச்சத்தில் இருந்த காலத்தில் இந்தோ-சிதியன் பேரரசு பகுதிகள் (முழுக் கோடுகள்) மற்றும் விரிவாக்கப்பகுதிகள் (புள்ளியிட்ட கோடுகள்)
தலைநகரம் சிகால்
தக்சசீலா
மதுரா
மொழி(கள்) சிதியன் மொழி
பாலி (கரோஸ்தி லிபி)
சமசுகிருதம், பிராகிருதம் (பிராமி லிபி)
சமயம் பௌத்தம்
இந்து சமயம்
பண்டைய கிரேக்க சமயம்
பார்சி
அரசாங்கம் முடியாட்சி
அரசன்
 -  கி பி 85–60 மௌஸ்
 -  கி பி 10 ஹஜாத்திரியா
வரலாற்றுக் காலம் பண்டைய வரலாறு
 -  உருவாக்கம் கி மு 200
 -  குலைவு கி பி 400
Warning: Value not specified for "common_name"

தெற்காசியாவில் சகர்களின் குலத்தில் தோண்றிய முதல் அரசன் மொகா என்பவர், கி. பி முதல் நூற்றாண்டில் காந்தகாரில்அரசை தோற்றுவித்தான். பின் படிப்படியாக மேற்கு இந்தியாவின் பகுதிகளாக இருந்த தற்கால ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளை கைப்பற்றி அரசாண்டார். இந்தோ-சிதியர்கள் குலத்தில் வந்த ஒன்பது அரசர்கள் சசானிஸ்ட் பேரரசை ஆண்டனர். குப்த பேரரசின் இரண்டாம் சந்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்ட, மேற்கு சத்திரபதி பேரரசர் மூன்றாம் ருத்திரசிம்மன், சகர் எனும் கிழக்கு சிதியர்களின் சசானிஸ்ட் பேரரசை கி பி 395இல் வென்றார்.[2]சிதியர்கள் எனும் சகர்களின் அரசு, இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்திய சாதவாகனப் பேரரசர் கௌதமிபுத்திர சதகர்னியால் வெற்றி கொள்ளப்பட்டது முதல், சிதியர்களின் அரசு படிப்படியாக வீழ்ச்சி அடையத் துவங்கியது.[3][4]

பிறகு நான்காம் நூற்றாண்டில் இரண்டாம் சந்திர குப்தரால் நான்காம் நூற்றாண்டில் சகர் எனும் சிதியர்களின் அரசு முழுமையாக வெற்றிக் கொள்ளப்பட்டது.[5]

மகாபாரதம் இதிகாசத்தில் பல இடங்களில், சகர்களை அல்லது சிதியர்களை, ஹூணர்கள், யவனர்கள் போன்று பண்டைய இந்திய இனக்குழுக்களுக்கு தொடர்பில்லாத மிலேச்சர்கள் எனக் குறிப்பிடுகிறது.

இதனையும் காண்கதொகு

படக்காட்சிகள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Indo-Saka". 2016-04-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-04-29 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. India in a Globalised World by Sagarika Dutt p.24
  3. World history from early times to A D 2000 by B .V. Rao: p.97
  4. A Brief History of India by Alain Daniélou p.136
  5. Ancient India by Ramesh Chandra Majumdar p. 234

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தோ_சிதியன்_பேரரசு&oldid=3438453" இருந்து மீள்விக்கப்பட்டது