சிறீ மோதிலால் கன்கையலால் ஃபோம்ரா தொழில்நுட்ப கல்லூரி

சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரி

சிறீ மோதிலால் கன்கையலால் ஃபோம்ரா தொழில்நுட்ப நிறுவனம் (Shree Motilal Kanhaiyalal Fomra Institute of Technology) (எஸ். எம். கே. ஃபோம்ரா தொழில்நுட்ப கல்லூரி என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது) என்பது தமிழ்நாட்டின், சென்னையில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரி ஆகும். இந்த கல்லூரிக்கு புது தில்லியின் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஐஎஸ்ஓ 9001: 2015 சான்றளிக்கப்பட்ட நிறுவனம் ஆகும்.

சிறீ மோதிலால் கன்கையலால் ஃபோம்ரா தொழில்நுட்ப கல்லூரி
குறிக்கோளுரைEnrich & Excel
வகைதனியார் பொறியியல் கல்லூரி
உருவாக்கம்2001
முதல்வர்முனைவர் வி. கிருஷ்ணகுமார், எம்.டெக்., பிஎச்.டி,
அமைவிடம், ,
12°45′51″N 80°12′06″E / 12.764036°N 80.201673°E / 12.764036; 80.201673
சுருக்கப் பெயர்SMK FIT
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்,
இணையதளம்www.smkfomra.net

வரலாறு தொகு

ஸ்ரீ மோதிலால் கன்ஹையலால் ஃபோம்ரா தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது 2001 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. இக்கல்லூரியின் நிறுவனரான மோதிலால் கன்ஹையலால் 1995 ஆம் ஆண்டு அறக்கட்டளையை உருவாக்கினார். இந்தக் கல்வி நிறுவனமானது ஃபோம்ரா குடும்பத்திற்கு சொந்தமானது, இவர் ஃபோம்ரா எலக்ட்ரிகல்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார்.

வளாகமும், அமைவிடமும் தொகு

 
எஸ். எம். கே. போம்ரா முன் காட்சி

இக்கல்லூரியானது சென்னையில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில், கேளம்பக்கத்திற்கு அருகிலுள்ள தையூர் கிராமத்தில், பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது. இந்த கல்லூரி வளாகமானது 25 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது.

நூலகம் தொகு

 
கல்லூரி முதன்மை நூலகம்

இந்த கல்லூரியில் ஒரு தனி கட்டிடத்தில் நூலகம் அமைந்துள்ளது. இது இரண்டு தளங்களுடன் 986 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக, குளிரூட்டப்பட்டதாக உள்ளது. இங்கு பெரிய அளவில் புத்தகங்கள், இதழ்கள் போன்றவை சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இதன் சேகரிப்பில் பரந்த அளவிலான பொறியியல் பாட நூல்கள் மற்றும் பிற தொடர்புடைய ஆய்வுத் துறைகளை உள்ளடக்கியதாக உள்ளது.

கற்பிக்கப்படும் பாடங்கள் தொகு

இக்கல்லூரியில் பின்வரும் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இளநிலை படிப்புகள்:

பி.இ. உயிர் மருத்துவ பொறியியல் (நிரந்தரமாக அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது)

பி.இ. குடிசார் பொறியியல்

பி.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (அண்ணா பல்கலைக்கழகத்துடன் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது)

பி.இ. மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல் (ECE)

பி.இ. மின் மற்றும் மின்னணு பொறியியல் (EEE)

பி.இ. இயந்திரப் பொறியியல் (MECH)

முதுநிலை படிப்புகள்:

எம்.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்

எம்.இ. ஆற்றல் இயக்க பொறியியல்

எம்.இ. பேரளவு ஒருங்கிணைச் சுற்று வடிவமைப்பு

எம்.இ. வெப்ப பொறியியல்

குறிப்புகள் தொகு

1. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-downtown/graduation-day-at-smk-fomra/article3389138.ece

http://timesofindia.indiatimes.com/city/chennai/Upset-over-low-marks-students-go-on-rampage-at-engineering-college/articleshow/7264882.cms

2. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-downtown/smk-fomra-institute-of-technology-honours-students/article4818861.ece

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/students-protest-on-varsity-campus/article1160986.ece

3. http://www.symposiumz.net/colleges/smk-fomra-institute-of-technology பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்

4. http://www.indiastudychannel.com/colleges/10550-SMK-Fomra-Institute-Technology-Chennai.aspx

5. http://www.technicalsymposium.com/technicalsymposium2014_jan_EXOUSIA.html#. U608MWNyV9s

6. http://www.bharatstudent.com/cafebharat/photo_gallery_2-Tamil-Events-Namitha_Pongal_Celebration_at_SMK_Fomra_college-photo-galleries-3,8,23910.php பரணிடப்பட்டது 2014-04-25 at the வந்தவழி இயந்திரம்

7. http://www.newindianexpress.com/education/student/article1406553.ece

8. http://www.thehindubusinessline.com/industry-and-economy/keep-the-faith-love-the-job/article3384608.ece

9. http://www.samachar.com/science-and-engineering-exhibition-at-smk-fit-nbemK0bijag.html[தொடர்பிழந்த இணைப்பு]

10. https://archive.today/20140627101050/http://m.newindianexpress.com/chennai/251619

11. http://www.collegesintamilnadu.com/Kanchipuram-Colleges/SMK-Fomra-Institute-of-Technology/Profile/Chengelput/195

12. http://www.technicalsymposium.com/technicalsymposium2014_jan_EXOUSIA.html#. U608LmNyV9s

13. http://smkfomra.net/portal/index.php/department/content/Biomedical%20Engineering பரணிடப்பட்டது 2019-09-23 at the வந்தவழி இயந்திரம்

14. http://smkfomra.net/portal/index.php/department/content/Civil%20Engineering பரணிடப்பட்டது 2019-09-18 at the வந்தவழி இயந்திரம்

15. http://smkfomra.net/portal/index.php/department/content/Computer%20Science%20and%20Engineering பரணிடப்பட்டது 2019-09-18 at the வந்தவழி இயந்திரம்

16. http://smkfomra.net/portal/index.php/department/content/Electrical%20and%20Electronics%20Engineering பரணிடப்பட்டது 2019-09-28 at the வந்தவழி இயந்திரம்

17. http://smkfomra.net/portal/index.php/department/content/Electronics%20and%20Communication%20Engineering பரணிடப்பட்டது 2019-09-18 at the வந்தவழி இயந்திரம்

18. http://smkfomra.net/portal/index.php/department/content/Mechanical%20Engineering பரணிடப்பட்டது 2019-09-09 at the வந்தவழி இயந்திரம்

19. http://smkfomra.net/portal/index.php/department/content/Master%20of%20Business%20 நிர்வாகம் பரணிடப்பட்டது 2016-03-27 at the வந்தவழி இயந்திரம்

20. http://smkfomra.net/portal/index.php/pages/Campus%20Life/Campus%20Life பரணிடப்பட்டது 2019-09-17 at the வந்தவழி இயந்திரம்

21. http://smkfomra.net/portal/index.php/pages/content/Scholarship பரணிடப்பட்டது 2019-09-06 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள் தொகு