சிறீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி
சிறீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி கோயம்புத்தூரில் இயங்கிவரும் தனியார் பொறியியல் கல்லூரியாகும். இக்கல்லூரியானது 1994இல் எஸ. என். ஆர் அறக்கட்டளையால் 1994இல் துவக்கப்பட்டது. தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற இக்கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது. இக்கல்லூரி, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் அனுமதியுடன் செயற்பட்டு வருகிறது.
கல்லூரியின் சின்னம் மற்றும் முன்பக்க தோற்றம் | |
குறிக்கோளுரை | Enlightenment through Education |
---|---|
வகை | தனியார் கல்லூரி (தன்னாட்சி கல்லூரி) |
உருவாக்கம் | 1994 |
முதல்வர் | பேரா. என். ஆர். அலமேலு |
அமைவிடம் | , , 11°06′06″N 76°57′59″E / 11.101768°N 76.966435°E |
சுருக்கப் பெயர் | எஸ்ஆர்இசி, ராமகிருஷ்ணா கல்லூரி |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் |
இணையதளம் | http://www.srec.ac.in |
இக்கல்லூரியில் பத்து இளநிலைப் பொறியியில் படிப்புகளும், எட்டு முதுநிலைப் படிப்புகள் மற்றும் வணிக மேலாண்மைப் பிரிவு ஆகியன உள்ளன. 2019 ஆண்டு காலக்கட்டத்தில் இக்கல்லூரியியில் 4,400 மாணவர்கள் பயின்றுவர, 279 ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர்.