சிறீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
சிறீ வெங்கடேசுவரா கலை அறிவியல் கல்லூரி (Sri Venkateshwara College of Arts and Science at Peravurani)[1] என்பது தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் செயல்படும் சுயநிதி, மகளிர், கலை அறிவியல் கல்லூரி ஆகும்.
குறிக்கோளுரை | வையக் தலைமை கொள் |
---|---|
வகை | சுயநிதி, மகளிர், கலை அறிவியல் |
உருவாக்கம் | 1998 |
கல்வி பணியாளர் | 76 |
அமைவிடம் | , , |
வளாகம் | பேராவூரணி |
சேர்ப்பு | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
இணையதளம் | [1] |
அறிமுகம்
தொகுதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணியில் துவங்கப்பட்ட சிறீ வெங்கடேசுவரா கலை அறிவியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரியாகும்.[2] 1998ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கல்லூரி 2010-2011 கல்வியாண்டு முதல் மகளிர் கல்லூரியாக செயல்படுகிறது. இக்கல்லூரியினை புது தில்லி, பல்கலைக்கழக மானியக் குழு, யுஜிசி சட்டம் பிரிவு 12பியின் படி மானியங்களைப் பெறுவதற்கு தகுதி பெற்ற கல்லூரியாக அங்கீகரித்துள்ளது.[3]
அமைவிடம்
தொகுஇக்கல்லுரி பேராவூராணி தொடருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் பேராவூராணி-அறந்தாங்கி மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
படிப்புகள்
தொகுசிறீ வெங்கடேசுவரா கலை அறிவியல் கல்லூரியில் 15 இளங்நிலை 9 முதுநிலை பாடங்களில் படிப்பினை வழங்குகின்றது.
இளநிலை
தொகு- தமிழ்
- ஆங்கில இலக்கியம்
- வரலாறு
- பொருளியல்
- வணிகவியல்
- வணிகவியல் (கணினி பயன்பாடு)
- வணிக நிர்வாகவியல்
- கணிதம்
- இயற்பியல்
- வேதியியல்
- கணினி அறிவியல்
- தகவல் தொழில்நுட்பவியல்
- நுண்ணுயிரியல்
- உயிர்தொழில்நுட்பவியல்
- கணினி பயன்பாடு
முதுநிலை
தொகு- தமிழ்
- ஆங்கில இலக்கியம்
- வணிகவியல்
- கணினி அறிவியல்
- கணிதம்
- இயற்பியல்
- வேதியியல்
- நுண்ணுயிரியல்
- வணிக நிர்வாகவியல்