சிறுநீரில் குருதி
மருத்துவத்தில் சிறுநீரில் குருதி அல்லது குருதிச் சிறுநீர் (hematuria, haematuria) என்பது சிறுநீருடன் குருதி கலந்து வெளிப்படும் ஒரு நிலையாகும்[1]. பொதுவாக சிறுநீரில் இரத்தச் செவ்வணுக்கள் காணப்படுவதில்லை.
குருதிச் சிறுநீர் Hematuria | |
---|---|
நுணுக்குக்காட்டியில் குருதிச்சிறுநீர் | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
ஐ.சி.டி.-10 | N02., R31. |
ஐ.சி.டி.-9 | 599.7, 791.2 |
நோய்களின் தரவுத்தளம் | 19635 |
MedlinePlus | 003138 |
ஈமெடிசின் | ped/951 |
Patient UK | சிறுநீரில் குருதி |
MeSH | D006417 |
இதில் இரு வகையான நிலைகள் காணப்படும். செங்குருதியணுக்கள் சாதாரணமாகவே சிறுநீரில் தெரியுமானால் அது மிகுதியான சிறுநீரில் குருதி (gross haematuria) எனவும், நுண்ணோக்கியினூடாகப் பார்க்கும்போது மட்டுமே தெரியுமானால், அது நுண்ணளவு சிறுநீரில் குருதி (microscopic haematuria) எனவும் அழைக்கப்படும்[1]. மருத்துவரைக் கண்டு மருத்துவம் மேற்கொள்ள வேண்டுவது மிகவும் அவசியமானது.
சூழிடர் காரணிகள்தொகு
பொதுவான சூழிடர் காரணிகள் பல ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன. பொதுவான சூழிடர் காரணிகளாக அடையாளம் காணப்பட்டவை:[2]
- பொதுவாக 50 வயதினைத் தாண்டியவர்களிடம் அதிகம் காணப்படுகிறது.
- பெண்களைவிட ஆண்களிடம் அதிகம் காணப்படுகிறது.
- சிறுநீர்த்தொகுதியில் புற்றுநோய் அல்லது கட்டி இருப்பது.
வேறும் சில நிலைகள் சூழிடர் காரணிகளாகக் காணப்பட்டுள்ளன[3].
- மீண்டும் மீண்டும் தோன்றும் சிறுநீரகக் கல், சிறுநீர்வழித் தொற்று உள்ள நிலைமைகள்.
- புகைத்தல் பழக்கம் கொண்டவர்கள்
- பென்சீன், மற்றும் சிலவகை சாயப் பொருட்களுடன் வேலை செய்பவர்கள்
- முன்னிற்கும் சுரப்பி வீக்கம் கொண்டவர்கள்
தோற்றுவிக்கும் காரணிகள்தொகு
பல்வேறு காரணிகளால் இந்தக் குருதிச் சிறுநீர் நிலைமை தோற்றுவிக்கப்படுகின்றது.[4][5]
- சிறுநீர்த்தொகுதியில் தோன்றும் சிறுநீரகக் கல்
- சிறுநீர்வழித் தொற்று
- சிறுநீர்த்தொகுதியில் அல்லது முன்னிற்கும் சுரப்பியில் புற்றுநோய்
- சிறுநீர்த்தொகுதியில் ஏற்படும் அழற்சி
- குருதியுறைதலில் ஏற்படும் கோளாறுகள்
மேற்கோள்கள்தொகு
- ↑ 1.0 1.1 "Hematuria (Blood in the Urine)" NIH Publication No. 12–4559. The National Institute of Diabetes and Digestive and Kidney Diseases (March 2012, updated April 16, 2012). பார்த்த நாள் மே 14, 2015.
- ↑ Mariani AJ1, Mariani MC, Macchioni C, Stams UK, Hariharan A, Moriera A (Feb 1989). "The significance of adult hematuria: 1,000 hematuria evaluations including a risk-benefit and cost-effectiveness analysis.". J Urol. 141 (2): 350-55. http://www.ncbi.nlm.nih.gov/pubmed/2492350.
- ↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்."". Urology, Comprehensive, Medical Centre, PLLC. Comprehensive Medical Center. பார்த்த நாள் மே 14, 2015.
- ↑ "Haematuria". Patient.co.uk. பார்த்த நாள் மே 14, 2015.
- ↑ "Blood in the urine (haematuria)". The British Association of Urological Surgeons. The British Association of Urological Surgeons Linited. பார்த்த நாள் மே 14, 2015.