சிறுவந்தாடு லட்சுமிநாராயணப்பெருமாள் கோயில்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்

சிறுவந்தாடு லட்சுமிநாராயணப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், சிறுவந்தாடு என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு லட்சுமிநாராயணப்பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விழுப்புரம்
அமைவிடம்:பெருமாள்கோயில் தெரு, சிறுவந்தாடு, விழுப்புரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:விழுப்புரம்
மக்களவைத் தொகுதி:விழுப்புரம்
கோயில் தகவல்
மூலவர்:லட்சுமிநாராயணப்பெருமாள்
தாயார்:கனகவள்ளி தாயார்
சிறப்புத் திருவிழாக்கள்:4 ஆம் சனி சாமி வீதி உலா

அமைவிடம் தொகு

புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் வளவனூரிலிருந்து மடுக்கரை செல்லும் சாலையில் சிறுவந்தாடு கிராமம் உள்ளது. இந்த ஊரில்தான் இக்கோயில் அமைந்துள்ளது.

வரலாறு தொகு

கள்ந்திர தோசத்தால் பாதிக்கபட்ட பராந்தக சோழன் லட்சுமிநாராயணப்பெருமாளை சிவந்தாடில் பிரதிட்டை செய்து வழிபட்டான். இதனால் அவனைப் பீடித்த தோசம் நீங்கி ஏற்றம் பெற்றான். அதன்பின்னர் இக்கோயில் சோழன் கோப்பெருஞ்சிங்கனால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. இக்கோயிலுக்கு விஜயநகர மன்னர் அச்சுதராயர் திருப்பணி செய்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.[2]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயில் மண்டபமானது கருங்கற்கலால் அமைக்கபட்டுள்ளது. விமானம் சுதையால் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் கருவறையில் மூவலரான பெருமாள் சுகாசனத்தில் அமர்ந்து, தாயார் இலக்குமியை இடது மடியில் இருத்தியுள்ளார். தாயார் வலக்கையில் பெருமளுடன் இணைந்த நிலையில் இடக்கையில் தமரையை ஏந்தி உள்ளார்.[2]

கருவறை எதிரில் கருடாழ்வார் வீற்றிருக்கிறார். அர்த்த மண்டபத்தில் கனகவல்லித் தாயர்ருக்கு தனி சந்நிதி உள்ளது. மேலும் கோதண்டராமர், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் போன்றோருக்கு உபசன்னதிகள் உள்ளன.[2]

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள் தொகு

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. புரட்டாசி மாதம் 4 ஆம் சனி சாமி வீதி உலா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)
  2. 2.0 2.1 2.2 அருள்பாலிக்கும் லட்சுமிநாராயணப் பெருமாள் (2016). தி இந்து பொங்கல் மலர் 2016. சென்னை: இந்து தமிழ். பக். 55. 
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)