சிறு ஆர். என். ஏ

சிறு ஆர்.என்.எ (siRNA or short interfering RNA) என்பது 21-25 அளவுள்ள ஒரு ஓரிழை ஆர்.என்.எ ஆகும். இவைகள் குறு ஆர்.என்.ஏ வில் இருந்து வேறுபட்டவையாகும். சிறு மற்றும் குறு ஆர்.என்.எ க்களில் சில ஒற்றுமைகள் இருந்தாலும், உருவாக்கத்திலும் ,செயலாக்கத்திலும் சில வேறுபாடுகள் உள்ளன. சிறு ஆர்.என்.எ (siRNA) நோய் எதிர்த்து போராடும் ஒரு அரண் போன்ற அமைப்பகாக செயல்படுகிறது.

ஆர்.என்.ஏ குறுக்கீடுகள் (RNA interference) (விலங்கு உயிரணுக்களில்) அல்லது மரபணு ஒடுத்தல் (Post-transcriptional gene silencing)(பயிர்களில்) அல்லது கொல்லுதுதல் (quelling) (பூஞ்சைகளில்) விளக்கும் படம்.

கட்டமைப்பு தொகு

தீ நுண்மம் (வைரசு) டி. என். எ, ஆர்.என்.எ தீ நுண்மம் என பகுக்கப்படுகிறது. ஆர்.என்.எ தீ நுண்மமோ மேலும் ஓரிழை மற்றும் ஈரிழையாக நுண்மமாக பிரிக்கப்படுகிறது. இவைகள் ஒரு உயிர்னத்தில் உள் சென்றவுடன், அவைகளின் கூடுகள் (Capsids) களையப்பட்டு , நேரடியாகவோ (நேர்மறை நுண்மம், + strand) அல்லது எதிர்மறை இழை நேர்மறை இழையாக மாற்றப்படும். பின்னர் தனது மரபணுக்களை வெளிப்படுத்தி , பல்கிபெருக ஆயத்தபடுகிறது. இப்படியாக தனது மரபு இழையெய் நகலாக்கும் பொழுது , சில நிலைகளில் ஓரிழை ஆர்.என்.எ, ஈரிழை ஆர்.என்.எ ஆக மாற்றப்படும்.

சில தீ நுண்மங்கள் ஈரிழை யாக (ரியோ நுண்மம்) காணப்படும். எப்போழுதுஎல்லாம் ஆர்.என்.எ ஈரிழையாக மாற்ற படுகிறதோ, அவைகளை 21-25 துகள்களாக வெட்டி தள்ளுவதற்கு டைசர் (dicer) என்கிற நொதி வருகிறது. இவ்நொதி ஆர்.என்.எ சு என்கிற (RNAse), ஆர்.என்.எ களை வெட்டி களைய பயன்படும்) என்னும் பிரிவில் வரும் நொதியாகும். டைசர் நொதி, ஒரு பாதுகாப்பு அரணாக, தீ நுண்மகளின் ஈரிழை ஆர்.என்.எ. களை களைந்து (21-25 nucleotides), பல்கி பெருகாமல் பார்த்து கொள்ளும். இந்த 21-25 துகள்கள் சிறு ஆர்.என்.எ என அழைக்கப்படும்.

 
மரபணு ஒடுத்தலையும், மரபணு ஓடுத்தலின் ஒடுக்கியாக செயல்படும் தீ நுண்ம புரதங்களை விளக்கும் படம். நன்றி:Virology,2007 Bisaro

சிறு ஆர்.என்.எ மேலும் பல புரதங்களோடு இணைந்து ஒரு கலவையகாக மாற்றம் அடைகிறது . இக்கலவை ரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவை (RISC, RNA-induced silencing complex) என பெயர்பெரும் .

இக்கலவை, சிறு ஆர்.என்.எ களை அதற்குரிய மரபணு பகுதிகளில் ( target genes) இணைய (bind) உதவிபுரிகிறது. சிறு ஆர்.என்.எ கள் அதற்குரிய மரபணு பகுதிகளில் ( target genes, ex. virus genes) நேர்த்தியான பிணைப்புகளோடு (near complementarity) , இணைந்து ஒரு பிரைமர் (primer) காக செயல்படுகிறது. இவ் பிரைமர் இணைந்த இடங்களை ஆர்.என்.எ சார்ந்த ஆர்.என்.எ பாலிமரசு ஒரு தொடர் வினைபுரிந்து ஈரிழை ஆர்.என்.எ வாக மாற்றி விடுகிறது.

மறுபடியும் இவ் ஈரிழையெய் டைசர் வெட்டி ஒரு முழு மரபணு அழிவை நிறைவு செய்கிறது. இதனால் வைரஸ்கள் பல்கி பெருகமால் கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. இந் நிகழ்விற்கு மரபணு ஒடுக்குதல் (post-transcription gene silencing) என அழைக்கப்படும். மேலும் இந்நிகழ்வு ஆர்.என்.எ அளவில் முடிந்து விடும் . இவ்வழியாக சிறு ஆர்.என்.எ, தீ நுண்ம நோய்களை விரவிடமால் உயிரினத்தை பாதுகாக்க போராடுகிறது.

டி.என். எ தீ நுண்மகளில் மரபணு ஒடுக்குதல் தொகு

மரபணு ஒடுத்தல் அல்லது ஒடுக்குதல் நிகழ்வு டி.என். எ நுண்மகளிலும் நடைபெறுகின்றன. இவ்விடத்தில் எப்படி டி.என்.எ கள் ஈரிழை ஆர்.என்.க ளாக மாற்றப்படும் என சிலருக்கு ஐயம் ஏற்படலாம். அது இயற்கையே.

டி.என்.எ நுண்மங்கள் , தனது மரபணுவை (gene expression) வெளிபடுத்த ஆர்.என்.க வாக மாற்றப்படும். பொதுவாக டி.என்.எ நுண்மங்கள் (DNA virus) தனது மரபணுவை வெளிபடுத்த , நேர்மறை இழையும் (Virion sense) எதிர்மறை இழையும் (complementary sense) பயன்படுத்தும். இவ்வாறு இரு இழைகளும் மரபணு பகுதியாக (RNA transcript) மாற்றப்படும் போது, ஒரு சிறிய பகுதி நேர், எதிர்மறையோடு சில புள்ளிகளில் ஒன்றி இணைந்து, ஈரிழை ஆர்.என்.எ யாக மாற்றப்படும். இவ் ஈரிழைகளை வழாக்கம் போல் டைசர் வெட்டி , தீ நுண்மங்களை பல்கி பெருக விடாமல் பார்த்து கொள்ளும்.

தீ நுண்மங்களின் எழுச்சி தொகு

எல்லாம் சரி. உயிரினத்தில் பல பாதுகாப்பு அரண்கள் உள்ளன . அதைவிட நாம் மரபணு ஒடுக்குதல்என்ற ஆற்றல் மிக்க கருவி உள்ளது என நாம் நினைத்தாலும், உயிரினம் பல நோய்களை எதிர் கொள்கிறது. ஏன் என பொதுவான மாந்தர் எண்ணும்போது, ஆய்வாளர்கள் சிந்திக்காமல் இருப்பார்களா என்ன? ஆம், ஆய்வாளர்களும் பலவகையான ஆய்வுகளைஅண்மையில் மேற்கொண்டனர்.

ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பின் சுருக்கம் தொகு

ஒவ்வொரு தீ நுண்மங்களிலும் சில மரபணுக்கள் (genes) மரபணு ஒடுக்குதல்(post-transcription gene silencing) நிகழ்வினை செயலாக்க விடாமல் தடுத்து ,வைருச்களை பல்கி பெருக துணை புரிகிறது. ஆகையால் இந்த வகையான மரபணுவுக்கு மரபணு ஒடுக்குதலின் ஒடுக்கிகள்(suppressors of post-transcription gene silencing) என பெயர் பெரும்.

வெண்டையின் மஞ்சள் நரம்பு சுருட்டு தீ நுண்மம்(Bhendi yellow vein mosaic virus)ல் மூன்று மரபணுக்கள் (three genes, C2, C4, Beta C1), மரபணு ஒடுக்குதலின் ஒடுக்கிகளாக செயல்படுவது கண்டுபிடிக்க பட்டுள்ளது.

தக்காளி மஞ்சள் இலை சுருட்டு தீ நுண்மத்தின்- சீனா (Tomato yellow leaf curl virus) (C2, C4 ) என்னும் மரபணுவும் தக்காளி மஞ்சள் இலை சுருட்டு தீ நுண்மத்தின்- இசுரல் V2 என்னும் மரபணுவும், மரபணு ஓடுத்தலின் ஒடுக்கியாக செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேல விவரிக்கப்பட்ட அனைத்து வைரசுகளும் செமினிவிரிடீ நுண்மத்தில் வருவது ஆகும். தக்காளி மஞ்சள் இலை சுருட்டு தீ நுண்மத்தை கவனியுக்கள். ஒரே வைரசில் இரு வகையான மரபணு ஒடுக்குதலின் ஒடுக்கிகளாக செயல்படுகின்றன, ஆனால் அவை வளரும் நாடுகள் வேறுபட்டவை.

ஒரு வைரசு வேறு நாடுகளில் வளரும் போது, அந்நாட்டின் தட்ப வெப்ப நிலைமைக்கு ஏற்ப தம்மை தகவமைத்து கொள்கின்றன. (Cassava mosaic வைரஸ்), இந்தியா, இலங்கை, ஆப்ரிக்கா, கிழ்க்கு ஆப்ரிக்கா என பல நாடுகளில் காணப்படுகின்றன . இவைகளில் இரு மரபணுக்கள் (AC2, AC4) மரபணு ஒடுக்குதலின் ஒடுக்கிகள் செயல்படுகின்றன. ஆனால் அவ்விடத்தில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப ஒரு மரபணு வீரியமகவோ அல்லது வீரியம் குறைவாவோ மாற்றி செயல்படுவது அறிய பட்டுள்ளது.

Hc-pro of Poty Virus, 2b of Cucumber mosaic virus, p19 of tombus virus, என பல தீ நுண்மத்தின் மரபணு , மரபணு ஒடுக்குதலின் ஒடுக்கிகளாக செயல்படுவது அறிய பட்டுள்ளன.

கலைச்சொற்கள் தொகு

  • மரபணு ஒடுக்குதல் -post-transcription gene silencing
  • மரபணு ஒடுக்குதலின் ஒடுக்கிகள்-suppressors of post-transcription gene silencing
  • சிறு ஆர்.என்.எ- siRNA or short interfering RNA
  • நேர்மறை நுண்மம்- + strand virus
  • எதிர்மறை நுண்மம்- - strand virus
  • ரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவை-RISC, RNA-induced silencing complex
  • நேர்மறை இழை- Virion sense
  • எதிர்மறை இழை-complementary sense

இவற்றையும் பாக்க தொகு

மேற்கோள்கள்: தொகு

Gopal et al (2007) Differential roles of C4 and βC1 in mediating suppression of post-transcriptional gene silencing: Evidence for transactivation by the C2 of Bhendi yellow vein mosaic virus, a monopartite begomovirus. Virus Research,Volume 123, Issue 1, January 2007, Pages 9–18 .

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறு_ஆர்._என்._ஏ&oldid=2092656" இலிருந்து மீள்விக்கப்பட்டது