சிலந்தி (திரைப்படம்)

2008 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்

சிலந்தி (Silandhi) என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான தமிழ் பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும்.[1] அறிமுக இயக்குநர் ஆதிராஜ் இயக்கிய இப்படத்தில் முன்னா, மோனிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். மேலும் ரியாஸ் கான் துணை வேடத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பின்னர் தெலுங்கில் எர்ர குலாபி என்றும், இந்தியில் ஜால் - தி நெட் என்ற பெயரிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது. மேலும் இப்படமானது கன்னடத்தில் விஜய் ராகவேந்திரா, ஹரிப்பிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ரணதந்திரா என்ற பெயரில் 2014 இல் இயக்குனரால் மறு ஆக்கம் செய்யப்பட்டது.இது திரைப்படம் ஐ நோ வாட் யூ டிட் லாஸ்ட் சம்மர் என்ற ஆங்கில திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டது.[2]

சிலந்தி
இயக்கம்ஆதிராஜ்
இசைநீல் முகர்ஜி
நடிப்புமுன்னா
மோனிகா
ரியாஸ் கான்
ஒளிப்பதிவுபோசியா பாத்திமா
வெளியீடு9 மே 2008 (2008-05-09)
ஓட்டம்160 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சுருக்கம் தொகு

இந்த படம் புது ஜோடிகளான மகேஷ் ( முன்னா ), மோனிகா ( மோனிகா ) ஆகியோரைப் பற்றியது. திருமணத்திற்குப் பின் தேனிலவுக்கு அவர்கள் தனிமையான இடத்தில் உள்ள வீட்டிற்குச் செல்கின்றனர். அந்த வில்லாவில் இயற்கைக்கு மாறான சில விஷயங்கள் நடக்கின்றன.

நடிகர்கள் தொகு

குறிப்புகள் தொகு

  1. "Silanthi is an erotic thriller, says director - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.
  2. https://bangaloremirror.indiatimes.com/entertainment/reviews/movie-review-ranatantra/amp_articleshow/51461778.cms

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலந்தி_(திரைப்படம்)&oldid=3660012" இலிருந்து மீள்விக்கப்பட்டது