சிலாவியப் பேரேரி

சிலாவியப் பேரேரி (Great Slave Lake) கனடாவின் வடமேற்கு ஆட்சிப் பகுதியிலுள்ள இரண்டாவது பெரிய ஏரியாகும். 614 மீ (2,015 அடி) ஆழம் கொண்ட இது வட அமெரிக்காவின் அதிக ஆழம் கொண்ட ஏரியுமாகும். உலக ஏரிகளின் அளவுகளுடன் ஒப்பிடும்போது இது ஒன்பதாவது பெரிய ஏரியாகும். இந்த ஏரி 480 கிமீ (298 மை) நீளமும், 19 தொடக்கம், 109 கிமீ வரையான அகலமும் கொண்டது. மேற்குறித்த ஆட்சிப்பகுதியின் தென் பகுதியில் 28,400 கிமீ² (11,000 ச.மைல்) பரப்பளவைக் கொண்டு இது அமைந்துள்ளது. 2,090 கிமீ³ (501.7 கன மைல்,1.694 பில்லியன் ஏக்கர் அடி). சிலாவே வட அமெரிக்க இந்தியர்களின் (Slavey North American Indians) பெயரைத் தழுவியே இந்த ஏரி அதன் பெயரைப் பெற்றது

சிலாவியப் பேரேரி
சிலாவியப் பேரேரியினதும், அதாபஸ்கா ஏரியினதும் நிலப்படம்.
ஆள்கூறுகள்61°40′N 114°00′W / 61.667°N 114.000°W / 61.667; -114.000
வகைமிகப்பெரிய பனியாற்று ஏரி ஒன்றின் எச்சம்.
முதன்மை வரத்துஹே ஆறு, சிலாவ் ஆறு
முதன்மை வெளியேற்றம்மக்கன்சி ஆறு
வடிநிலப் பரப்பு971,000 km2 (374,905 sq mi)[1]
வடிநில நாடுகள்Canada
அதிகபட்ச நீளம்480 கிமீ (298 மை)
அதிகபட்ச அகலம்109 கிமீ (68 மை)
மேற்பரப்பளவு27,200 km2 (10,502 sq mi)[1]
சராசரி ஆழம்41 m (135 அடி)[1]
அதிகபட்ச ஆழம்614 m (2,014 அடி)[1]
நீர்க் கனவளவுவார்ப்புரு:Km3 to mi3
கரை நீளம்13,057 km (1,900 mi) [1]
கடல்மட்டத்திலிருந்து உயரம்156 m (512 அடி)[1]
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று.

இதற்கு நீர் வழங்கும் ஆறுகளில் முக்கியமானவை ஹே ஆறு (Hay), சிலாவே ஆறு (Slave) என்பனவாகும். இவ்வேரியின் மேற்குக் கரை காடாகக் காணப்படினும், கிழக்குக் கரையும், வடக்கில் நீண்டுள்ள பகுதியும் மரங்கள் வளர முடியாத பகுதியாக உள்ளன. கிரேட் பெயர் ஏரி, அதாபஸ்கா ஏரி என்பவற்றுடன் சிலாவியப் பேரேரியும் சேர்ந்து, பனியாறு உருகியதால் ஏற்பட்ட மிகப்பெரிய ஏரியாக இருந்தன.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Hebert, Paul (2007). Encyclopedia of Earth. Great Slave Lake, Northwest Territories. Environmental Information Coalition, National Council for Science and the Environment. http://www.eoearth.org/article/Great_Slave_Lake,_Northwest_Territories. பார்த்த நாள்: 2007-12-07. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலாவியப்_பேரேரி&oldid=3759388" இலிருந்து மீள்விக்கப்பட்டது