சில்பா மோகன் ரெட்டி
சில்பா மோகன் ரெட்டி (Silpa Mohan Reddy) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச அரசின் வீட்டுவசதித் துறையின் முன்னாள் அமைச்சர் ஆவார். இவர் நந்தியால் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அரசியல்
தொகுரெட்டி, என். ஜி. ரங்கா வேளாண் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அன்னை தெரேசாவுடன் இணைந்து இந்திய அரசின் தேசிய குடிமக்கள் விருதைப் பெற்றுள்ளார். [1] பின்னர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார்.
நந்தியால் விவசாயிகள் சங்கத்தின் கௌரவத் தலைவராகவும் இருந்தார். 2004 சட்டமன்றத் தேர்தலில், போட்டியிட்டு தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரும் அமைச்சருமான என். எம். டி. பரூக்கை விட 49,500 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். 2009 தேர்தலில், இவர் சுப்பா ரெட்டியை விட 32,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் [2]
அரசியல் தவிர, ரெட்டி தனது சகோதரர் சில்பா சக்ரபாணி ரெட்டியுடன் சேர்ந்து அசையா சொத்து வணிகமும் செய்து வருகிறார். இந்த நிறுவனம் ஏழைகளுக்கு வட்டியில்லா நிதியுதவியுடன் உதவ முயல்கிறது. [3]
பின்னர், இவர் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து 2014-ம் ஆண்டு போட்டியிட்டார். அத் தேர்தலில் பூமா நாகி ரெட்டியிடம் தோல்வியடைந்தார். 2017 அன்று ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் டிடிபியில் இருந்து விலகி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மோகன் ரெட்டி, 2017ல் நடைபெற்ற நந்தியால் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டார் [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Publication in Eenadu, Vartha dailies during 1997
- ↑ eci.nic.in/2004
- ↑ The Times of India (8 August 2017). "Silpa Mohan Reddy" (in en) இம் மூலத்தில் இருந்து 19 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220119152029/https://timesofindia.indiatimes.com/politics/silpa-mohan-reddy/articleshow/59970002.cms. பார்த்த நாள்: 19 January 2022.
- ↑ Deccan Chronicle. "YSRC fields Shilpa Mohan Reddy for Nandyal seat".