சில்லை
தினைக்குருவி அல்லது சில்லை எனப்படும் குருவிகள் சிட்டுக் குருவியை விடச் சிறியது. தேன்சிட்டை விட உருவத்தில் சற்றே பெரியது. ஆங்கிலத்தில் Munia என்று அழைப்பர்.[1][2][3]
தினைக்குருவிகள் கிட்டத்தட்ட வருடம் முழுவதுமே இனப்பெருக்கம் செய்யும். இவை புல், வைக்கோல் இவற்றைக் கொண்டு பந்து போன்ற கூட்டினை அமைக்கும். பந்துக்குள் நுழைய பக்க வாட்டில் ஒரு வட்ட வடிவ நுழைவாயில் அமைக்கப்பட்டிருக்கும். தானியங்களைத் தின்று வாழும் இந்தப் பறவைகள், கூட்டம் கூட்டமாக வாழும் இயல்பு கொண்டவை.
நிலக்கரி சுரங்கங்களில் வெடி வைத்துத் தகர்த்த பின் அந்த இடத்தில் ஆட்களுக்கு அபாயம் விளைவிக்கக் கூடிய விஷ வாயு இருக்கிறதா என்று கண்டறிய ஒருவர் ஒரு கூண்டில் தினைக்குருவியை எடுத்துக் கொண்டு முன்னே செல்வார். தினைக்குருவியின் தலை சாய்ந்து உயிர் விட்டாலோ அல்லது உயிர் விடும்போல் தோன்றினாலோ உடனே ஆட்கள் எல்லோரும் பின்வாங்கி விடுவார்கள். இம்முறை ஐம்பதுகளில் பழக்கத்தில் இருந்து வந்தது.
தினைக்குருவிகளின் வகைகள்
தொகு- நெல்லுக் குருவி என்றழைக்கப்படும் கருப்புத் தலை கொண்ட கருந்தலைச் சில்லை (Black-headed munia)[4]
- சிவப்பு ராட்டினம் என்ற பெயர் கொண்ட சிவப்புச் சில்லை (Red munia),
- பொரி ராட்டினம் என்றழைக்கப்படும் புள்ளிச் சில்லை (Spotted munia).
- வெள்ளை ராட்டினம் எனப் பெயர் கொண்ட வெள்ளை முதுகுகொண்ட வெண்முதுகுச் சில்லை (White-backed munia)
- வாயலாட்டான் அல்லது வெள்ளி மூக்கான் என்றழைக்கப்படும் இந்திய வெண்தொண்டைச் சில்லை (White-throated munia)
- கருப்புத் தொண்டை கொண்ட கருந்தொண்டைச் சில்லை (Black-throated Munia)
மேற்கோள்கள்
தொகு- ↑ New Oxford American Dictionary (2nd ed., 2005), p. 1032.
- ↑ Pillai, N.G. (1968). "The green algae, Spirogyra sp., in the diet of the White-backed Munia, Lonchura striata (Linn.)". The Journal of the Bombay Natural History Society 65 (2): 490–491. https://www.biodiversitylibrary.org/page/48068013.
- ↑ Avery, Michael L. (1980). "Diet and breeding seasonality among a population of sharp-tailed munias, Lonchura striata in Malaysia". The Auk 97 (1): 160–166. doi:10.1093/auk/97.1.160. https://sora.unm.edu/sites/default/files/journals/auk/v097n01/p0160-p0166.pdf.
- ↑ பறவைகளைக் கொண்டாடுவோம்தி இந்து தமிழ் 9 மே 2015