கருந்தொண்டைச் சில்லை

கருந்தொண்டைச் சில்லை
Lonchura kelaarti kelaarti
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
எஸ்டுரில்டிடே
பேரினம்:
இனம்:
உ. கெலார்தி
இருசொற் பெயரீடு
உலோஞ்சுரா கெலார்தி
(ஜெர்டன், 1863)

கருந்தொண்டைச் சில்லை (Black-throated munia) தென்மேற்கு இந்தியா மற்றும் இலங்கையில் காணப்படும் ஒரு பசாரிபார்மிசு வரிசையை சார்ந்த சிற்றினம் ஆகும். இவை தென்மேற்கு இந்தியாவில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலும் இலங்கையிலும் காணப்படுகிறது.

உடலமைப்பு

தொகு

கருந்தொண்டைச் சில்லையின் உடல் நீளமானது சுமார் 10 செ. மீ. ஆகும். இதன் தலை, இறக்கைகள், வால் ஆகியன சாக்லெட் பழுப்பு நிறத்திலும், முதுகுப் பகுதி பழுப்பு நிறமாகவும், வால் போர்வை இறகுகள் சற்று வெளுத்துக் காணப்படும். கன்னம், தொண்டை, மார்பு ஆகியன நல்ல பழுப்பாக இருக்க வயிறு வாலடி ஆகியன இளஞ்சிவப்புத் தோய்ந்த பழுப்பாக இருக்கும்.

காணப்படும் பகுதிகள்

தொகு

தமிழ்நாட்டில் தென்மேற்கு மலைப் பகுதிகளில் ஆண்டு முழுதும் காணப்படும் இது கோடை காலத்தில் வடக்கே உள்ள நீலகிரி மலைப் பகுதிக்கும் வலசை வருகின்றது. பிற சில்லைகளைப் போல வறண்ட நிலங்களை விரும்பாத இது மலைப் பாங்கான நிலப் பகுதிகளையும் நீர் வளமிக்க பகுதிகளையும் விரும்பித் திரியும்.

 
கருந்தொண்டைச் சில்லை

உணவு

தொகு

புல், விதைகள், நெல், களையாக வளர்ந்துள்ள செடிகளின் விதை ஆகியவையே இதன் முக்கிய உணவாக உள்ளது. இதன் பழக்க வழக்கங்கள் பிற சில்லைகளைப் போன்றதே.

இனப்பெருக்கம்

தொகு

ஜூலை முதல் டிசம்பர் வரை மூங்கில் இலை புல்லின் அகன்ற இலை ஆகியன கொண்டு பந்து வடிவிலான கூட்டினை அமைக்கும். கூட்டினுள் மெத்தென்று ஆக்க வைக்கப்பட்ட புல்லின் பூவோடுகூடிய இனுக்குகள் நுழைவாயிலுக்கு வெளியே குழல் அமைப்பில் நீட்டிக் கொண்டிருக்கும். சிறுமரங்களின் வெளிப்பட நீண்டிருக்கும் கிளைகளிடையே தரையிலிருந்து 4மீ. ஊயரத்துக்கு உள்ளாக இதன் கூடு அமைந்திருக்கும் 3 முதல் 8 வரை முட்டைகள் இடும்.[2]

பெயரிடல்

தொகு

விலங்கியல் அறிஞர் எட்வர்ட் பிரடெரிக் கெலார்ட் நினைவாக இந்த சில்லையின் இருசொற் பெயரீல் 1863-ல்[தாமஸ் சி. ஜெர்டன் என்பவரால் உலோஞ்சுரா கெலார்தி என அழைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Lonchura kelaarti". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. முனைவர் க.ரத்னம். 2002. தமிழ்நாட்டுப் பறவைகள். மணிவாசகர் பதிப்பகம். பக்கம் 152
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருந்தொண்டைச்_சில்லை&oldid=3756881" இலிருந்து மீள்விக்கப்பட்டது