சில் சீனா
சில் ஜெனா ("நாற்பது படிகள்"), சில்சினா அல்லது செஹெல் ஜினா (Chil Zena) என்பது காந்தார நகரின் மேற்கு எல்லையில் உள்ள ஒரு மலைப்பகுதி ஆகும். இதன் உச்சிக்குச் செல்ல நாற்பது கல் படிகள் உள்ளன. எனவே இது இப்பெயரைப் பெற்றது. இதிலிருந்து காந்தார நகரத்தைக் காணும்போது விரிந்த சூழ்புலக் காட்சியை அளிக்கிறது. [1]1738 இல் பாரசீகத்தின் நாதிர் ஷாவால் அழிக்கப்பட்ட பழைய காந்தாரத்தின் பழைய கோட்டையின் வடக்குப் பகுதியில் சில் செனா அமைந்திருந்தது. [2]
சில் சீனா | |
---|---|
ஆயத்தொலைகள் | 31°36′55″N 65°39′49″E / 31.61528°N 65.66361°E |
வகை | Mountainous outcrop |
மலைப்பகுதியில் பேரரசர் அசோகரின் காந்தார இருமொழிக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதற்காக சில் செனா நன்கு அறியப்படுகிறது. இது இன்னும் மலைப்பகுதியின் திறந்தவெளி வளாகத்தில் அமைந்துள்ளது. [1]சில் செனாவில் உள்ள இந்த கல்வெட்டானது கிமு 3 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியின் அருகில் கிரேக்க மக்கள் இருந்ததை உறுதிப்படுத்த உதவியது. அத்துடன் வடமேற்கு இந்திய துணைக்கண்டத்தின் மீது அசோகரின் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தவும் உதவியது. அதனால் காந்தாரம் மற்றும் அதன் பகுதியான அரக்கோசி போனவற்றில் அசோகரின் ஆட்சிப்பரப்பில் இணைத்ததாகக் கருதப்படுகிறது. [1]
சில் சினாவில் பின்னர் பேரரசர் பாபரின் (1526-1530) வெற்றிகளைப் பற்றிய பல கல்வெட்டுகள் செதுக்கப்பட்டன. இவை அவரின் மகன் உமாயூனால் செதுக்கப்பட்டன. [1]
குறிப்புகள்
தொகு
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Dupree, L. (2014). Afghanistan. Princeton University Press. p. 286. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781400858910. பார்க்கப்பட்ட நாள் 2016-11-27.
- ↑ British Library Online