சிவகங்கை மறைமாவட்டம்
சிவகங்கை மறைமாவட்டம் என்பது சிவகங்கை புனித மரியன்னை பேராலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் மதுரை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.
சிவகங்கை மறைமாவட்டம் | |
---|---|
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
பெருநகரம் | மதுரை |
புள்ளிவிவரம் | |
பரப்பளவு | 10,448 km2 (4,034 sq mi) |
மக்கள் தொகை - மொத்தம் - கத்தோலிக்கர் | (2004 இன் படி) 2,502,340 177,868 (8.1%) |
விவரம் | |
வழிபாட்டு முறை | இலத்தீன் ரீதி |
கதீட்ரல் | அலங்கார அன்னை கதீட்ரல் |
தற்போதைய தலைமை | |
திருத்தந்தை | பிரான்சிசு |
ஆயர் † | லூர்து ஆனந்தம் |
வரலாறு
தொகு- 17ஆம் நூற்றாண்டில் மறைமாவட்டத்தின் பாதுகாவலரான புனித அருளானந்தர், இயேசு சபை மறைபரப்பு பணியாளராக சிவகங்கை பகுதிக்கு வந்து ஆலயங்களை நிறுவினார். அவர் 1693 பிப்ரவரி 4ந்தேதி, ஓரியூரில் தலை வெட்டப்பட்டு மறைசாட்சியாக இறந்தார்.
- ஜூலை 25, 1987: மதுரை உயர்மறைமாவட்டத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு, ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ் தலைமையில் சிவகங்கை மறைமாவட்டம் உருவாக்கப்பட்டது.
- 2007ஆம் ஆண்டின்படி, 62 பங்குதளங்களும், 734 மறைபரப்பு பணி மையங்களும், மேலும் பல கல்வி நிறுவனங்களும் உள்ளன. 107 மறைமாவட்ட குருக்களும், 19 துறவற சபை குருக்களும், 350க்கும் மேற்பட்ட துறவறத்தாரும் உள்ளனர்.
தலைமை ஆயர்கள்
தொகு- சிவகங்கை மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
- ஆயர். லூர்து ஆனந்தம் (2023 முதல்...)
- ஆயர் ஜெபமாலை சூசை மாணிக்கம் (2005 - 2020)
- ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ் (1987 - 2005)
மறைமாவட்ட அருள் பணிக்குழுக்கள்
தொகு- விவிலியம்
- திருவழிபாடு
- மறைக்கல்வி
- நற்செய்தி அறிவிப்பு
- அன்பியம்
- அழைத்தல்
- சமூக நீதி
- கிறித்தவ ஒன்றிப்பு
- பல்சமய உரையாடல்
- குடும்பம்
- கல்வி
- சமூகத் தொடர்பு
- நலவாழ்வு
- சமூகச் சேவை
- சிறார்
- இளைஞர்
- பெண்கள்
- தொழிலாளர்
- தலித்
- பொதுநிலையினர்
- துறவியர்
பக்தசபைகளும் இயக்கங்களும
தொகு- பாலர் சபை
- சிறுவழி இயக்கம்
- இளம் கிறித்தவ மாணவர் இயக்கம்
- இளைஞர் இயக்கம்
- பெண்கள் இயக்கம்
- குடும்பநல இயக்கம்இளம் கிறித்தவ மறுமலர்ச்சி இயக்கம்
- கத்தோலிக்க சங்கம்
- கிறித்தவ வாழ்வு சமூகம்
- மரியாயின் சேனை
- வின்சென்ட் தே பவுல் சங்கம்