சிவகிரி, கருநாடகம்

பிஜாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு இடம்

சிவகிரி (Shivagiri) என்பது 85 அடி (26 மீட்டர்) உயரம் கட்டப்பட்ட சிவன் சிலை ஆகும். இது டி. கே. பாட்டீல் பனகட்டி அறக்கட்டளையால் (நிறுவன உறுப்பினர் பசன்ட்குமார் பாட்டீல்) கட்டபட்டது. இச்சிலை இந்தியாவின், கர்நாடகத்தின், பிஜாப்பூர் நகரில், சிந்தகி சாலையில் அமைந்துள்ளது. இது மெல்ல மெல்ல ஒரு புனித யாத்திரை தலமாகவும், பிஜப்பூரில் அதிகம் பார்வையிடப்பட்ட சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும் மாறி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி அன்று, கோவிலுக்கு 150,000 பக்தர்கள் வருகை தருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பசந்த்குமார் பாட்டீல், அவரது தந்தையின் நினைவாக, அவரது சொந்த ஊரான பிஜாப்பூரில் இதை கட்டினார்.

சிவகிரி
சிவகிரி
உலகின் நான்காவது உயரமான சிவன் சிலை
உலகின் நான்காவது உயரமான சிவன் சிலை
சிவகிரி is located in கருநாடகம்
சிவகிரி
சிவகிரி
கருநாடகத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 16°48′N 75°43′E / 16.80°N 75.72°E / 16.80; 75.72
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பீசப்பூர்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாககன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
தொலைபேசி குறியீடு08382
வாகனப் பதிவுKA-28

1,500 டன் எடையுள்ள இந்த சிவபெருமானின் சிலை, இந்தியாவின் இரண்டாவது பெரிய சிவபெருமானின் இருந்த கோலச் சிலையாகக் கருதப்படுகிறது. இது சிமோகாவைச் சேர்ந்த சிற்பிகளால் 13 மாதங்களுக்கும் மேலான காலத்தில் உருவாக்கப்பட்டது. இதன் கட்டுமான வடிவமைப்பானது பெங்களூர் கட்டிடக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டது. இந்த சிவன் சிலை சீமைக்காரை, எஃகு ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கபட்டது. சிலைக்கு கீழே ஒரு சிறிய சிவலிங்கம் வைக்கப்பட்டுள்ளது. மேலும், சிவன் தொடர்பான தொன்மக் கதைகளை பக்தர்கள் அறிந்துகொள்ள ஏதுவாக கோயிலின் உள்சுவரில் கன்னட மொழியில் "சிவ சரிதம்" பொறிக்கப்படும். அறக்கட்டளை இதை ஒரு பெரிய புனித யாத்திரை மையமாக மாற்ற விரும்புகிறது.

கீழே கோயில் கொண்ட சிவன் சிலை

சிலை தொடர்பான தொடர் பணிகளுக்கு அறக்கட்டளையானது பொதுமக்களின் பங்களிப்பை எதிர்பார்க்கப்படுகிறது. 18-ஏக்கர் (7.3 ha) பரந்த வளாகத்தில் பசந்த் வனா எனப் பெயரிடப்பட்ட முதியோர் இல்லம் அமைக்க திட்டமிடபட்டுள்ளது. அறங்காவலர்களாக உள்ள ஐந்து சகோதரர்களில் ஒருவர், தி இந்து செய்தித்தாளிடம், துவக்கத்தில் முதியோர் இல்லத்தில் 52 பேருக்கு இடமிருக்கும் என்றும். பிறகு இடங்கள் படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று கூறினார். இதில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இது நிறைவேறியவுடன், அறக்கட்டளையானது பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த சிறந்த மாணவர்களுக்காக இலவச உறைவிடப் பள்ளியை நிறுவும் என்றார்.

பசந்த்குமார் பாட்டீல் அவர்களின் தாயார் துளசிபாயை பிப்ரவரி 26 அன்று தங்கத்தால் துலாபாரம் போட திட்டமிட்டுள்ளார் . அவர் 55 கிலோகிராம் எடையுள்ளதால் அந்த எடையுள்ள தங்கத்தின் மதிப்பு ரூ. 4.5 கோடி ஆகும். இந்த பணம் வங்கியில் வைப்புத் தொகையாக செய்யப்பட்டு அதிலிருந்து வரும் வட்டிப் பணம் இது தொடர்புடைய தொண்டு பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகிரி,_கருநாடகம்&oldid=4108696" இலிருந்து மீள்விக்கப்பட்டது