சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி

இராமநாதபுரம் சமஸ்தான மன்னர்

சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி (ஆட்சியில் அமர்ந்த ஆண்டு 1740 ) என்பவர் இராமநாதபுரம் சமஸ்தான மன்னராவார். இவர் குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி மன்னரையடுத்து சேதுபதி மன்னரானார். இவர் குமார முத்து விஜய ரகுநாத சேதுபதியின் மகன் ஆவார்.

கி.பி.1740ல் பதவியேற்ற இவரது ஆட்சி காலத்தில் தஞ்சை மராத்தியர் படையெடுப்புகள் நடந்தன. இப்படை எடுப்புகளை சேதுபதியின் தளவாய் வெள்ளையன் சேர்வைக்காரர் படுதோல்வி அடையச் செய்தார்.

கொடைகள்தொகு

இந்த மன்னர் சமயப் பொறை மிக்கவராக இருந்தார். இவர் இசுலாமிய மக்களது பள்ளிவாசல்ளுக்கும், தர்காக்களுக்கும் பல நிலக்கொடைகளை வழங்கினார். அவைகளில் குறிப்பிடத்தக்கவை ஏர்வாடி, இராமேசுவரம், இராமநாதபுரம், கீழக்கரை ஆகிய ஊர்களில் உள்ள இசுலாமிய தலங்கள் ஆகும்.

இவருக்குப் பின்னர் ஆண்டவர்கள்தொகு

சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதிக்கு ஆண்வாரிசு இல்லாததால் குமார முத்து விஜய ரகுநாத சேதுபதியின் உடன் பிறந்த சகோதரரின் மகனான இராக்கத் தேவரைத் தளவாய் வெள்ளையன் சேர்வைக்காரர் சேதுபதியாக நியமனம் செய்தார். இந்த மன்னர் திறமையற்றவராக இருந்ததால் தளவாய் இவரைப் பதவி நீக்கம் செய்துவிட்டு, சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதியின் அத்தையின் பேரனாகிய செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதியை கி.பி.1748ல் சேதுபதி மன்னராக்கினார்.[1]

மேற்கோள்கள்தொகு

  1. சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி (2003). சேதுபதி மன்னர் வரலாறு. இராமநாதபுரம்: சர்மிளா பதிப்பகம். பக். 57.