சிவனிடம் உபதேசம் பெற்ற குருநாதர்கள்
சிவபெருமானிடம் உபதேசம் பெற்ற எட்டு குருமார்கள் சைவ சமயத்தின் குரு பாரம்பரியத்தினைத் தொடங்கியவர்கள் ஆவார்கள். [1]
சைவ சமயத்தில் குரு பாரம்பரியம் என்று சொல்லப்படுவது சிவபெருமானிடம் உபதேசம் பெற்று குருவானவர்களின் பரம்பரையாகும். குருவிடமிருந்து கற்ற சீடர்களும், அவர்கள் கற்பித்தவர்களும் கொண்ட பாரம்பரியமாகும்.
இந்த குரு பாரம்பரியம் சிவபெருமானிடமிருந்து தொடங்குகிறது. சிவபெருமானிடமிருந்து நேரடியாக உபதேசம் பெற்றவர்கள் எட்டு குருநாதர்களாவார்கள். இவர்களைப் பற்றி திருமூலரின் திருமந்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின் நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர் என்றிவர் என்னோடு எண் மரும் ஆகும்".[2]
இதில் என்னோடு என்பது திருமூலரைக் குறிப்பதுவாகும்.
நந்திகள் நால்வர்
காண்க
தொகுஉசாத்துணை நூல்கள்
தொகு- துரை இராஜாராம், திருமூலர் வாழ்வும் வாக்கும், நர்மதா பதிப்பகம்